ஆயில் புல்லிங் என்கிற புதிய பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. பல்வலிக்கு மாத்திரையை விழுங்குவதற்கு பதில் ஆயில் புல்லிங் பலன் தருமென்று என் சித்தப்பா சொன்னார். அவருடைய நல்லெண்ணை வாக்கு பலித்துவிட்டது. பல்வலியைக் காணோம். தற்போது வாயில் நல்லெண்ணையை நிரப்பிக் கொண்டு, அதை வெளியேற்றும் வரையில், ஏதாவது புத்தகத்தைப் புரட்டும் புதிய உபரிப்பழக்கம் வந்துவிட்டது.
இன்றைய புரட்டல் கணையாழிக் கதைகள் (1995-2000) என்கிற சிறுகதைத் தொகுப்பு. என்றைக்கு வாங்கினேன் எனத் தெரியவில்லை. இன்றைக்குத்தான் சிக்கியது. அதில் ”ஆளில்லாச் சந்துகளில் மரணக் குரலின் நடமாட்டம்” என்கிற கதைதான் முதலில் கண்ணில் பட்டது. தமயந்தி எழுதியது. ஆனால் கதையின் பெயர் அதிகாலை புத்தக ஆர்வத்துக்கு பொருந்தவில்லை. எனவே வேறொரு கதைக்குத் தாவினேன்.
நள்ளிரவில் தூக்கம் வராமல் டீக்கடைக்குப் போகும் குமார், அங்கே கடைசி பஸ்ஸை தவறவிட்டுவிட்டு காத்திருக்கும், ஊர்க்கார பெண்ணைக் காண்கிறான். கண்ணாடி ஜாக்கெட், மல்லிகைப் பூ, நீண்ட ஜடை என அவளைப் பற்றிய வர்ணனை நாயகன் குமாருக்குள்ளும், வாசிக்கும் எனக்குள்ளும், அந்தப் பெண்ணைப் பற்றி, ஒரே மாதிரியான எண்ணங்களைத்தான் உருவாக்கியதா எனத் தெரியவில்லை.
ஆனால் அவள் குமாருடன் அவனுடைய வீட்டில் அன்றைய இரவு தங்கிக் கொள்ளட்டுமா எனக் கேட்கும்போது எனக்கு சுவாரசியம் அதிகமாகிவிட்டது. இந்த வரியில் இதை வாசிக்கும் உங்களுக்கும் சுவாரசியம் வந்திருக்கும். இருவரும் வீட்டுக்கு நடந்து போகும் சொற்ப தூரத்தில் அந்தப் பெண், பழைய முதலாளியின் பெண் என்பதும், தற்போது நொடித்துப் போயிருக்கிறாள் என்பதையும் கதை நமக்குச் சொல்லிவிடுகிறது.
அவள் சூடியிருந்த மல்லிகைவாசம் இருவரும் ஒன்றாக வீட்டுக்குள் நுழைந்த மறுவினாடி குமாருக்கும் எனக்கும் இரட்டிப்பாகிவிட்டது. அந்த மல்லிகைவாசமும், இரவில் தனியாக ஒரு பெண்ணின் அருகாமையும் தன்னை புரட்டிப் போட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் அவளுக்கு தன் அறையைக் கொடுத்துவிட்டு, விளக்கெறியும் வெளி அறையில் ஏதோ புத்தகத்தைப் புரட்டுகிறான். உறக்கம் வராமல் அவளும் தன் கணவன் தன்னை விட்டுப் போனதையும், வேறொரு பெண்ணுடன் வாழ்வதையும் அழுகையுடன் சொல்கிறாள்.
இறுதியில் உன்னைப் போல மனதில் களங்கம் இல்லாத ஒருவன் இருப்பதால்தான் நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் என்பாள். அத்துடன் கதை முடிகிறது. ”அவள் நல்லதொரு சகோதரியாய், தோழியாய் தெரிந்தாள்” என கடைசி வரி முடிகிறது.
கிட்டத்தட்ட இதே கருவில் ”சந்நியாசிகள்” என்றொரு சிறுகதை நான் எழுதியிருந்தேன். விகடனில் பிரசுரமானது. இதில் வரும் குமாருக்குப் பதில் அதில் சுரேஷ். பெயரில்லாத ஊர்காரப் பெண்ணுக்குப் பதில் அவனுடைய தோழி. இருவரும் தனியாக அவளுடைய வீட்டில் இருக்க நேர்கிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் டீன் ஏஜ் மனக்குழப்பங்கள் இப்படித்தான் கடைசி வரியில் முடிந்துவிடும். அதற்கு முந்தைய சில வரிகளில் அப்பெண்ணின் அண்ணன் வருவான். அவர்கள் தனியாக இருப்பதைப் பற்றி எந்த புருவ உயர்த்தலும் இல்லாமல் இயல்பாகப் பேசுவான். எந்த சந்தேகமும் இல்லாத அவனுடைய இயல்பு இவர்களுக்குத் தெளிவு தரும்.
இரண்டுமே இரு இளைஞர்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. அந்தப் பெண்களின் கோணத்திலிருந்து யாராவது இதே கதைகளை எழுதினால் அது இன்னும் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். அதை பெண்கள் மட்டுமே எழுத முடியும் என நினைக்கிறேன்.
சொல்ல மறந்துவிட்டேனே.. நான் வாசித்த கதாசிரியரின் பெயர் ”பாப்லோ அறிவுக்குயில்”, கதையின் பெயர் ”தோழமை என்பது…”
உங்க அனுபவத்திலிருந்து நீங்க சொல்லுங்க… தோழமை என்பது என்ன…?
புடவையிலும், மாடர்ன் டிரஸ்ஸிலும் யாஷிகா ஆனந்த் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.








அந்த ஒரு மாதம்:
சில நாட்களுக்கு முன்பு நானும் என் வகுப்பு மாணவர்களும் களஆய்விற்க்காக கீரனுர் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தோம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கு தங்கிருந்த அனுபவங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
என்னுடைய வாழ்வில் இந்த ஒரு மாதத்தை மறக்கவே முடியாத நாட்களாக இருந்தது.அந்த அளவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், என்னை நான் யாரென்று புரிந்துகொள்ள ஒரு உகந்த இடமாக இருந்தது. எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை அங்குதான் தெரிந்துகொண்டோம். எங்களுக்குள் என்னதான் சண்டை வந்தாலும், கொஞ்ச நேரம் தான் கோவமாக இருப்போம். அதன் பிறகு பேசி சிரித்து கொள்வோம். அங்கு சென்றிருந்தவர்கள் பெரும்பாலும் நகர் புறத்தில் வளர்த்தவர்களே.
ஆகையால், எங்களுக்கு கிராமத்து வாழ்க்கை புதிதாக இருந்தது. கிராமம் என்றாலே அழகுதான்.
அதில், நாங்கள் சென்றிருந்த கீரனுர் என்ற கிராமம் மிகவும் அழகா இருந்தது. ஆரம்பத்தில கிராமத்து வாழ்க்கை ஒத்துப்போகவில்லை என்றாலும், போகப்போக கிராமத்தின் சிறப்பை புரிந்துகொண்டோம். அதிகாலை சூரியன், பசுமையான மரங்கள், தூய்மையான காற்று, கலப்படம் இல்லாத தண்ணீர் இவையனைத்தையும் நாங்கள் ஒவ்வொருநாளும் அனுபவித்தோம்.
இது எங்களுக்கு புதியதாகவும், மறக்கமுடியாத நினைவாகவும் இருந்தது. அடுத்து கிராமத்தின் மக்களை பற்றி கண்டிப்பா சொல்லியாக வேண்டும். நகரத்து வாழ்க்கையில் பக்கத்துக்கு வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத காலகட்டத்தில், நாங்கள் கிராமத்துக்கு சென்றதுமே நாங்கள் வந்த செய்தி கிராமம் முழுவதுமே பரவி விட்டது. உடனே அவர்கள் எங்களை வித்தியாசமாக தான் பார்த்தார்கள்.
ஆனால், நாட்கள் போகப்போக எங்களிடம் மிகவும் பாசமாகவும், அன்பாகவும், யதார்த்தமாகவும், எந்தவித கள்ளங்கபடம் இல்லாமல் பழகினார்கள். எங்களை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார்கள்.
எங்களது ஆய்வு காலம் முடியும் நேரம் வந்ததும், மிகவும் வருத்தமாக இருந்தது, அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் ஆயிவை முடித்துக்கொண்டு வந்தோம்