Log in

Register



Rate this item
(0 votes)
சென்னையில ஒரு வாரத்துக்கு முன்னாடியே மார்கழிக்கு லீவு கொடுத்துட்டாங்க போலருக்கு. அது எங்கேயோ மலையேறிடுச்சு. அதனால் இன்று அதிகாலை போகி சம்பிரதாயங்களின் போது குளிர் இல்லை, குப்பையும் குறைவாகத்தான் இருந்தது. அதனால் வருடா வருடம் எடுக்கும் போகி போட்டோவே இந்த முறை மறந்துவிட்டது. ஏழு தீக்குச்சிகள் சீறி அணைந்தபின்னும் திடீர் மழையில் நனைந்த பாயும், பழைய அட்டைப்பெட்டிகளும், காலண்டர்களும், எரிவதற்கு அடம்பிடித்தன. கசிந்த புகைக்கு நடுவில் நான் சலித்துக் கொண்டபோது…
Rate this item
(0 votes)
வாருங்கள் படிப்போம் என்கிற வாட்சப் (இன்னான்ற) குழுவில் என்னை கொஞ்சம் கொஞ்சமாக இலக்கிய ஆர்வலனாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மானே, தேனே என கோடிட்ட இடங்களை நிரப்புவது எனக்கு எளிது. ஆனால் திடீரென்று மீண்டும் கவிதை, கிவிதை எழுதிவிடுவேனோ என பயமாக இருக்கிறது. எதற்கும் ரிவர்ஸ் மெட்டஃபர் அது இது என்று ஆங்கில பிரயோகங்களை தயாராக வைத்துக்கொள்கிறேன். என்னய்யா எழுதியிருக்க என்று கேட்டால் தப்பிக்க உதவும். குழுவில் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள்…
Rate this item
(0 votes)
பாமா விஜயம் படத்தில் எங்கள் அப்பாவுக்கு ஐ.எஸ்.ஆருக்கு நல்ல பெயர் கிடைக்க காரணம் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்தான். படம் வெளியானபோது திருடனாக நடித்த காட்சிக்கு எக்கச்சக்க வரவேற்பு. கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளும் என் அப்பா ஐ.எஸ்.ஆரை பாராட்டி விமர்சனம் எழுதின. இத்தனைக்கும் அவர் நடித்தது ஒரே ஒரு காட்சிதான். இன்று கூட என் அப்பா நடிப்பில் சிலருக்கு உடனே ஞாபகம் வரும் காட்சி, பாமா விஜயம் காட்சிதான். பாமா விஜயம் படத்தின்…
Rate this item
(0 votes)
ஒரு மாணவன் சரியா பரிட்சை எழுதலன்னா, அடுத்த தடவை இன்னும் நல்லா படிச்சு எழுதுன்னு சொல்லலாம். அதை விட்டு உனக்கெல்லாம் எதுக்குடா பள்ளிக்கூடம் என்று திட்டினால் அந்த மாணவன் என்ன ஆவான். அவன் ஆரம்பிக்கும்போதே தோற்கடிக்கப்படுவான் அதுதான் ஒரு இயக்குநருக்கு நடக்கிறது. படம்பிடிக்கவில்லை என்றால் சுட்டிக்காட்டலாம், அடுத்த படம் நன்றாக எடுங்கள் என்று சொல்லலாம். ஆனால் உனக்கெல்லாம் எதற்கு சினிமா என்பது போல கடுமையாக விமர்சனம் செய்யாதீர்கள். அவன் எவ்வளவு…
Rate this item
(0 votes)
ஏ.ஆர்.இரகுமான் இசையமைத்துள்ள கலாட்டா கல்யாணம் (#AtrangiRe) படத்தில் ரோஹிணி ஒரு பாடல் எழுதியுள்ளார். பலரும் கவனிக்க மறந்துவிட்டோம். அவரைப் போன்ற சில பெண் பாடலாசிரியர்களை #CinemaTicket இணையதளம் பட்டியலிட்டுள்ளது. எனக்குப் பிடித்த தமயந்தியும், ரோஹிணியும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். வேறு யாராவது இந்தப் பட்டியலில் சேர்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்களா? ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
Rate this item
(0 votes)
சித் ஸ்ரீராம் ஏன் விமர்சிக்கப்படுகிறார்? இதற்கான பதில் ஏன் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலுக்கு உருகுகிறோம் என்பதில் இருக்கிறது. சில திரை இசைப் பாடல்களுக்கு, சினிமாவையும் தாண்டி நிலைத்து நிற்கும் Cult Status வந்துவிடும். உள்ளத்தில் நல்ல உள்ளம் அப்படி ஒரு பாடல். பாடலை பாடுபவர், இசைப்பவர், இரசிப்பவர் என அனைவரையும் ஒரு புள்ளியில் இணைத்து நெகிழ வைக்கும் தன்மை இந்தப் பாடலுக்கு உண்டு. சித்ஸ்ரீராமும் அப்படி நெகிழ்ந்து போன…
Page 2 of 5

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30