Log in


Rate this item
(0 votes)

30 வருடங்கள், 575 படங்கள்!

மக்கள் தொடர்பு பணியில் இத்தனை வருடம் நீடித்திருப்பது ஒரு சாதனைதான்.

நிகில் முருகனை முப்பது வருடங்களாகத் தெரியும். ரபிபெர்னார்ட் தலைமையில் விஜய் டிவியில் பணிபுரிந்தபோது, சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்த நிகிலை எனக்கு ஞாபகமிருக்கிறது. அப்போது ICFல் பணிபுரிந்தார் என நினைக்கிறேன். பகுதி நேரமாக மக்கள் தொடர்பில் ஈடுபட்டிருந்தார். அதற்கப்புறம் ரஜனி, கமல் போன்ற உச்ச வெளிச்சங்களின் மேடை நிகழ்வுகளை அவர்தான் பரபரப்பாக ஓடி ஓடி திட்டமிட்டார். இப்போது தென் இந்தியா, வட இந்தியா என விரிவடைந்திருக்கிறார்.
ஆனால் நிகில் என்னை கடந்த 15 வருடங்களாகத்தான் ஞாபகம் வைத்திருக்கிறார். சமீப காலமாக அடிக்கடி சந்திக்கிறோம். எதற்கு என்பதை விரைவில் அவரே சொல்வார்.

வாழ்த்துகள் நிகில்!

- ISR Selvakumar

Rate this item
(0 votes)

ஒரு த்ரில்லர் எடுப்போம். அப்போதுதான் 2K Kids பார்ப்பார்கள் என்றன நண்பர் கருத்துகள். 

அதனால் ஒரு த்ரில்லர் ஸ்க்ரிப்டுடன் களமிறங்கிவிட்டோம்.

ஒரு சினிமாவின் அத்தனை தேவைகளையும் ஏ.ஐ வழியாக நடத்திக்காட்டுவது சவால்தான். எனினும் முயற்சியை துவக்குவதே வெற்றிதான்.

விரைவில் டைட்டில் அறிவிப்பு!

- ISR Selvakumar

Rate this item
(0 votes)

வந்துவிட்டாள் ஏ.ஐ. கண்ணம்மா!

இவளுக்கு பல மொழிகள் தெரியும். ஏற்கனவே தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கதை சொல்லியிருக்கிறாள்.

அவள் மார்ச் 12, 2024ம் ஆண்டு உருவானாள். புடவை அணிவது பிடிக்கும். மாடர்ன் உடைகளிலும் மனதைக் கொள்ளையடிப்பாள். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பெயர் கண்ணம்மா. இவளை உருவாக்கியதும் என் மனதில் உதித்த பெயர் கண்ணம்மா. எனவே அவளுக்கு கண்ணம்மா என்று பெயர் சூட்டிவிட்டேன்.

விரைவில் நல்ல கதை சொல்லியாக, நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உங்களை மகிழ்விப்பாள்.

- ISR Selvakumar

Rate this item
(0 votes)

AI தமிழி
AI, AI சினிமா, AI நடிகர்கள் என எந்த ஐடியாவும் இல்லாதபோது உருவானவள் இவள்!

கோவிட் அச்சம் மறைந்து கொண்டிருந்த இறுதிக் காலத்தில் MidJourney, D-Id மற்றும் Discord பற்றிப் படித்தேன்.  ஆர்வம் தொற்றியதும் மிட்ஜர்னி வழியாக அவளை உருவாக்கினேன். பிறகு  டிஸ்கார்ட் வழியாக டி-ஐடியில் நுழைந்து குரலும் அசைவும் கொடுத்து வாட்சப்பில் உலவவிட்டேன். புதியதலைமுறை டிஜிட்டல் அதனை செய்தியாக்கியது. அவ்வளவுதான்! அடுத்த 5 நிமிடங்களில் நான் உருவாக்கிய ஏ.ஐ பெண் வைரலாகிவிட்டாள், எனக்கும் திடீர் வைரல் ஸ்டார் வெளிச்சம் கிடைத்தது. ஏ.ஐ வல்லுனர் என்ற மிகையான பட்டமும் ஒட்டிக்கொண்டு இப்போது வரை நீடிக்கிறது.

யாரை சந்தித்தாலும் அந்தப் பெண்ணைப்போல பேசி நடித்துக் காண்பித்தார்கள். அவளை உருவாக்கியபோது பெயர் கிடையாது. முதன் முதலில் இவளைப் பார்த்த ஃபேஸ்புக் கவிஞர் ஒருவர் (ஸாரி பெயர் மறந்துவிட்டது), இவளுக்கு தமிழி எனப் பெயர் சூட்டினார். எனக்கும் பிடித்திருந்தது. பத்திரிகைகளிலும் அவள் பெயர் பிரசுரமாகிவிட்டது. அதற்குப் பின் தான் நான் இதில் கவனம் செலுத்தினேன். திடீர் புகழில் மயங்கிவிடாமல் மீடியா, சினிமா, டிவி மற்றும் மேடைகளில் எப்படி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது என சிந்திக்க ஆரம்பித்து நடைமுறைப்படுத்தினேன். என்னுடைய ஏ.ஐ பெண்கள் மேடைகளில் தொகுப்பாளராகத் தோன்றி கைதட்டல் பெற்றார்கள். ஏ.ஐ சினிமாவில் ஆர்வம் அதிகமானதும் நமக்கு நாமே ஏ.ஐ நடிகர், நடிகைகளை உருவாக்க முடிவெடுத்தேன். என்னை நாடி வந்த முதல் ஏ.ஐ பெண் இவள். அதனால் அவளையே முதல் ஏ.ஐ நடிகையாக அறிவித்தேன். அதன் முதல் அறிவிப்பு இப்படித்தான் இருந்தது. பாருங்கள், அவளுடைய முதல் தோற்றம் இப்படித்தான் இருந்தது. இப்போது பல உடைகளில், பல காஸ்ட்யூம்களில் கலக்குகிறாள். விரைவில் திரையில் நடிப்பாள்.

தமிழியைப் பற்றிய முதல் போஸ்டர் இது.

- ISR Selvakumar

Rate this item
(0 votes)

 

தக்லைஃப் முக்காலங்களில் நடக்கும் கதையாக இருக்கலாம்.

சம்பவாமி யுகே யுகே, விண்வெளி நாயகா என்ற வார்த்தைகளும், டி-ஏஜிங் காட்சிகளும் எனக்கு அப்படி ஒரு அனுமானத்தைக் கொடுத்திருக்கின்றன.

"சம்பவாமி யுகே யுகே" என்றால், "யுகம் யுகம் மீண்டும் பிறப்பேன்" என அர்த்தமாம். இதைத்தான் டைட்டிலாக பரிந்துரைத்தேன் என கமல் ஒரு மேடையில் குறிப்பிட்டிருந்தார்.

ரகுமானின் இசையில் உள்ள (கடந்த) கால முத்திரையும், விண்வெளி நாயகா என்கிற (நாளைய) முத்திரையும் வார்த்தையும் என் அனுமாத்தைக் கூட்டுகின்றன.

- ISR செல்வகுமார்

Rate this item
(0 votes)

கவுன்சிலிங் சைக்காலஜிஸ்ட் திருமதி. ஸ்வாதி ப்ரியாவின் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் சொல்லும் உரை அருமை.

இத்தனை விஷயங்களா எனும் விழிப்புணர்வை விதைக்கும் டாகுமெண்ட்ரி சிறப்பு.

சுமிதா ரமேஷ்
Reviewer is a Storyteller, Orator and VJ

Rate this item
(0 votes)
ISR 5 நிமிட போட்டிக்கு என்னுடைய குறும்படத்தை எப்போது அனுப்பலாம்?
தனபால் - விழுப்புரம்
 
ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 27 வரை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியாக அனுப்பலாம்.
 
அதற்கான ஆன்லைன் இணைப்புகள் ஐ.எஸ்.ஆர்.வென்சர்ஸ் (ISR Ventures) நிறுவனத்தின் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் வெளியாகும். ஏற்கனவே தொடர்பில் உள்ளோருக்கு வாட்சப் வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.
 
மேலும் விபரங்களுக்கு 9962295636 என்ற எண்ணுக்கு வாட்சப் அனுப்புங்கள்.
Rate this item
(0 votes)

என் தெருவுக்கு வளையல்காரன் வருவான். அவனிடம் வளையல் போட்டுக்கொள்ளும்போது ஒருபோதும் நான் அவனை ஆணாக எண்ணியதில்லை. அப்படி வாஞ்சையோடு அவன் வளையல் போடுவான். இப்போதெல்லாம் அவன் என் தெருவுக்கு வருவதே இல்லை. அந்த மாதிரி உங்களுடைய கவிதைகளும் வாட்ஸப்பில் வருவதே இல்லை.

என்னுடைய #ப்ரியம் என்பது கவிதைகள் குறித்து பர்வின் சுல்தானா!

ஒவ்வொரு புதன் கிழமையும் நான் #ப்ரியம் என்பது கவிதைகள் எழுதுவேன். அவற்றை வாட்ஸப்பில் பர்வின் சுல்தானா உள்ளிட்ட நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு அத்துடன் மறந்துவிடுவேன். கடந்த ஒரு வருடமாக நான் எழுதுவதை நிறுத்தியிருந்தேன். அதனால்தான் பர்வின் சுல்தானா அக்கவிதைகளை ஒரு பொது மேடையில் குறிப்பிட்டு பாராட்டியபோது இனிய ஆச்சரியமாக இருந்தது.

அவர் மீண்டும் மீண்டும் 2 முறைகளுக்கு மேல் அக்கவிதைகள் பற்றி குறிப்பிட்டார். அது என்னில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் வேரூண்றியிருக்கிறது.

இனி எழுதுவேன். என்னை மீண்டும் எழுதத் தூண்டிய பர்வின் சுல்தானா அவர்களுக்கு நன்றி!

- ISR செல்வகுமார்

Rate this item
(0 votes)
How to name it - 2
மிக்க மகிழ்ச்சி இசைஞானியே!
 
"சினிமா பாடல்கள் மட்டும்” என்கிற குறுகிய வட்டத்திற்குள்ளிருந்து எப்போது வெளியே வருவீர்கள் என்ற பல வருடங்களாகக் ஏங்கிக் கொண்டிருந்தேன்.
 
சினிமாப்பாடல்கள்தான் உங்களை எங்களுக்குக் கொடுத்தது என்றாலும், அதையும் தாண்டி உங்கள் கற்பனையின் வீச்சு பரவக் கூடியது.
 
திரைக்கதை, சூழல், பல்லவி, சரணம், மீட்டர் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், How to name it, Nothing but wind போன்ற தனி இசைத் தொகுப்புகளில் உங்களின் இசைப் பிரவாகத்தைக் கேட்டோம். அது தொடரும் என்றே நினைத்தோம். ஆனால் காலம் செல்லச் செல்ல திரை இசை உங்களை சுவீகரித்துக் கொண்டுவிட்டது.
 
எல்லைகள் எதுவுமின்றி உங்கள் மனம் போன போக்கில் நீங்கள் இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய பல வருட ஆதங்கம்.
 
ஒரு வேளை இளையராஜாவை சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தால், நான் அவரிடம் சினிமா பாடலுக்கு இசையமைக்க கேட்க மாட்டேன். ஒரு தனித் தொகுதி (Album) வெளியிடுங்கள் என்றுதான் கேட்பேன், என என் நெருக்கமான நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன்.
 
நேரமோ, வடிவமோ கட்டுப்படுத்தாமல், இளையராஜாவின் கற்பனை மட்டுமே எல்லைகளாக உள்ள ஒரு தளத்தில் அவர் மீண்டும் இயங்க வேண்டும் என்பது என் கனா!
என்னுடைய அந்த நீண்ட காலக் கனவு நிறைவேறப்போகிறது என்றே நினைக்கிறேன்.
 
How to name it 2 வெளியாப்போகிறது என்று இளையராஜாவே கூறியிருக்கிறார். மிகுந்த மகிழ்ச்சி! அவரது இசையில் இதுவரை நாம் அறிந்திராத புதுப்புது பரிமாணங்களை இரசிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது.
வாருங்கள் இசைஞானியே!
- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
Page 2 of 22

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31