Log in


Rate this item
(0 votes)
MovieWud OTTயில் வித்தையடி நானுக்கு ரிலீஸ்!
 
தமிழ் திரையுலகம் மிகத்துரிதமாக மாற்றங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. MovieWud என்பது ஒரு மாற்றத்தின் அடையாளம். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி. செயலிகள் தமிழ் சினிமாவிற்கான கதவைத் திறந்துவிட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் மற்ற மொழிப்படங்கள், பெரிய நட்சத்திங்கள் இல்லாத தமிழ் படங்களுக்கு குறைவான வாய்ப்பு என்கிற குறைகள் உள்ளன.
 
இதுபோன்ற சூழல்கள்தான் மூவிவுட் போன்ற புதிய ஓடிடி செயலிகளுக்கு தூண்டுதல். தூர்தர்ஷன் கதவை இறுக்கமாக மூடியிருந்தபோது, சாமானியனும் தன் முகத்தை டிவியில் பார்க்க முடியும் என்கிற சூழலை சன்டிவி உண்டாக்கியது. அதன் மூலம் வேகமாக மக்களைச் சென்றடைந்தது. பின்னாளில் ஸ்டார் டிவி வந்தாலும் அதில் தமிழ் நிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால் சன் டிவியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
 
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சூழல் ஓடிடி உலகில் உண்டாக்கியிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற தளங்கள் இன்னும் எல்லோருக்குமானதாக மாறவில்லை. அவை மாறுவதற்குள் அந்த மாற்றத்தை மனதில் வைத்து எல்லோருக்குமான ஓடிடியாக MovieWud வந்துள்ளது. இதற்கும் போட்டியாக இன்னும் பல ஓடிடிகள் வரும்.
மாறிவரும் இந்தச் சூழலில் எங்கள் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனமும் புதிதாக ஓடிடியை உருவாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது. ஆனால் அதன் வடிவமும், உத்திகளும் முடிவாக இன்னும் சில காலம் பிடிக்கலாம். ஆனால் எந்த வடிவத்தில் வந்தாலும் அதற்கு படத் தயாரிப்பு நிறுவனங்களும், ஓடிடி நிறுவனங்களும் கைகோர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
எனவே புதிய ஓடிடி தளங்களுடன் கை கோர்க்க முடிவெடுத்திருக்கிறோம். அடுத்த படம் ”யாதெனக் கேட்டேன்” நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் அதுவும் ஓடிடியில் வௌியாகத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அதற்கு முன் முதல் முயற்சியாக எங்களின் முதல் திரைப்படம் ”வித்தையடி நானுனக்கு” MovieWud OTTயில் வெளியாகியிருக்கிறது.
இரண்டே இரண்டு பேர் நடித்துள்ள அந்தப் படத்தை ராமநாதன் கே.பகவதி இயக்கியுள்ளார். வெளியானபோது நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமமிருந்தது. அதனால் அதிக இரசிகர்களை சென்றடையவில்லை. இப்போது மூவிவுட் ஓடிடியில் மிக எளிதாக வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
படத்தை பார்த்துவிட்டு படத்தைப் பற்றியும் MovieWud OTTயும் எப்படி இருக்கின்றன என்பதை பதிவு செய்யுங்கள்.
 
This is the download link for MovieWud App.
 
நன்றி!
ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்
Rate this item
(0 votes)
சிவாஜியின் குரலை சென்னை வானொலி நிலையம் நிராகரித்ததா?
சிவாஜி 'பராசக்தி'யில் நடித்து, இன்னும் வேறு சில படங்களிலும் நடித்து அப்போது பிரபலமாகியிருந்தார். வானொலி நாடகங்களுக்கு அப்போதெல்லாம் நல்ல வரவேற்பு. அதில் நடிக்க விரும்பிய சிவாஜி அதற்காக விண்ணப்பித்தார். ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு அவருக்குக் குரல் தேர்வு நடந்தபோது அதில் அவர் சித்தியடையவில்லை, அவரை நிராகரித்துவிட்டார்கள். சிவாஜியால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. கோபத்துடன் அன்று ஒரு சபதம் எடுத்தார். 'இனிமேல் என் வாழ்க்கையில் அகில இந்திய வானொலிக்கும் எனக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது. அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தின் வாசல்படியை என்றென்றும் மிதிக்கமாட்டேன்.'
 
இந்தச் சம்பாசணை எனக்கும் சிவராமகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்தது. சிவராமகிருஷ்ணன் லண்டன் பிபிசி தமிழோசையில் பலவருடங்கள் ஒலிபரப்பாளராகப் பணியாற்றுகிறார். பணி நிமித்தமாகப் பலரைச் சந்தித்துப் பேட்டிகள் எடுத்திருக்கிறார்.
 
தினமலர் (ஏப்ரல் 16, 2016) இதழில் சிவாஜியின் குரல் என்ற கட்டுரையில் அ.முத்துலிங்கம் என்பவர் எழுதியுள்ளதை அப்படியே கொடுத்திருக்கிறேன். (முழுக் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்) இந்தத் தகவலை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இந்தத் தகவல் உண்மையா?
 
Rate this item
(0 votes)

Oct 1st is Vaishali's birthday.

Rate this item
(1 Vote)
ஜீலை-1 உலக நகைச்சுவை தினம். உலக நகைச்சுவை நடிகர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.???
 
 நகைச்சுவை னு சொல்லும்போது மக்களை சிரிக்க வைக்கும் உள்ளங்கனே சொல்லலாம். சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இவர்களை பார்த்து சிரித்து நாம் ஆரோக்கியமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சிரிக்க வைப்பதும் நம்மை சிந்திக்க வைப்பதும் ஒரு கலை. அந்த கலையைச்செய்யக்கூடிய பல நடிகர்கள் இருக்கிறார்கள். 
 
நகைச்சுவைக்குனு தனியா ஒருத்தர் இருக்கனும் என்கிற அவசியமில்ல. ஏன்னா யோசித்துப்பார்த்தால் நாமே ஒரு காமெடி சென்ஸ் இருக்கின்ற கூட்டம்தான். அவர்களுக்குள் இருக்கும் சோகத்தை மறைத்து நம்மை சிரிக்க வைக்கும் கலைஞர்கள் பலர். அவர்களுக்கு மீண்டும்யொரு மனமார்ந்த நன்றி.
 
 
 
 
 
Rate this item
(1 Vote)
இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது.
 
இயக்குனர் விசு இறந்தபின் வரும் முதல் பிறந்தநாள் இன்று. 1945 ம் ஆண்டு ஜீலை-1 அன்று பிறந்தார். வாழ்க்கையில் நீண்ட காலம் கிடைத்த வேலையைச் செய்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் நாடக உலகத்திற்கும் சினிமா உலகத்திற்கும் தன் காலை பதித்தவர். கே.பாலசந்தரின் உதவி இயக்குனராக இருந்தவர். 
 
எழுத்தாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் பல வேறு அவதாரங்களை எடுத்தார். இவரது பெரும்வாரியான படங்கள் குடும்பம் சார்ந்த பிரச்சனைகளையும் கலகலப்பையும் சொல்லக்கூடியவை. ஒரு 40 வருடம் வாழ்ந்தவர்கள் இவரது படத்தினைப்பார்த்தால் அவரவர் குடும்பத்தையும் குடும்ப பிரச்சனையும் நினைவு கூற முடியும். இவரே நடித்து இயக்கும் படங்களில் படத்திற்கு இடையில் ஒரு மீளா முடியாத முடிச்சினை போட்டு அதனை இறுதி கட்டத்தில் வந்து அவிழ்ப்பார். அவரது படங்களைப் பார்க்கும் நாம் தான் அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருப்போம். அந்த அளவுக்கு ஒரு இணக்கம் ஏற்படும். 
 
கிட்டத்தட்ட 80 படங்களில் இவரது பங்கு எழுத்தாளராகவும், இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும். மேடை, சினிமா, தொலைக்காட்சி என்று ஒரு சுற்றுப்பயணத்தையே மேற்கொண்டிருப்பார்.  ஆனால் இவர் அன்றே இவரது தகுதிக்கு ஏற்ற விருதுக்களை பெற்றுள்ளார். இருப்பினும் இன்று பல விருதுக்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவரை அங்கீகரீக்க பல தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் மறந்து விடுகிறது என்பது முற்றிலும் ஒரு உண்மை. 
 
இவரது கடைசி படம் மணல் கயிறு -2. இவருக்கு என்று ஒரு நடிகர்கள் பட்டாளம் வைத்துக்கொண்டார். பல புதுமுகங்களுக்கே வாய்ப்பு தந்ததார். ஒரே கதையே நாடகத்திற்காகவும் சினிமாகாகவும் மாற்றி அமைத்து எடுப்பார். இவர் மேல் நம்பிக்கையற்றவர்களை நம்ப வைத்தார். இன்று இவரை மறந்தவர்கள் திரையிலும் தரையிலும் ஏராளம். மார்ச்-22 அன்று இயற்கை ஏந்தினார். 
 
இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது. 
 
இவரைப் பற்றி பதிவிட ISR Ventures பெருமைபடுகிறது.
Rate this item
(0 votes)
 
யார் என்றால் அது நடிகர் மோகன்தான்.. 
 
இன்னும் ஒரு சுவாரஸ்யம்... கமல் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் அறிமுகமானவர்கள் பிற்காலத்தில் அவருக்கு ரெண்டு பேர் ஃடப் பைட் கொடுத்தார் ஒருவர் ரஜினி மற்றவர் மோகன் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா-?
 
ஆம் ரஜினி கமலுக்கு இணையான சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் என்றால் நம்புங்கள்.
 
1980 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை ரஜினி கமலின் தூக்கத்தை கெடுத்ததில் மோகனுக்கு முக்கிய பங்குண்டு....
 
1977 ஆம் ஆண்டு கமல் நடித்த கோகிலா மூலம்..... பாலுமகேந்திராவால் அறிமுகம் செய்யப்பட்டார்.. அதன் பின் 1980 ஆம் வெளிவந்த மூடுபனி..மற்றும் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே... அவருக்கு ஸ்டார் அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்தது எனலாம்.
 
அதன் பின் வெற்றியோ வெற்றிதான்... 
 
திரும்பி பார்க்க முடியாத , நினைத்து பார்க்க முடியாத, கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வெற்றி விழா படங்களில் நடித்தவர் மோகன்...
 
பயணங்கள் முடிவதில்லை... மற்றும் கிளிஞ்சல்கள் படங்களில் மோகனை தமிழ் ரசிகர்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடினைர்கள்..
 
25 நாள்  ஓடினால் இப்போது எல்லாம் பெரிய வெற்றி... 
 
மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை...500 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம் என்றால் நம்புங்கள்...
 
1978 இல் இருந்து 1988 ஆம் ஆண்டு வரை இருந்த காலம் இருக்கின்றதே... தமிழ் சினிமாவுக்கு நடிகர் மோகனுக்கு அது பொற்காலம் என்றே சொல்லலாம்..
 
ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் செய்த ஒரே தமிழ் நடிகர் மோன்தான்..
 
மூன்றில் ஒன்று பிளாப் ஆக வேண்டும் என்று அக்கலாத்தில் நிறைய பேர் வேண்டிக்கொண்டனர்.. 
 
மூன்று படங்களும் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள்.
 
உதாரணத்துக்கு 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே வருடத்தில் மோகன் நடித்த வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா...?? 
 
மொத்தம் 19 திரைப்படங்கள்... எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் முறியடிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.
 
 ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் ஆகி மூன்று மே வெள்ளிவிழா படங்கள் என்ற சாதனையையும் இதுவரை எவரும் வெல்லவில்லை.....
 
ஹீரோவாக அறிமுகமாகி முதல் மூன்று வருடங்களிலும் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்த மூன்று படங்களைக் கொடுத்த ஒரே ஹீரோ மோகன் மட்டுமே..பயணங்கள் முடிவதில்லை.நெஞ்சத்தைகிள்ளாதே, கிளிஞ்சல்கள் என்ற படங்கள் 
 
ஆர் சுந்தர்ராஜன் இசைஞானி மோகன் இணைந்த படம் என்றாலே அது மாபெரும் வெற்றிபடம் என பேசிய காலங்கள்... 
 
ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும் இயக்குநர்களும்..
 
200 நாட்கள்- மணிவண்ணன் இயக்கத்தில் கோபுரங்கள் சாய்வதில்லை
 
365 நாட்கள்- மகேந்திரன் இயக்கத்தில் நெஞ்சத்தை கிள்ளாதே
 
300 நாட்கள்- ஆர்.சுந்தர்ராஜன்-பயணங்கள் முடிவதில்லை
 
200 நாட்கள்- மணிவண்ணன்-இளமை காலங்கள்
 
300 நாட்கள்- துரை.கிளிஞ்சல்கள்
 
200 நாட்கள்- மணிவண்ணன். நூறாவது நாள்
 
200 நாட்கள்-சுந்தர்ராஜன்.நான் பாடும் பாடல்
 
175 நாட்கள்- கே.பாலாஜி. ஓசை
 
200 நாட்கள்-ரங்கராஜன். உதயகீதம்
 
175 நாட்கள்-சுந்தர்ராஜன். சரணாலயம்
 
250 நாட்கள்- ஸ்ரீதர். தென்றலே என்னை தொடு
 
175 நாட்கள்-சுந்தர்ராஜன்.  குங்குமச்சிமிழ்
 
200 நாட்கள்-மணிரத்னம். இதய கோவில்
 
175 நாட்கள்- பூபதி.டிசம்பர் பூக்கள்
 
175 நாட்கள்- ரங்கராஜன். உயிரே உனக்காக
 
250 நாட்கள்- மணிரத்னம். மௌன ராகம்
 
175 நாட்கள்- தீர்த்தக் கரையினிலே, 500 நாட்கள்- விதி, 175 நாட்கள்- மனைவி சொல்லே மந்திரம், 175 நாட்கள்- ரெட்டைவால் குருவி, 200 நாட்கள்- மெல்ல திறந்த கதவு, 175 நாட்கள்- சகாதேவன் மகாதேவன் 
 
இதெல்லாம் இப்போதைய அல்ல இனி எப்போதும் கற்பனை கூட பண்ண முடியாது..
 
இப்படியாக 10 வருடங்கள் பட்டைய கிளப்பிய சில்வர் ஜூப்ளி நாயகன் நடிகர் மோகன் இன்று எந்த படத்திலும் நடிக்க வில்லை... 1990க்கு பிறகு படம் இல்லாமல் தவித்தார்... ஆனால் ஏன் மோகனை அதன் பிறகு குணச்சித்திர , வில்லன் , காமெடியன் படங்களில் அவருக்கு ஏன் வாய்ப்பு தமிழ் சினிமா வழங்வில்லை என்பது பெரிய  கேள்விதான்..
 
யோசித்து பாருங்கள் மோகனின் பார்வையில் பத்து வருடம் தூங்க கூட நேரம் இல்லாமல் நடித்தவர்... ஷார்ட் ரெடி, ஆக்ஷன், கட் போன்ற எந்த சத்தமும்  கடந்த பல வருடங்களாக  கேட்காமல் இருப்பது எவ்வளவு கொடுமை.. 
 
சினிமா உலகம் அப்படியானதுதான்.
Rate this item
(0 votes)

மீண்டும் சிவாஜி!
கொரோனா யுகத்தில்... நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பட்டியல்களுக்கு நடுவில் சிவாஜி படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன.

ஃபேஸ்புக்கில் நான் உட்பட என்னைச்சுற்றி உள்ள பலரும் 35க் கடந்தவர்களே. இவர்களில் பலர் இளையராஜா இரசிகர்கள், அப்புறம் ரஜினி, கமல் இரசிகர்கள். வெகு அபூர்வமாகத்தான் மற்றவர்கள் அவர்களின் அரட்டைகளில் இடம்பெறுவார்கள். இன்றைய தலைமுறையின் இரசனைகள் பற்றி தெரிந்தாலும் அதனை பொருட்படுத்தாதவர்கள். இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால், கடந்த ஒரு வாரமாக இவர்களுக்கு அல்லது நமக்கு மத்தியில் பழைய சிவாஜி படங்களும், அவரது நடிப்பை பற்றிய சிலாகிப்புகளும் அதிகமாகியிருக்கின்றன.

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இதனை ரசனை மாற்றம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் வேகமான லைஃப் ஸ்டைலில் இருந்து முடங்கி, வீட்டுக்குள் அமர்ந்திருக்கும்போது நாம் விலகி வந்த எத்தனையோ உணர்வுகளையும், உறவுகளையும், வாழ்வியல் முறைகளையும் நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறோம், அதில் ஒன்றுதான் நாம் அசால்டாக மறந்து போன சிவாஜி என்கிற மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பும், அவருடைய படங்களில் காண்பிக்கப்பட்ட குடும்பங்களும், உறவுகளும், பிணக்குகளும், தியாகங்களும், புன்னகைகளும்.

இப்போதும் கூட அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று நம்மில் சிலர் கடந்து போகலாம். ஆனால் அப்படியெல்லாம் கடந்துவிட முடியாமல், சிவாஜி நம்மில் சிலருக்குள் மீண்டும் உணர்வுப்பூர்வமாக அமர்ந்துவிட்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

Rate this item
(0 votes)

நம்பிக்கையின் கீற்று!
அனாதையாகக்கிடந்த முதியவரின் உடலை, கொரோனாவுக்கு அஞ்சாமல் அடக்கம் செய்த திணைநிலவாசிகள்!

சிலநாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய எவருமே முன்வராத ஒரு அவலத்தை நாம் கண்டோம். களத்திலிருக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக கைதட்டுகிறோம், விளக்கேற்றுகிறோம் என்று போலித்தனமாக டி.விக்கு போஸ் கொடுத்துக் கொண்டாடியவர்களின் சுயரூபத்தை வெளிக்கொணர்ந்த சம்பவம் அது. இருக்கட்டும்! இது போன்ற போலித்தனமானவர்கள் எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும், எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள். இதை அறிந்தவர்களில் சிலர் கோபப்பட்டார்கள், சிலர் கேலி செய்தார்கள், சிலர் அமைதியாகக் கடந்தார்கள்.

வெகு சிலர் நடந்தது தங்கள் இருப்பையே காட்டிக் கொள்ளாமல் சலனமற்று இருந்தார்கள். அவர்கள் யார் தெரியுமா? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த உலகமே கைவிட்டாலும், கடவுளே நிராகரித்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்று தாமே முன்வந்து உதவக் கூடியவர்கள். அவர்களில் சிலர்தான் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் என்கிற நாடகக் கலைஞர்கள். இன்று அவர்கள் செய்த நற்பணி அளப்பறியது.

சென்னை செங்குன்றம் பகுதியில் 73 வயதுதக்க முதியவர் பிளாட் பாரத்தில் அனாதையாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினர் திணைநிலவாசிகளை
தொடர்பு கொண்டார்கள். திணைநிலவாசிகள் துளியும் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இன்று அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்தார்கள்.

கொரோனாவை விட நிராகரிப்பு கொடுமையானது. வறுமை, முதுமை, குடும்பத்தகராறு, மனப்பிறழ்வு என பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் இருக்கிறது. ஆனால் நம் அனைவருக்கும் நம்பிக்கை தரும்விதமாக சில நல் உள்ளங்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள்.

இந்த நாடும், வனமும், காடும், வானமும் இவர்களைப் போன்ற நல் உள்ளங்களால் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள். அந்த நம்பிக்கையை நமக்கு வழங்கியிருக்கும் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் நண்பர்களுக்கு நன்றி!

Rate this item
(1 Vote)
லக்கு அடிக்கும் சில தொகுப்பாளர்கள்-ரக்ஷன்
 
தொகுப்பாளர்கள் சீரியலையோ அல்லது திரைப்படத்திலையோ நடிகர் ஆவதும் நடிகை ஆவதும் கடந்த சில காலமாக டிரென்டிங்கா நடந்திட்டு இருக்கு. அவங்க நடிப்புலகத்திற்கு வந்து ஜெய்ப்பதும் தோற்பதும் அவர் அவர் திறமையைப்பொருத்தது. நடிகர் மற்றும் நடிகையை தேர்ந்தெடுப்பதில் பல அரசியல்கள் இருந்தாலும் வாய்ப்புகளும் அளிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. 
 
அந்த வகையில் வெள்ளித்திரையில் வாய்ப்புக் கிடைக்காத பல நளிவுடைந்தவர்கள் சின்னத்திரையில் நடிக்க வருக்கிறார்கள். சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த சிலர் வெள்ளித்திரையில் மின்னவும் செய்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் போல பல வருடமாக விஜய் டிவி Product யாக இருக்கக்கூடிய ரக்ஷன் முன்னால ராஜ் டிவி, கலைஞர் டிவியினு பல இடங்கள தன் முகத்த காட்டிருந்தாலும் விஜய் டிவி தான் ஒரு நல்ல அடையாளத்தக்கொடுத்தது. 
 
கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, மேலும் பல நிகழ்ச்சிகள் கடந்த 5வருடமாக செய்ற இவரு இப்ப திரைப்படங்களையும் நடிக்கறாரு. இவருதானே என்று அடையாளப்படுத்தும் வகையில் அந்த படம் அமைந்தது. கிட்டத்தட்ட முதல் படத்துலையே நல்ல நகைச்சுவைக்கலந்த படம் முழுவதும் பயணம் செய்யக்கூடிய செகண்டூ ஹீரோவாக கலக்கிருந்தார். 
 
"விஜய் டிவி Product னா சும்மாவா" தொடர்ந்து கலக்கும் ரக்ஷன் இன்னும் பல பரிமாணங்களைப் பாக்கனும் என்று நாம் வாழ்த்துவோம். 
 
-கீதாபாண்டியன்
Rate this item
(0 votes)

#StayAtHome அண்ணாத்த!

ரஜினிகாந்தைச் சுற்றி 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கும் யுடியூப் அரசியல் அறிஞர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களின் வாட்ஸ்அப் அறிவையும், மேம்போக்கான வைரல் உளறல்களையும் தன்னுடைய கருத்துக்களாக ரஜினிகாந்த் பேச ஆரம்பித்திருக்கிறோரா என்கிற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் தவறான தகவல் தந்ததாக அவருடைய ட்வீட் ஒன்றை டிவிட்டர் நிறுவனமே நீக்கிவிட்டது. இந்த நடவடிக்கை ரஜினி இரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிகாந்துக்கே மிகப் பெரிய அதிர்ச்சி தந்திருக்கும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காந்திருந்த மீடியா, அவர் தானாக முன் வந்து பேசியதையே நீக்கியிருக்கிறது.

திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த யுடியூபர்களின் கருத்துக்களை நிறைய பேர் இரசிக்கிறார்கள் என்பது உண்மைதான். தனக்குப் பிடிக்காதவர்களை அவர்கள் தைரியமாக விமர்சிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களை பல பேருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்கள் வெறும் எண்டர்டெயினர்கள்தான். அதை நமட்டுச் சிரிப்போடு ஃபார்வர்டு செய்வதோடு சகலரும் மறந்து போய்விடுவார்கள். ஆனால் அதையே நீங்கள் சொன்னால், அதை அந்த அரைகுறை யுடியூபர்களைத் தவிர எவரும் ஏற்கமாட்டார்கள். வார்த்தைக்கு வார்த்தை ஆராய்வார்கள், ஏன் இந்த விமர்சனம் அல்லது ஆதரவு என்று கேள்வி கேட்பார்கள்.

ஏனென்றால் நீங்களும் அந்த அரை குறை வாட்ஸ்அப் அறிஞர்களும் வேறு வேறு. உங்களுக்கென்று கோடிக்கணக்கான இரசிகர்கள் கடந்த 40 வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களின் துணையோடு நீங்கள் அரசியலுக்கு வந்துவிடுவீர்களோ என்கிற எண்ணமும், எதிர்பார்ப்பும் தமிழகம் முழுக்க இப்போதும் இருக்கிறது. அதனால் நீங்கள் மைக் முன்னால் பேசும் வார்த்தைகளில் அரசியல் நேர்மையும், விமர்சனங்களில் அனுபவ அறிவும், கருத்துகளில் அரசியல் தெளிவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் கடந்த சில மாதங்களாக நீங்கள் உங்களுக்கு நெருங்கியவர்களாக காட்டிக் கொள்பவர்களும், உங்களுடைய வாட்ஸ்அப்தனமான பேச்சுகளும், அரசியல் முன்னெடுப்புகளும் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. நான் உட்பட உங்களை இரசித்த இரசிகர்களில் 90% சதவிகிதம் பேரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டீர்கள். இரசிகர்களுக்கே இந்த ஏமாற்றம் என்றால், உங்களை மாபெரும் சக்தியாக நினைத்து உங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருந்த அனுபவம் மிகுந்த அரசியல் தலைவர்களின் மனநிலை இன்னும் ஏமாற்றமாக இருக்கும் என யூகிக்கிறேன்.

கருணாநிதி, ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இருந்தபோது அவர்களுக்கு எதிரானவர்கள், உங்களின் பிம்பத்தைக் காட்டி அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அப்போது பெரிய அளவில் எடுபட்ட உங்கள் பிம்பம் தற்போது எடுபடவில்லை. உங்கள் பிம்பம் யாருக்கு ஆதரவானது அல்லது எதிரானது என்பதில் உங்களுக்கே குழப்பம் வந்துவிட்டது. அதனால் மிக இயல்பாகவே உங்களின் 40 வருட பிம்பம் அந்த ஆளுமைகளுக்குப் பின் மெல்ல மெல்ல மங்கி வருகிறது.

இ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன், ஸ்டாலின் போன்றவர்களின் பதவி சேஸிங் விளையாட்டை மக்கள் இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தைரியமாக களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரை தங்களை ஆள தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நீங்கள் இவர்கள் உள்ள களத்தில் இல்லவே இல்லை. ஆனால் நீங்களும் ரேஸில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் நண்பர் கமல் பரவாயில்லை. களத்தில் இருக்கிறார்.

நீங்கள் மதித்த ”சோ சார்” என்பவருக்கு மாற்றாக சில்லறைத்தனமாகப் பேசி கைதட்டல் வாங்கும் ”ஆன்லைன் பிரபலங்களை” உங்களைச் சுற்றி நியமனம் செய்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையோ, பொய்யோ உங்களுடைய இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது.

நீங்கள் குறிப்பிட்ட வெற்றிடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசியலில் அல்ல, சினிமாவில். சினிமா நீங்கள் விட்டுக் கொண்டிருக்கும் இடம், அரசியல் நீங்கள் தொடத் தயங்கும் இடம். உங்களுடைய இப்போதைய இடம் என்ன? மிகப் பெரிய கேள்விக் குறிதான் பதில்.

பி.கு - அண்ணாத்த படம் ரிலீசாகும்போது வழக்கம் போல பார்ப்பேன், அதே போல டிஸ்கவரில் சேனலில் ஒளிபரப்பாகும் ”Into the Wild" அட்வென்சர் (?) நிகழ்ச்சியையும் பார்ப்பேன்.

- ISR Selvakumar

Page 4 of 22

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31