Log in


”நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன்”

தமிழ் திரை உலகில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவை. பாக்கியராஜ் வெற்றிக்குப் பின் திரைக்கு வந்த அனைத்து இயக்குநர்களும், தானே கதை எழுதி இயக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எந்தக் கதாசிரியராக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைத்தான் கற்பனைகள் கலந்து கதையாக்குகிறார். அவருடைய அனுபவங்கள் தீர்ந்தபின், தான் கேட்டு வளர்ந்த பிறர் அனுபவங்களை கதையாக்குகிறார். இரண்டும் தீர்ந்த பின் தேங்கிவிடுகிறார். நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

 

உண்மையில் கதைகள் நம்மைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் நாம் மட்டுமே கதைகளாக மாற்ற இயலாது. நம்மைச் சுற்றி பல்வேறு சூழல்களில் வளர்ந்த நிறைய கதை சொல்லிகள் இருக்கிறார்கள். அவைகளில் சில அச்சேறுகின்றன, பல மேடைப் பேச்சுகளாகின்றன, சில ஃபேஸ்புக் பதிவுகளாக சுருங்குகின்றன. நிஜமாகவே நல்ல கதை தேடும் இயக்குநராக இருந்தால் இதில் ஒன்றோ, பலவோ அவருடைய கண்களில் படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை என்பதால், நான் வேறு கோணத்தில் இதனை அணுக முடிவு செய்திருக்கிறேன். யாரும் யாரையும் தேடிப்போக வேண்டும். ஒரு காபி சந்திப்பில் திரை உலகையும், கதை உலகையும் இணைக்க ஒரு அமைப்பை துவக்கலாம் எனத் தோன்றியது. இதனைச் செய்ய வெறும் யோசனை மட்டும்போதாது. நல்ல ஒருங்கிணைப்புத் திறன் உள்ள குழு வேண்டும். ஒவ்வொரு சந்திப்பையும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் திறன் வேண்டும். அதனால் அப்படி ஒரு குழுவை அணுகலாம் என முடிவு செய்தேன். 

நல்லவேளையாக அர்ஷா ஒரு யோசனையுடன் முன்வந்தார். Book Vibe என்கிற அமைப்பின் மூலம் புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்தப்போவதாகக் கூறினார். நடத்தியும் காட்டினார். அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. அவரிடம் இந்த எண்ணத்தைச் சொன்னேன். அவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. விரைவில் ISR Ventures நிறுவனத்தின் முன்னெடுப்பில் கதையும், சினிமாவும் சந்திக்கும் நிகழ்வுகள் நடக்கப்போகின்றன. அதனை Book Vibe அமைப்பினர் நடத்தித்தருவார்கள்.

முதல் சந்திப்பு எப்போது, யார் யார் சந்திப்பார்கள் என்பதை விரைவில் அறிவிக்கிறேன்.

- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Published in ISR Press Release

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31