Log in

Register



Rate this item
(0 votes)
எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு இடையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 14, காதலர் தினம் என்பதால் அது காதல் பாடலாக இருக்குமோ என்று சிலர், அரசியல் பஞ்ச் டயலாக்காக இருக்கும் என்று வேறு சிலர். யூகங்கள் பறந்து கொண்டிருந்தபோது, கார்டூன் வடிவில் ”குட்டிக்தை பாட்டு” ரிலீசாகியிருக்கிறது. இரசிகர்கள் ஒவ்வொரு வரியிலும் ஒரு பஞ்ச் டயலாக் இருப்பதாக கொண்டாடி வருகிறார்கள்.
Rate this item
(0 votes)
நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி!நாகேசுக்கு டப்பிங் கொடுத்தவர். எத்தனையோ படங்களில் இவரை பார்த்திருப்பீர்கள். மீண்டும் கோகிலா படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்திருப்பாரே என்றால்... ஓ அவரா என்பீர்கள். எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆரின் நெருங்கிய நண்பர். அவருடன் கனிமுத்துப்பா, காசியாத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார். கஸ்டம்சில் பணிபுரிந்தபடியே திரைப்படங்களில் நடித்தார். மிகக் கெடுபிடியான ஆபிசர் என்பார்கள். நாகேஷ் பிஸியாக இருந்தபோது, பல படங்களில் நாகேஷிக்காக டப்பிங் குரல் கொடுத்தார். அதனால்தான் அவருக்கு அந்தப் பெயர் வந்தது.தகவல்…
Rate this item
(0 votes)
நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது "பாராசைட்" 92வது ஆஸ்கர் விருது விழாவில், ஆஸ்கர் வரலாற்றிலே முதல் முறையாக, ஆங்கில மொழி அல்லாத மற்றொரு மொழி திரைப்படத்துக்கு விருது வழங்கபட்டுள்ளது. இப்படமானது, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற நான்கு பிரிவில், நான்கு விருதுகளை வென்றது.
Rate this item
(0 votes)
ஜோக்கர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றது 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட "ஜோக்கர்". சிறந்த நடிகர்(வாக்கின் பீனிக்ஸ்) மற்றும் சிறந்த இசை என்ற பிரிவில் இரண்டு விருதுகளை பெற்றது.
Rate this item
(0 votes)
1917 மூன்று ஆஸ்கர் விருதுகளை பெற்றது 92வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட 1917 என்ற திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை மற்றும் சிறந்த கிராபிக்ஸ் என்ற பிரிவுகளின் கீழ் மூன்று ஆஸ்கர் விருதுகளை பெற்றது.
Page 19 of 31