Log in


Friday, 13 December 2019 13:57

எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி ஒரு ஆவணப்படம்

Written by ISR Admin
Rate this item
(0 votes)
Docu film about actor ISR Docu film about actor ISR Do you have any info about ISR?

எங்கள் தந்தை நடிகர் ஐ.எஸ்.ஆர் பற்றி ஆவணப்படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம்.

மேடை நாடகம், திரைப்படம், தூர்தர்ஷன், தொலைக்காட்சி தொடர்கள், தனிநபர் மேடை நகைச்சுவை (Standup Comedy) மற்றும் ஆடியோ ஆல்பம் போன்ற துறைகளில் அவருடைய பங்களிப்புகள் அப்படத்தில் தொகுக்கப்படும்.

இது தொடர்பாக அவரைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ, பத்திரிகைச் செய்திகள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் பற்றி தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

உங்களிடம் அவரைப் பற்றிய விபரங்கள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த ஆவணப்படம் ஒரு துவக்கமே. எங்கள் தந்தையைப் போல காலத்தில் பதிந்திருக்கும் பல்வேறு திரைக் கலைஞர்கள் பற்றிய தகவல்களை அடுத்தடுத்து ஆவணப்படுத்தப் போகிறோம். எங்களால் எத்தனை கலைஞர்களை ஆவணப்படுத்த முடியும் என்பது காலத்தின் கைகளில் இருக்கிறது. எனவே எங்களால் இயன்றவரை தொடர்ந்து செய்வோம்.

இந்தப் பணி அந்தக் கலைஞர்களுக்கு நாங்கள் செய்கின்ற மரியாதை மட்டுமல்ல, இது எங்கள் கடமை என்றும் கருதுகிறோம். உங்கள் ஆதரவுடன் நிச்சயம் செய்வோம். அன்றைய கலைஞர்களை இன்றைய வெளிச்சத்துக்கு கொண்டுவருவோம்.

மகிழ்ச்சி!

ISR Ventures தயாரிப்புக் குழு
ISR குடும்பத்தார்

Read 849 times Last modified on Friday, 13 December 2019 14:02
Login to post comments

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31