கவுன்சிலிங் சைக்காலஜிஸ்ட் திருமதி. ஸ்வாதி ப்ரியாவின் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் சொல்லும் உரை அருமை. இத்தனை விஷயங்களா எனும் விழிப்புணர்வை விதைக்கும் டாகுமெண்ட்ரி சிறப்பு. சுமிதா ரமேஷ்Reviewer is a Storyteller, Orator and VJ
என் தெருவுக்கு வளையல்காரன் வருவான். அவனிடம் வளையல் போட்டுக்கொள்ளும்போது ஒருபோதும் நான் அவனை ஆணாக எண்ணியதில்லை. அப்படி வாஞ்சையோடு அவன் வளையல் போடுவான். இப்போதெல்லாம் அவன் என் தெருவுக்கு வருவதே இல்லை. அந்த மாதிரி உங்களுடைய கவிதைகளும் வாட்ஸப்பில் வருவதே இல்லை.என்னுடைய #ப்ரியம் என்பது கவிதைகள் குறித்து பர்வின் சுல்தானா!ஒவ்வொரு புதன் கிழமையும் நான் #ப்ரியம் என்பது கவிதைகள் எழுதுவேன். அவற்றை வாட்ஸப்பில் பர்வின் சுல்தானா உள்ளிட்ட நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு…
நமது இந்தியாவை பாரத மாதா என்று ஒரு தாய்க்கு நிகராக நாம் கூறுகிறோம். அந்த பாரத மாதாவின் குரலாக இருந்தவர்தான் லதா மங்கேஷ்கர். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் எனும் “இசைக் குயில்” செம் மொழியான தமிழ் மொழியிலும் பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் என்ற பெயரை உச்சரித்ததுமே தமிழ் திரை இசை இரசிகர்களின் மனதில் வளையோசை கல கல கலவென என்கிற இளையராஜாவின் கீதம் ஒலிக்கத் துவங்கிவிடும்.…
ஜெய் பீம் சாதனை! ஆஸ்கர் (2022) விருதுக்குப் போட்டியிடும் படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது ஜெய் பீம். ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பது தமிழ் சினிமா இரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. குறிப்பாக சூர்யா இரசிகர்கள் இப்போதே கொண்டாடடத் துவங்கிவிட்டார்கள். அதற்கு காரணமும் இருக்கிறது. கடந்த வருடம் சூரரைப் போற்று படமும் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. அதனால் இரட்டை மகிழ்ச்சியில் சூர்யா இரசிகர்கள்…
ஐஸ்வர்யா - தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது. திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ள பொது மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் செய்தியை வெளியிடுவார்கள். அது இயல்புதான். ஆனால் அந்தப் பிரபலங்களுக்கு நேரடியாக தொடர்பே இல்லாதவர்களை வைத்துக் கொண்டு, மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்வு பற்றி…
என் அப்பா ஐ.எஸ்.ஆருக்கு டைரி எழுதுகிற பழக்கம் இருந்தது. அதில் அவர் நடிக்கும் நாடகம், சினிமா, சூட்டிங் மற்றும் அன்றன்று நடந்த சம்பவங்களை சுருக்கமாக எழுதியிருப்பார். ஏதோ ஒரு பக்கத்தில் இயக்குநர் ஸ்ரீதர் பற்றி எழுதியிருந்தார். ஓ மஞ்சு படப்பிடிப்பாக இருக்கலாம். செட்டில் கவனிக்க முடியாத தூரத்தில் இருக்கும் துணை நடிகர்களைக் கூட ஸ்ரீதர் கவனித்தார். அவர்களின் ஆக்ஷன், ரியாக்ஷன்களை சரி செய்தார் என்று வியப்பாக எழுதியிருந்தார். ஓ மஞ்சு…