மணிரத்தினம் டைரக்ஷனில் பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தாச்சு
இது எம்.ஜி.ஆர் டைரக்ஷனில் அறிவிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
புத்தாண்டு காலை இட்லி, கிச்சடி மற்றும் ரவா கேசரியுடன் துவங்கியிருக்கிறது.
முன்னும் பின்னும் ரெகே இசையுடன் மழை! Perfect Start!
See you all soon with my films, documentaries and other productions.
Cheers Makkas! 2020 is exciting!
Thank you so much Kathadi Ramamurthy Sir!
A true legendary actor, even after 5 decades, his love and passion towards acting is amazing. He continuously performs stage plays even at this age.
He gracefully accepted to talk about his experiences with our father actor ISR.
So we are happy to announce that along with Mr. Delhi Ganesh, Mr. Kathadi Ramamurthy will also feature in our documentary about our father ISR.
A big thanks from ISR Family and ISR Ventures sir!
In the photo (L-R): Mr. Solai (ISR's brother), Mr. Kathadi Ramamurthy and Mr. Ravikumar (ISR's son)
தன்னம்பிக்கை மனிதர் என்று அறியப்படும் பாலா மலேசியாவில் வசித்துவருகிறார். அடடாஸ், அவர் நடத்தி வரும் கிராபிக்ஸ் டிசைனிங் நிறுவனம். அவருடைய அடடாஸ் நிறுவனம் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்திற்கு தேவையான கிராபிக்ஸ் தேவைகளை செய்து தர முன்வந்திருக்கிறது.
ஏற்கனவே சிறிய அளவில் பங்களித்து வரும் அடடாஸ், 2020ல் அதிக அளவில் தனது பங்களிப்பைச் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
பொல்லாதவன், நாயகன் போன்ற படங்களைத் தயாரித்த முக்தா ஃபிலிம்ஸ் 60ஆம் ஆண்டை எட்டியிருக்கிறது. அந்த கொண்டாட்டத்தின் துவக்கமாக முக்தா நிறுவனத்தின் தயாரிப்புகளில் பங்கு பெற்ற நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், டெக்னிஷியன்கள் உள்ளிட்ட பலரும் விழா மேடையில் கௌரவிக்கப்பட்டார்கள். எங்கள் தந்தை நடிகர் ஐ.எஸ்.ஆர் முக்தா தயாரிப்பில் 4 படங்களில் நடித்திருக்கிறார். அதனால் எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றியும் மேடையில் நினைவு கூறப்பட்டு கௌரவிக்கப்பட்டார். நடிகர் சிவகுமார் நினைவுப் பரிசை வழங்கினார். ஐ.எஸ்.ஆரின் இளைய சகோதரர் சோலையும், இளைய மகன் ரவிகுமாரும் நினைவுப் பரிசை பெற்றுக் கொண்டார்கள்.
நினைவில் வைத்திருந்து கௌரவம் செய்த முக்தா நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஐ.எஸ்.ஆர் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய நாடு என் வீடு...
இந்தப் பாடலை எழுதிய வாலி,
இசையமைத்த எம்.எஸ். வி
பாடிய டி.எம். எஸ், பி. சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எல். ராகவன், மற்றும்
நடித்த சிவாஜி உட்பட எல்லோருக்கும் அன்பும் அணைப்பும்!
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துருக்கர் என் தோழர்
திசை தொழும் துருக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
கங்கை பாயும் வங்கம் செந்நெல்
கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
சுந்தரத் தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகப் பட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிரிந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
ப்ருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு ஸ்வாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு ஸ்வாமி
ஏனு ஸ்வாமி இல்லி நோடு மைசூரு
படச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
கேரளம் திருச்சூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவ்விட பாக்கணும் நீங்க
தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க
படைச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா அல்லாஹூ அல்லா
சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
தங்கக் கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
ஜீலம் ஷட்லஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ உம் ஆஹா அவோ ஆவோ
பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்னாடு
பகத்சிங் பிறந்த பொன்னாடு
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங்
எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
வாழை வழியாக வந்து
பேசிப் பழகும் கிள்ளைகள்
சத்தியம் எங்கள் தேசம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதைப் பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
எங்கள் தந்தை நடிகர் ஐ.எஸ்.ஆர் பற்றி ஆவணப்படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம்.
மேடை நாடகம், திரைப்படம், தூர்தர்ஷன், தொலைக்காட்சி தொடர்கள், தனிநபர் மேடை நகைச்சுவை (Standup Comedy) மற்றும் ஆடியோ ஆல்பம் போன்ற துறைகளில் அவருடைய பங்களிப்புகள் அப்படத்தில் தொகுக்கப்படும்.
இது தொடர்பாக அவரைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ, பத்திரிகைச் செய்திகள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் பற்றி தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.
உங்களிடம் அவரைப் பற்றிய விபரங்கள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த ஆவணப்படம் ஒரு துவக்கமே. எங்கள் தந்தையைப் போல காலத்தில் பதிந்திருக்கும் பல்வேறு திரைக் கலைஞர்கள் பற்றிய தகவல்களை அடுத்தடுத்து ஆவணப்படுத்தப் போகிறோம். எங்களால் எத்தனை கலைஞர்களை ஆவணப்படுத்த முடியும் என்பது காலத்தின் கைகளில் இருக்கிறது. எனவே எங்களால் இயன்றவரை தொடர்ந்து செய்வோம்.
இந்தப் பணி அந்தக் கலைஞர்களுக்கு நாங்கள் செய்கின்ற மரியாதை மட்டுமல்ல, இது எங்கள் கடமை என்றும் கருதுகிறோம். உங்கள் ஆதரவுடன் நிச்சயம் செய்வோம். அன்றைய கலைஞர்களை இன்றைய வெளிச்சத்துக்கு கொண்டுவருவோம்.
மகிழ்ச்சி!
ISR Ventures தயாரிப்புக் குழு
ISR குடும்பத்தார்