Log in


பெற்றோர்களே கவனம்!
உங்கள் குழந்தைகளை மீண்டும் பலிகேட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சிறு மன்னிப்பு கேட்கும் மனநிலையில் கூட இல்லை. ஆனாலும் உங்கள் குழந்தைகளை மீண்டும் பலி கேட்கும் முயற்சிகளை கைவிடவில்லை. நான் இணைத்துள்ள செய்தி உண்மையா? பொய்யா என எனக்குத் தெரியாது. அது பொய்யாகவே இருந்தாலும், இந்தச் சூழலில் இது போல சிந்திக்கும் எவரும் மனித மிருகங்களே!
அவர்களுடைய தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். பதுங்கியபடியே உங்கள் குழந்தைகளை கும்பலாக மாற்றி, அவர்களுக்கு நடுவில் வெளிவந்து, தாங்கள் தப்பிக்கலாம் என நினைக்கிறார்கள்.
உங்கள் குழந்தைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!
- ISR Selvakumar
Published in ISR Selva speaking
எண்பதுகளில் முதல் முதலாக சென்னை வானொலியில் பேசுவதற்கு சிறுகதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேரமைதி சூழந்த ஒலிப்பதிவு அறை. நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்னருகே வந்து நின்றார். நீ பேசப்போவதை இந்த நாடே கேட்கப்போகிறது. எனவே வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும், என்று அறிவுறுத்திச் சென்றார். அவ்வப்போது ஒலிப்பதிவை நிறுத்தி சில வார்த்தைகளை திருத்தினார்.

ஆனால் 2025ல் எல்லாமே மாறிவிட்டது. எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலை வந்துவிட்டது. குறிப்பாக தமிழ் செய்தி காட்சி ஊடகங்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. இவர்களுக்கு எடிட்டர்கள் என்று தலைமைப் பொறுப்பில் எவராவது இருக்கிறார்களா என்று சந்தேகம் வருகிறது.

கரூர் உயிரிழப்புகளுக்கு காட்சி ஊடகங்களின் இந்த பொறுப்பற்ற தன்மைதான் பெரும் காரணம். அது ஒரே நாளில் நடந்துவிடவில்லை. முட்டாள்தனங்களை, பெரும் மாற்றங்கள் என்று தினம் தினம் திரித்துக் கூறியதால் நிகழ்ந்தவை. அது ஒரு மூளைச்சலவை!

கடந்த ஒரு மாதத்தை மட்டும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முட்டாள்தனங்களையும், பொறுப்பற்ற கோமாளித்தனங்களையும் உயர்த்திப்பிடித்து அதனை மக்கள் எழுச்சி என்று சித்தரித்தார்கள். வெற்றுச் சவடால்களையும், கட்டுப்பாடுகளுக்கு அடங்கமாட்டேன் என்ற குரல்களையும் புரட்சி வந்துவிட்டது என வர்ணித்தார்கள்.

புதியதலைமுறை, பாலிமர் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் ஒரு விண்ணப்பம்! நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், உங்கள் பொறுப்பு என்ன என்பதை அறிந்தவர்களாக இருந்தால், தொடர் நேரலை என்கிற பெயரில் உங்கள் செய்தி நிறுவனங்கள் சார்பாக உதிர்க்கப்பட்ட வார்த்தைகளை காது கொடுத்து கேளுங்கள். ஒரே ஒரு வார்த்தையைக் கூட ஊடகத்தரமான வார்த்தை என்று உங்களால் கூற இயலாது. அனைத்தும் நஞ்சு தோய்ந்தவை. இலக்குகள் இல்லாமல் தியேட்டர் வாசலில் ரகளை செய்துகொண்டிருந்த இரசிகர் திரளை தூண்டிவிட்டு, நீ எது வேண்டுமானாலும் செய்யலாம், யாருக்காகவும் அடங்காதே, நீ எதை அடித்து நொறுக்கினாலும் அது துணிச்சல் என்று பாராட்டி, மூளைச்சலவை செய்து அவர்களை மூளையில்லாத ரௌடிக் கூட்டமாக மாற்றிவிட்டீர்கள்.
இப்போது கூட உங்கள் செய்திகளில் பலியானவர்கள் பற்றிய வருத்தத்தின் சாயல் கூட இல்லை. வழிதவறிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அறிவுறுத்த இது அரிய சந்தர்ப்பம். மாறாக அரசியலில் எதிரெதிர் நிலையில் நிற்போரை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் இப்படியே தொடர்ந்தால் கரூர் துர்மரணங்களுக்கு மட்டுமல்ல, இதற்குப் பின்னும் ஏதாவது நடந்தால் அதற்கும் உங்கள் பொறுப்பற்ற தன்மைதான் முதல் காரணம்.

இளைஞர்களை முழுவதும் சீர்குலைத்தபின்தான் உங்களுக்கு பொறுப்பு வரவேண்டும் என்பதில்லை. அன்று சென்னை வானொலியில் எனக்கு அறிவுரை கூறிய அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரின் சார்பாக உங்களை கேட்டுக் கொள்கிறேன். ஊடகத்தில் உதிர்க்கப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மதிப்பு மிக்கது. அது வெல்லும் அல்லது கொல்லும்! நீங்கள் வெல்பவரா? கொல்பவரா?
Published in ISR Selva speaking
Thursday, 23 January 2020 11:55

அந்த ஒரு மாதம்

அந்த ஒரு மாதம்:

சில நாட்களுக்கு முன்பு நானும் என் வகுப்பு மாணவர்களும் களஆய்விற்க்காக கீரனுர் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தோம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கு தங்கிருந்த அனுபவங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

 என்னுடைய வாழ்வில் இந்த ஒரு மாதத்தை மறக்கவே முடியாத நாட்களாக இருந்தது.அந்த அளவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், என்னை நான் யாரென்று புரிந்துகொள்ள ஒரு உகந்த இடமாக இருந்தது. எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை அங்குதான் தெரிந்துகொண்டோம். எங்களுக்குள் என்னதான் சண்டை வந்தாலும், கொஞ்ச நேரம் தான் கோவமாக இருப்போம். அதன் பிறகு பேசி சிரித்து கொள்வோம். அங்கு சென்றிருந்தவர்கள் பெரும்பாலும் நகர் புறத்தில் வளர்த்தவர்களே.

ஆகையால், எங்களுக்கு கிராமத்து வாழ்க்கை புதிதாக இருந்தது. கிராமம் என்றாலே அழகுதான்.

அதில், நாங்கள் சென்றிருந்த கீரனுர் என்ற கிராமம் மிகவும் அழகா இருந்தது. ஆரம்பத்தில கிராமத்து வாழ்க்கை ஒத்துப்போகவில்லை என்றாலும், போகப்போக கிராமத்தின் சிறப்பை புரிந்துகொண்டோம். அதிகாலை சூரியன், பசுமையான மரங்கள், தூய்மையான காற்று, கலப்படம் இல்லாத தண்ணீர்  இவையனைத்தையும் நாங்கள் ஒவ்வொருநாளும் அனுபவித்தோம்.

இது எங்களுக்கு புதியதாகவும், மறக்கமுடியாத நினைவாகவும் இருந்தது. அடுத்து கிராமத்தின் மக்களை பற்றி கண்டிப்பா சொல்லியாக வேண்டும். நகரத்து வாழ்க்கையில் பக்கத்துக்கு வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத காலகட்டத்தில், நாங்கள் கிராமத்துக்கு சென்றதுமே நாங்கள் வந்த செய்தி கிராமம் முழுவதுமே பரவி விட்டது. உடனே அவர்கள் எங்களை வித்தியாசமாக தான் பார்த்தார்கள்.

ஆனால், நாட்கள் போகப்போக எங்களிடம் மிகவும் பாசமாகவும், அன்பாகவும், யதார்த்தமாகவும், எந்தவித கள்ளங்கபடம் இல்லாமல் பழகினார்கள். எங்களை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார்கள்.

எங்களது ஆய்வு காலம் முடியும் நேரம் வந்ததும், மிகவும் வருத்தமாக இருந்தது, அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் ஆயிவை முடித்துக்கொண்டு வந்தோம் 

Published in ISR Selva speaking

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31