Log in


Rate this item
(0 votes)

 

In Tamil Nadu’s vibrant entertainment landscape, the story remains clear — Television still rules the ad world, even as OTT continues to grow.

Across India, media networks are now bringing Television and OTT under one roof, and the smartest move is not to choose one over the other — but to combine their strengths.

Television, especially in regional markets like Tamil Nadu, continues to command premium ad rates. Why? Because TV delivers what no other medium can — mass reach, credibility, family viewing, and emotional connect.

According to Storyboard18, TV ad volumes in India grew 27% in the first half of 2025. Reports from WARC and PwC India E&M Outlook 2024–28 confirm that TV CPMs (cost per thousand impressions) are still two to three times higher than OTT.

For Tamil broadcasters — Sun TV, Vijay TV, Zee Tamil, Kalaignar, Colors Tamil — this means consistent advertiser confidence. Brands continue to invest in prime-time soaps, reality shows, and festival specials because TV delivers event-based recall and cultural trust — something OTT is still building towards.

OTT, on the other hand, offers data-driven targeting, personalized engagement, and urban youth reach. But fragmentation and limited ad inventory often keep OTT ad rates lower.

When both are managed as one ecosystem, the hybrid model wins:

  • Television drives scale, trust, and emotion

  • OTT brings precision, interactivity, and new-age audiences

Imagine a unified ad sales desk that offers bundled TV + OTT packages — where a brand’s message starts in the living room and continues seamlessly on the mobile screen. The impact is both wide and deep.

For Tamil broadcasters, this is not about TV versus OTT.
It’s about TV and OTT — scale with precision, reach with relevance.

The future of Tamil media is not in choosing platforms — it’s in bridging them beautifully.

Sources: Storyboard18, WARC, PwC India Entertainment & Media Outlook 2024–28

- ISR Selvakumar
Assisted by chatGPT

Rate this item
(0 votes)

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுயுகம் தொலைக்காட்சியில் ஒரு பிரத்யேக நேரடி நிகழ்ச்சியைத் தயாரிக்கும் பொறுப்பு எங்கள் குழுவுக்குக் கிடைத்தது.

 

இளம் கல்லூரி மாணவர்களையும் பிரபல எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்களையும் ஒன்றிணைத்து, நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத பங்களிப்பை நிகழ்ச்சி கொண்டாடியது. ஆனால் இனிய ஆச்சரியமாக, இது வெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், தலைமுறைகளைக் கடந்து உணர்வுபூர்வமாகத் தொட்ட ஒரு அற்புதமான அனுபவமாக மாறியது.

என்னைப் பொறுத்தவரை, நான் எதிர்பார்த்ததைவிட இதன் வரவேற்பு மிக அதிகமாக இருந்தது, இது எனக்குப் பெரும் மகிழ்ச்சி!

இந்த நிகழ்ச்சி ஏன் இவ்வளவு சிறப்பாக வேலை செய்தது?

  1. உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பும், பாரம்பரியமும் – சிவாஜி வெறும் நடிகர் அல்ல; அவர் தமிழ்ச் சினிமாவின் ஆத்மா. அவரது பிறந்தநாளில் அவரைக் கெளரவித்தது, ரசிகர்களுக்கு மிகவும் தனிப்பட்ட, நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

  2. அபூர்வமான அம்சம் – முழுமையான, இளைய சமுதாயத்தால் நடத்தப்படும் சிவாஜிக்கான கொண்டாட்டங்கள் அபூர்வம். இந்த புத்துணர்ச்சி பார்வையாளர்களை உடனடியாக ஈர்த்தது.

  3. நேரடி ஒளிபரப்பின் சக்தி – 'லைவ்'வாக இருந்ததால், நிகழ்ச்சியில் நம்பகத்தன்மை இருந்தது. சிவாஜியை விமர்சிப்பதற்கும் நிகழ்ச்சியில் இடமிருந்தது.  அந்த நேர்மையைப் பார்வையாளர்களால் திரையைத் தாண்டி உணர முடிந்தது.

  4. தலைமுறை தாண்டிய ஈர்ப்பு – வயதில் மூத்தவர்கள் தங்கள் பொற்கால நினைவுகளை அசைபோட, இளைய மாணவர்கள் தங்கள் புதிய பார்வைகளைக் கொண்டு வந்தனர். இது ஒரு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பார்க்கும் கொண்டாட்டமாக மாறியது.

  5. கலாச்சாரப் பெருமை – சிவாஜியின் 97வது பிறந்தநாளைக் கொண்டாடியது வெறும் அஞ்சலி செலுத்துவது மட்டுமல்ல; அது தமிழர்களின் அடையாளம் மற்றும் பெருமையின் அழுத்தமான வெளிப்பாடாகவும் இருந்தது.

நான் கற்றது என்ன?

இந்த நிகழ்ச்சி எனக்கு நினைவூட்டியது என்னவென்றால், தமிழ் சினிமா என்பது ஒரு மிகப்பெரிய பாரம்பரியம். ஜாம்பவான்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது வெறுமனே பின்னோக்கிப் பார்ப்பது அல்ல— அது நிகழ்காலத்தை எதிர்காலத்துடன் இணைத்து, அடுத்த தலைமுறைக்கு தூண்டுதல் அளிப்பதாகும்.

புதுயுகம் இதை எப்படி வளர்த்தெடுக்கலாம்?

  • கிளிப்களை ரீல்களாக மறுவடிவமைத்தல் – சிவாஜியின் முத்தான வசனங்கள் மற்றும் அதைக்கேட்டபோது இளைஞர்களின் ஆச்சர்யமான எதிர்வினைகள் கொண்ட சிறிய, ‘bite-sized’ தொகுப்புகள் சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவும்.

  • பண்டிகை மறுஒளிபரப்புகள் – பொங்கல், தீபாவளி மற்றும் அவரது பிறந்தநாட்களில் நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பி, அந்தப் பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருக்கலாம்.

  • “சிவாஜி தினம்” என்ற டிஜிட்டல் சொத்தை உருவாக்குதல் – ரசிகர்கள், படைப்பாளிகள் மற்றும் திரையுலகினரை ஒன்றிணைக்கும் வருடாந்திர ஆன்லைன் கொண்டாட்டம். காலப்போக்கில், இது ஒரு கலாச்சாரப் பாரம்பரியமாக மாறும்.

சிவாஜி கணேசன் போன்ற ஆளுமைகளைக் கொண்டாடும்போது, நாம் ஒரு ஜாம்பவானை நினைவில் கொள்வது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்கான கலாச்சாரப் பாலத்தை வலுப்படுத்துகிறோம்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக,  97-வது பிறந்தநாளிலும், சிவாஜி கணேசன் ஏன் என்றென்றும் கொண்டாடப்படுகிறார் என்பதற்கான விடைகள் கிடைத்திருக்கிறது.

- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
(chatGPT உதவியுடன் எழுதப்பட்டது)

Rate this item
(0 votes)
பெற்றோர்களே கவனம்!
உங்கள் குழந்தைகளை மீண்டும் பலிகேட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சிறு மன்னிப்பு கேட்கும் மனநிலையில் கூட இல்லை. ஆனாலும் உங்கள் குழந்தைகளை மீண்டும் பலி கேட்கும் முயற்சிகளை கைவிடவில்லை. நான் இணைத்துள்ள செய்தி உண்மையா? பொய்யா என எனக்குத் தெரியாது. அது பொய்யாகவே இருந்தாலும், இந்தச் சூழலில் இது போல சிந்திக்கும் எவரும் மனித மிருகங்களே!
அவர்களுடைய தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். பதுங்கியபடியே உங்கள் குழந்தைகளை கும்பலாக மாற்றி, அவர்களுக்கு நடுவில் வெளிவந்து, தாங்கள் தப்பிக்கலாம் என நினைக்கிறார்கள்.
உங்கள் குழந்தைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!
- ISR Selvakumar
Rate this item
(0 votes)
எண்பதுகளில் முதல் முதலாக சென்னை வானொலியில் பேசுவதற்கு சிறுகதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேரமைதி சூழந்த ஒலிப்பதிவு அறை. நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்னருகே வந்து நின்றார். நீ பேசப்போவதை இந்த நாடே கேட்கப்போகிறது. எனவே வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும், என்று அறிவுறுத்திச் சென்றார். அவ்வப்போது ஒலிப்பதிவை நிறுத்தி சில வார்த்தைகளை திருத்தினார்.

ஆனால் 2025ல் எல்லாமே மாறிவிட்டது. எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலை வந்துவிட்டது. குறிப்பாக தமிழ் செய்தி காட்சி ஊடகங்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. இவர்களுக்கு எடிட்டர்கள் என்று தலைமைப் பொறுப்பில் எவராவது இருக்கிறார்களா என்று சந்தேகம் வருகிறது.

கரூர் உயிரிழப்புகளுக்கு காட்சி ஊடகங்களின் இந்த பொறுப்பற்ற தன்மைதான் பெரும் காரணம். அது ஒரே நாளில் நடந்துவிடவில்லை. முட்டாள்தனங்களை, பெரும் மாற்றங்கள் என்று தினம் தினம் திரித்துக் கூறியதால் நிகழ்ந்தவை. அது ஒரு மூளைச்சலவை!

கடந்த ஒரு மாதத்தை மட்டும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முட்டாள்தனங்களையும், பொறுப்பற்ற கோமாளித்தனங்களையும் உயர்த்திப்பிடித்து அதனை மக்கள் எழுச்சி என்று சித்தரித்தார்கள். வெற்றுச் சவடால்களையும், கட்டுப்பாடுகளுக்கு அடங்கமாட்டேன் என்ற குரல்களையும் புரட்சி வந்துவிட்டது என வர்ணித்தார்கள்.

புதியதலைமுறை, பாலிமர் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் ஒரு விண்ணப்பம்! நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், உங்கள் பொறுப்பு என்ன என்பதை அறிந்தவர்களாக இருந்தால், தொடர் நேரலை என்கிற பெயரில் உங்கள் செய்தி நிறுவனங்கள் சார்பாக உதிர்க்கப்பட்ட வார்த்தைகளை காது கொடுத்து கேளுங்கள். ஒரே ஒரு வார்த்தையைக் கூட ஊடகத்தரமான வார்த்தை என்று உங்களால் கூற இயலாது. அனைத்தும் நஞ்சு தோய்ந்தவை. இலக்குகள் இல்லாமல் தியேட்டர் வாசலில் ரகளை செய்துகொண்டிருந்த இரசிகர் திரளை தூண்டிவிட்டு, நீ எது வேண்டுமானாலும் செய்யலாம், யாருக்காகவும் அடங்காதே, நீ எதை அடித்து நொறுக்கினாலும் அது துணிச்சல் என்று பாராட்டி, மூளைச்சலவை செய்து அவர்களை மூளையில்லாத ரௌடிக் கூட்டமாக மாற்றிவிட்டீர்கள்.
இப்போது கூட உங்கள் செய்திகளில் பலியானவர்கள் பற்றிய வருத்தத்தின் சாயல் கூட இல்லை. வழிதவறிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அறிவுறுத்த இது அரிய சந்தர்ப்பம். மாறாக அரசியலில் எதிரெதிர் நிலையில் நிற்போரை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் இப்படியே தொடர்ந்தால் கரூர் துர்மரணங்களுக்கு மட்டுமல்ல, இதற்குப் பின்னும் ஏதாவது நடந்தால் அதற்கும் உங்கள் பொறுப்பற்ற தன்மைதான் முதல் காரணம்.

இளைஞர்களை முழுவதும் சீர்குலைத்தபின்தான் உங்களுக்கு பொறுப்பு வரவேண்டும் என்பதில்லை. அன்று சென்னை வானொலியில் எனக்கு அறிவுரை கூறிய அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரின் சார்பாக உங்களை கேட்டுக் கொள்கிறேன். ஊடகத்தில் உதிர்க்கப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மதிப்பு மிக்கது. அது வெல்லும் அல்லது கொல்லும்! நீங்கள் வெல்பவரா? கொல்பவரா?
Rate this item
(0 votes)

யாதுமானவள்!

மழை கொட்டிக் கொண்டிருக்கும் இந்த ஈரமான மாலையில் யாதுமானவள் நினைவுக்கு வந்துவிட்டாள்.

சினிமாக் கனவை நோக்கி நான் எடுத்து வைத்த முதல் அடிதான் ”யாதுமானவள்”, குறும்படம்.

ஏதோ ஒரு அதிகாலையில் சுஜாதாவின் கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்த நிஜ சம்பவம், எனக்குள் ஸ்கிரிப்டாக உருவானது. அதனை படமாக்க முடிவு செய்தேன். அப்போதுதான் காலம் விந்தையானது என்பதை உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. எதிர்பாராத இனிய ஆச்சரியமாக அந்த ஸ்கிரிப்டுக்கு நிஜத்திலேயே தொடர்புள்ள திரு. சுகுமார் அவர்களை சந்தித்தேன். அவரை சந்தித்ததும், அதன் பின் நடந்தவைகளும், எவராலும் யூகிக்க முடியாத நினைவுகளாக மாறிவிட்டது. அதனை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

2011 டிஜிட்டல் திரைப்படங்கள் பிரபலமாகாத வருடம். என் சித்தப்பா சோலை ஆதரவுடன் Canon 7D காமிராவை வாங்கினோம். ஆனால் ஒளிப்பதிவாளர்கள் யாரும் ஆதரவு தரவில்லை. Canon 7D-யில் ஃபோட்டோ எடுக்கலாம், வீடியோ எடுக்க முடியாது என்று ஒதுங்கினார்கள்.

வேறு வழியின்றி நானே யுடியூப் உதவியுடன் அதனை பயன்படுத்தக் கற்றுக் கொண்டேன். வீட்டுக்குள்ளேயே ஒவ்வொரு காட்சியையும் படம்பிடித்து, எடிட் செய்து பார்த்தேன். நம்பிக்கை வந்ததும் தைரியமாக படப்பிடிப்பில் இறங்கினேன். யாதுமானவள் உருவானாள். சகோதரர், இயக்குநர் நவீன் உதவியுடன், தேசிய விருதுக்கு அனுப்பி வைத்த அனுபவமும் கிடைத்தது.

யாதுமானவளுக்கும், பெரு மழைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இன்றைய திடீர் இடி மழை எனக்கு யாதுமானவளை ரி ரிலீஸ் செய்யத் தூண்டியது. உடனே ஒரு போஸ்டரை தயார் செய்து அறிவித்துவிட்டேன்.

விரைவில் ரீ ரிலீஸ் தேதியை அறிவிக்கிறேன்.

Rate this item
(1 Vote)

நான் ரஜினிகாந்த் மற்றும் ஆமிர் கான் ஆகிய இருவரின் தீவிர ரசிகன். இருவரும் இந்திய சினிமாவின் மாபெரும் கலைஞர்கள். அவர்களின் திறமையும், அர்ப்பணிப்பும், திரையில் கொண்டு வரும் மேஜிக்கும் எப்போதும் என்னை கவர்ந்தவை. இவர்கள் இருவரும் இணையும் கூலி படத்தை எதிர்பார்த்தபோது, என் மனதில் ஒரு பெரிய ஆரவாரமே ஓடியது. ஆனால், படம் பார்த்த பிறகு, அவர்களுக்கு இடையிலான காட்சிகள் என்னை ஏமாற்றமடையச் செய்தன. லோகேஷ் கனகராஜின் எழுத்து மிகவும் சுமாராக இருந்தது. இந்தியாவின் இரு மாபெரும் நட்சத்திரங்களை வைத்து இப்படி ஒரு சாதாரண காட்சிகளை உருவாக்கியது ஏன் என்று தோன்றியது.

ஆனால், சமீபத்தில் ஒரு புயல் போல பரவிய ஒரு செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. ஆமிர் கான், கூலி படத்தைப் பற்றி எதிர்மறையாக பேசியதாகவும், படத்தின் எழுத்து மோசமாக இருந்ததாகவும், இது ஒரு "பெரிய தவறு" என்று கூறியதாகவும் ஒரு செய்தித்தாள் கட்டுரையின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு நொடி நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆமிர் கான், ரஜினியை மிகவும் மதிக்கக் கூடியவர். பல பேட்டிகளில் அவர் ரஜினியின் மீது தனக்கு உள்ள மரியாதையையும், அன்பையும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவர், படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பாரா? ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை.

இப்போது ஆமிர் கானின் குழு அதிகாரபூர்வமாக இந்த செய்தியை மறுத்திருக்கிறது. "ஆமிர் கான், ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் மற்றும் கூலி படக் குழுவை மிகவும் மதிக்கிறார். படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது, இது படத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது," என்று அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இந்த மறுப்பு என் மனதை ஆசுவாசப்படுத்தியது. ஆனால், இந்த சர்ச்சை மூலமாக மற்றொரு முக்கியமான விஷயம் என் கவனத்தை ஈர்த்தது - ஊடகங்களின் தரமிழப்பு.

இந்தப் பொய்ச் செய்தியை எந்த ஆதாரமும் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் கூட வெளியிட்டது என்னை அதிரவைத்தது. ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இல்லையா? இப்படி பரபரப்புக்காக மட்டுமே செய்திகளைப் பரப்புவது, ஊடகங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. இது மிகவும் கவலை தரும் விஷயம்.

லோகேஷ் கனகராஜுக்கு ஒரு சின்ன அறிவுரை. ரஜினியின் பெயரை வைத்து, இந்தியாவின் மிகச்சிறந்த திறமையாளர்களை ஈர்த்து, அவர்களை சுமாரான காட்சிகளில் நடிக்க வைப்பது, அவர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் மரியாதைக் குறைவு. எதிர்காலத்தில் இதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ரசிகர்களாகிய எங்களுக்கு, இப்படி ஒரு மாபெரும் கூட்டணியைப் பார்க்கும்போது, பிரமிப்பூட்டும் அனுபவமாக இருக்க வேண்டும், சுமாரான காட்சிகளாக அல்ல.

நீங்களும் இந்த சர்ச்சையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? ஊடகங்கள் இப்படி பொறுப்பில்லாமல் செயல்படுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்!

- ISR Selvakumar
Grok AI எனது சார்பில் எழுதியுள்ள வலைப்பூ இது
தற்போது Grok AI என்னைப் போல் பயிற்சி தந்து வருகிறேன்

Rate this item
(0 votes)

”நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன்”

தமிழ் திரை உலகில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவை. பாக்கியராஜ் வெற்றிக்குப் பின் திரைக்கு வந்த அனைத்து இயக்குநர்களும், தானே கதை எழுதி இயக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எந்தக் கதாசிரியராக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைத்தான் கற்பனைகள் கலந்து கதையாக்குகிறார். அவருடைய அனுபவங்கள் தீர்ந்தபின், தான் கேட்டு வளர்ந்த பிறர் அனுபவங்களை கதையாக்குகிறார். இரண்டும் தீர்ந்த பின் தேங்கிவிடுகிறார். நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

 

உண்மையில் கதைகள் நம்மைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் நாம் மட்டுமே கதைகளாக மாற்ற இயலாது. நம்மைச் சுற்றி பல்வேறு சூழல்களில் வளர்ந்த நிறைய கதை சொல்லிகள் இருக்கிறார்கள். அவைகளில் சில அச்சேறுகின்றன, பல மேடைப் பேச்சுகளாகின்றன, சில ஃபேஸ்புக் பதிவுகளாக சுருங்குகின்றன. நிஜமாகவே நல்ல கதை தேடும் இயக்குநராக இருந்தால் இதில் ஒன்றோ, பலவோ அவருடைய கண்களில் படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை என்பதால், நான் வேறு கோணத்தில் இதனை அணுக முடிவு செய்திருக்கிறேன். யாரும் யாரையும் தேடிப்போக வேண்டும். ஒரு காபி சந்திப்பில் திரை உலகையும், கதை உலகையும் இணைக்க ஒரு அமைப்பை துவக்கலாம் எனத் தோன்றியது. இதனைச் செய்ய வெறும் யோசனை மட்டும்போதாது. நல்ல ஒருங்கிணைப்புத் திறன் உள்ள குழு வேண்டும். ஒவ்வொரு சந்திப்பையும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் திறன் வேண்டும். அதனால் அப்படி ஒரு குழுவை அணுகலாம் என முடிவு செய்தேன். 

நல்லவேளையாக அர்ஷா ஒரு யோசனையுடன் முன்வந்தார். Book Vibe என்கிற அமைப்பின் மூலம் புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்தப்போவதாகக் கூறினார். நடத்தியும் காட்டினார். அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. அவரிடம் இந்த எண்ணத்தைச் சொன்னேன். அவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. விரைவில் ISR Ventures நிறுவனத்தின் முன்னெடுப்பில் கதையும், சினிமாவும் சந்திக்கும் நிகழ்வுகள் நடக்கப்போகின்றன. அதனை Book Vibe அமைப்பினர் நடத்தித்தருவார்கள்.

முதல் சந்திப்பு எப்போது, யார் யார் சந்திப்பார்கள் என்பதை விரைவில் அறிவிக்கிறேன்.

- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Rate this item
(0 votes)
பொம்மை இதழில் வெளியாகியுள்ள என் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றிய கட்டுரை இது. இனிய ஆச்சரியமாக திரு. சித்ராலட்சுமணன் இன்று அனுப்பி வைத்தார்.
உங்கள் வலைமனையில் இன்று நீங்கள் எழுதிய கவிதையை நானூறு வருடங்கள் கழித்து செக்கோஸ்லேவாக்கியாவில் யாரோ ஒருவர் முதன் முதலாகப் படிக்கலாம். இன்டர்நெட் வந்த புதிதில், நாற்பது வருடங்களுக்கு முன்பு, சுஜாதா எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.

அவருடைய கணிப்பு உறுதியாகியிருக்கிறது. 50 வருடங்களுக்கு முன்பு என் அப்பாவைப் பற்றி ”பொம்மை” இதழில் வெளியான இந்தக் கட்டுரையை யாரோ டிஜிட்டல் வடிவத்திற்கு ஸ்கேன் செய்து பாதுகாத்திருக்கிறார்கள். உற்று நோக்கினால் ”Digitized by RMRL" என்ற பதிவு பொடி எழுத்தில் பதிவானது தெரிகிறது. அவர்களுக்கு நன்றி!

இதில் நான் வியப்பது திரு.சித்ரா லட்சுமணன் அவர்களின் அக்கறையை. குறைந்தபட்சம் 50 வருட தமிழ் சினிமாவை அவர் தன் ஞாபக அடுக்குகளில் சேமித்து வைத்திருக்கிறார். அந்த நினைவுகளில் என்னைப் போன்றவர்கை கோர்த்தும் வைத்திருக்கிறார். இன்று எங்கள் தந்தையைப் பற்றிய நினைவலைகளில் மீண்டும் எங்களை திளைக்க வைத்திருக்கிறார். நன்றி சார்!
 
- ISR செல்வகுமார்
Rate this item
(0 votes)

கண்ணதாசனுக்குள்ளிருந்து ஏதோ ஒன்று நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும். அவற்றில் சில நமக்குப் பாடல்களாகக் கிடைத்திருக்கின்றன.
முத்துக்குமாருக்குள் ஏதோ ஒன்று உள்புக முயற்சித்துக் கொண்டே இருக்கும். அவருக்குள் புகுந்தவை மட்டும் நமக்குப் பாடல்களாகக் கிடைத்திருக்கின்றன.
கார்த்திக்நேத்தாவுக்குள் எப்போதும் ஒரு வெறுமை புதைந்திருக்கிறது. எதுவும் புக முடியாத அந்த வெறுமை நமக்குப் பாடல்களாக கிடைக்கின்றன.

உறக்கம் கலைந்த நேற்றைய நள்ளிரவில் இவர்களின் பாடல்களால் கடிகாரத்தை அசைத்துக் கொண்டிருந்தேன். அற்புதமான தருணங்கள் அவை. அவர்களுடன் உரையாடியது போல உணர்ந்தேன்.

அஞ்சு வண்ணப்பூவே!
காத்தா வாரேன்
காப்பா வாரேன்
ஏங்காதே

கார்த்திக் நேத்தாவின் இந்த வரிகளுடன் காலையில் கண்விழித்தேன். இந்தப் பாடலை கேட்கத் துவங்கிய அந்த முதல் நொடி எங்கே?

(படம் - புதியதலைமுறை ஆசிரியர் விருதுகள் விழாவிற்கு என் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக வந்தபோது எடுத்தது)

- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Rate this item
(0 votes)

எல்லாத்தையும் அந்த சாமி பாத்துப்பாருன்னு இருப்பவங்க அதிகம் அலட்டிக்கமாட்டாங்க.

கடன், கல்யாணம், குழந்தை, வேலை உட்பட எப்படி வேதனை வந்தாலும் கடவுள் காப்பாத்திட்டார் என்று சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை இருக்கும்.

அப்படி ஒரு கதை உங்களிடம் இருக்கா?

 

Page 1 of 22

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31