”நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன்”
தமிழ் திரை உலகில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவை. பாக்கியராஜ் வெற்றிக்குப் பின் திரைக்கு வந்த அனைத்து இயக்குநர்களும், தானே கதை எழுதி இயக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எந்தக் கதாசிரியராக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைத்தான் கற்பனைகள் கலந்து கதையாக்குகிறார். அவருடைய அனுபவங்கள் தீர்ந்தபின், தான் கேட்டு வளர்ந்த பிறர் அனுபவங்களை கதையாக்குகிறார். இரண்டும் தீர்ந்த பின் தேங்கிவிடுகிறார். நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.
உண்மையில் கதைகள் நம்மைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் நாம் மட்டுமே கதைகளாக மாற்ற இயலாது. நம்மைச் சுற்றி பல்வேறு சூழல்களில் வளர்ந்த நிறைய கதை சொல்லிகள் இருக்கிறார்கள். அவைகளில் சில அச்சேறுகின்றன, பல மேடைப் பேச்சுகளாகின்றன, சில ஃபேஸ்புக் பதிவுகளாக சுருங்குகின்றன. நிஜமாகவே நல்ல கதை தேடும் இயக்குநராக இருந்தால் இதில் ஒன்றோ, பலவோ அவருடைய கண்களில் படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை என்பதால், நான் வேறு கோணத்தில் இதனை அணுக முடிவு செய்திருக்கிறேன். யாரும் யாரையும் தேடிப்போக வேண்டும். ஒரு காபி சந்திப்பில் திரை உலகையும், கதை உலகையும் இணைக்க ஒரு அமைப்பை துவக்கலாம் எனத் தோன்றியது. இதனைச் செய்ய வெறும் யோசனை மட்டும்போதாது. நல்ல ஒருங்கிணைப்புத் திறன் உள்ள குழு வேண்டும். ஒவ்வொரு சந்திப்பையும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் திறன் வேண்டும். அதனால் அப்படி ஒரு குழுவை அணுகலாம் என முடிவு செய்தேன்.
நல்லவேளையாக அர்ஷா ஒரு யோசனையுடன் முன்வந்தார். Book Vibe என்கிற அமைப்பின் மூலம் புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்தப்போவதாகக் கூறினார். நடத்தியும் காட்டினார். அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. அவரிடம் இந்த எண்ணத்தைச் சொன்னேன். அவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. விரைவில் ISR Ventures நிறுவனத்தின் முன்னெடுப்பில் கதையும், சினிமாவும் சந்திக்கும் நிகழ்வுகள் நடக்கப்போகின்றன. அதனை Book Vibe அமைப்பினர் நடத்தித்தருவார்கள்.
முதல் சந்திப்பு எப்போது, யார் யார் சந்திப்பார்கள் என்பதை விரைவில் அறிவிக்கிறேன்.
- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
மறைந்த திரைப்பட நடிகர் ISR பற்றி ஒரு இ-புத்தகம் வெளியாகவுள்ளது. ”ஐ.எஸ்.ஆர் ஒரு திரை மின்னல்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் ஐ.எஸ்.ஆர் பற்றி திரைப்பிரபலங்கள் கூறியுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பிரபலங்களின் கருத்துக்களுடன், ஐ.எஸ்.ஆரின் நண்பர்களும், அவர் வசித்த பகுதிகளில் அவருடன் பழகியவர்களும் கூறிய மிகச் சுவையான சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஐ.எஸ்.ஆர் காலத்தில் (1936-1991) வரை கிராமங்கள் எப்படி இருந்தன, மக்கள் நகரங்களுக்கு ஏன் வந்தார்கள், அப்போதைய திரையுலகம், அப்போதைய பழக்க வழக்கங்கள் உட்பட பல சமூக நிகழ்வுகளின் கண்ணாடியாக இப்புத்தகம் தயாராகி வருகிறது.
இது பற்றி அவருடைய மகன் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் கூறும்போது ”எங்கள் தந்தை ராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கநாதன் புத்தூர் என்கிற குக்கிராமத்தில் பிறந்து, சென்னை வந்து படித்து, நாடகம், சினிமாக்களில் நடிக்கும்போது, வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை, வளசரவாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் வசித்திருக்கிறார். அப்போது அவர் சந்தித்த சாதாரண மனிதர்களும், பிரபலங்களும் ஏராளம். தெருக்கூத்து காலத்திலிருந்து, மேடை நாடகம், சினிமா உட்பட டெலிவிஷன் சீரியல் வரை அவர் வாழ்ந்திருக்கிறார். எனவே அவரைப் பற்றிய பதிவு என்பது இந்த மாற்றங்களையும் குறிப்பதாக இருக்கும்.
அதனால் இப்புத்தகம் எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி மட்டுமல்லாமல், சமகாலத்தில் அவருடன் பணியாற்றியவர்கள், அக்கால வாழ்க்கை முறைகள் மற்றும் அதன் பின் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி அறிந்தவர்கள் யாரேனும் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். அவர்கள் கூறும் தகவல்களையும் சேர்த்து, இரு பாகங்களாக புத்தகம் விரைபில் வெளிவரும்.”, என்றார்.
ஐ.எஸ்.ஆர் ஒரு திரை மின்னல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் வெளியீடு திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடக்கும். அது பற்றிய அறிவிப்பு மார்ச் முதல்வாரத்தில் வெளியாகும் என்று ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கூறியுள்ளார்கள்.
எனவே இம்மாத இறுதி வரை ஐ.எஸ்.ஆர் பற்றிய எந்த தகவல் இருந்தாலும் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சலில் அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது 9962295636 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்வில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் உங்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்வார்கள்.
நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி!
நாகேசுக்கு டப்பிங் கொடுத்தவர்.
எத்தனையோ படங்களில் இவரை பார்த்திருப்பீர்கள். மீண்டும் கோகிலா படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்திருப்பாரே என்றால்... ஓ அவரா என்பீர்கள்.
எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆரின் நெருங்கிய நண்பர். அவருடன் கனிமுத்துப்பா, காசியாத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார். கஸ்டம்சில் பணிபுரிந்தபடியே திரைப்படங்களில் நடித்தார். மிகக் கெடுபிடியான ஆபிசர் என்பார்கள்.
நாகேஷ் பிஸியாக இருந்தபோது, பல படங்களில் நாகேஷிக்காக டப்பிங் குரல் கொடுத்தார். அதனால்தான் அவருக்கு அந்தப் பெயர் வந்தது.
தகவல் : https://antrukandamugam.wordpress.com/2016/05/05/krishnamoorthy-nagesh-krishnamoorthy/





