Log in

Register



ஒரு சூட்டிங் னா சும்மா இல்ல. எவ்வளவு பேரோட உழைப்பு. எவ்வளவு பேரோட உருவாக்கம். சிவாஜி மாபெரும் நடிகர் ஆனால் கேம்ராவோட சேர்த்து மற்றவர்கள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்தவர்கள் இல்லையென்றால் சிவாஜி மட்டும் இல்லை எந்த நடிகராக இருந்தாலும் அவர்கள்.......? 
 
பொதுவாகவே சில நேயர்கள் எதாவது சூட்டிங்க நேரில் பார்ப்பவர்கள் சொல்வார்கள். "சூட்டிங் நேருல பாக்க நல்லாவே இருக்காது. ரொம்ப சத்தமா கையாமொய்யேனு கையாமொய்யேனு இருக்குமென்று" ஆனால் ஒரு வகுப்பில் குறைந்தது 45 பேர ஒரு லீடர் அமைதிப்படுத்துவதை காட்டினும் பெரிய வேலை இத்தனை துறைகளையும் ஒன்று திரட்டி சூட்டிங் எடுத்து அதற்கு பின்னாடி பல வேலைகள் செய்து படத்த வெளியிடறது. 
 
ஆனால் சினிமா என்னதான் இத்தனை துறைச்சார்ந்தவர்கள் இருந்தால்தான் இயங்கும் என்றாலும் இதில் பலர் சினிமாவை கனவு லட்சியமாகவும் சிலர் இதுவும் ஒரு வேலை என்று அலட்சியமாகவும் எடுத்துட்டு செயல்படுகின்றனர். அது உண்மைதானே...
 
சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இவ்வாறு அமர்களமாகதான் திரைப்படம் சூட்டிங் எடுத்துட்டு இருந்தனர். காலப்போக்கில் ஐந்து நடிகரும் மூன்று தொழிற்நுட்ப கலைஞரும் இருந்தால் போதும்னு குறும்படம் என்று ஒன்று வர ஆரம்பத்தது. அது இளைஞர்களின் திறமையை மற்றவர்களுக்கு புரிய வைக்கும்படி அமைந்தது. இப்போ #லாக்டவுன் நேரத்துல சினிமால சாதித்தவர்கள் அங்க அங்க அவங்க வீட்டுல இருந்தே ஒருங்கிணைத்து நடித்து குறும்படமா போடறாங்க. ஏற்கனவே எடுக்கப்பட்ட திரைப்படம் எல்லாம் OTT  வெளியாகி Middle  மற்றும் High தரப்பினருக்கும் சினிமாவை நேசிப்பவர்களுக்கும் சுவாசிப்பவர்களுக்கும் மட்டும் சென்று சேர்கிறது. மற்ற மக்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வே இல்லை. என்பதும் உண்மைதானே....
 
சூட்டிங் உடைய தன்மையே மாறிக்கொண்டு வருகிறது இது சினிமாவின் புதிய அத்தியாயம்மா?  இல்ல அழிவா?
 
-கீதாபாண்டியன்
Published in Reviews
 
 
நாபோ பிறரைப்பார்த்து ரோல் மாடல் எடுத்துக்கலாம் ஆனால் அவருடைய ரோலாகவே இருக்க நினைக்கக் கூடாது. 
 
ரசிகர்கள் பட்டாளம் மற்ற நாட்டை விட தென்னிந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது. காலத்திற்கேற்ற முன்னேற்றத்துடன் அவரவர் விருப்பமான நடிகர்களை முன்னிறுத்தும் வகையில் ரசிகர் மன்றம் மற்றும் நற்பணி மன்றம் என்று உதவி செய்வது சேவை செய்வது. என் தலைவனுக்காக எத வேணாலும் பண்ணுவான் என்று சொல்வது மட்டும் அல்லாமல் அதை கண் மூடிதனமாக செய்யும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போகுது. கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவது. பெரிய பேன்னர் அடிப்பது, வெடி வைப்பது, முதல் நாள் முதல்  ஷோவுக்கு போவது என்று ஒவ்வொரு ரசிகளும் பலவகையான அன்பை விருப்பமான நடிகர்களுக்காக செய்வது எப்போதுமே வாடிக்கையாகி விட்டது.
 
தம் விருப்பமான நடிகர் நம்முடன் பேசிக்கொண்டிருப்பது போலவே நினைத்துக்கொண்டு இருப்போம். அதை விட நாமே அந்த நடிகர் போன்ற தோரணையில் சில தருணங்களில் நினைத்துக்கொள்வோம். மேலும் நடிகர்கள் வேடம் போட்டு திருவிழா காலங்களில் மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்கள் கண்டிப்பாக அவர் போடும் வேடத்திற்கு உரித்தான நடிகர் மீது ஆழ்மான காதல் கொண்டவர்களாக கூட இருப்பர்.
 
அவ்வாறு எம்.ஜி.ஆர் முதல் விஜய் சேதுபதி வரை ஆறு முதல் அறுபது வரை பலதரப்பட்ட ரசிகர்களும், அந்த நடிகர்கள் மீது காதல் கொண்டு அந்த நடிகருடைய கதாபார்த்திரமாக வேடம் போடும் வாழுபவர்கள் ஏராளம். ஆனால் திரையில் இருப்பவர்களின் வெற்றியில் பாதி அளவை கூட தொடாமல்தான் இருக்கின்றனர். அதற்கு என்ன காரணமென்றால் அப்டேட் அகாமல் ஒரே காணோட்டத்தில் வாழ்வதாக கூட இருக்கலாம். 
 
அப்படிதான், தான் எம்.ஜி.ஆரின் மறுபிறவி... ஒரு நாள் அவர போலவே திரையில் மின்னுவேன் என்று அவர் அந்த காலத்தில் படங்களில் செய்தாக கருதப்பட்ட அனைத்தும் செய்து நான்தான் எம்.ஜி.ஆர் என்று ஒரு வாழ்க்கையை அவன் தன் கடைசி காலம் வரை வாழ்கின்றான். ஆனாலும் எம்.ஜி.ஆர் னா எம்.ஜி.ஆர் தான் அவர் இடத்த பிடிக்கவே முடியாது நினைக்கறான். இதுவே இந்த குறும்படம்.
 
 
நாபோ பிறரைப்பார்த்து ரோல் மாடல் எடுத்துக்கலாம் ஆனால் அவருடைய ரோலாகவே இருக்க நினைக்கக் கூடாது. 
நம்பிக்கை, உழைப்பு, அப்டேட், விடாமுயற்சி இருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் ஜெயிக்கலாம்.
 
-கீதாபாண்டியன்
Published in Cine bytes
 Oh my கடவுளே Wife Ah kuda friend ta  பாத்திடலாம் Sir, ஆனா friend Wife ah...!? 
 
டிரையலர் விமர்சனம்
 
விஜய்சேதுபதி, அசோக் செல்வன் மற்றும் பலர் நடிச்ச படம் oh my கடவுளே. 
பிப்ரவரி 14ம் நாள் திரைக்கு வரப்போகுது. 
 
அசோக் செல்வனுடைய Cuteness, இந்த படத்துல நல்லா Work out ஆகியிருக்கு. இத்தனை வருடமா  Friend டா இருந்தவரை ஒரு நொடியில கல்யாணம் பண்ணி எதோ வாழுனுமேனு வாழ்ற மாதிரி டிரையலர் சொல்லுது.  இடையில ஒரு பொண்ண அசோக் செல்வனுக்கு பிடிச்சு நட்பாக பேச ஆரம்பிக்கறதே கதாநாயகிக்கு கடுப்பு ஆகுது.  அந்த நட்பின் விளைவு அழுகையாகவும், அந்த கல்யாணத்தின் விளைவு சண்டையாகவும் உருவெடுக்கிறது. 
 
இதுல விஜய்சேதுபதி பார்ப்பதற்கு மாடர்ன் கடவுள் போல காட்சியளிக்கிறார். அசோக் செல்வனுடைய பிரச்சனையைப் பற்றிய விசாரணை முதல் அதன் தீர்வு வரை அவர் கையில் தான் உள்ளது என்பது போல் டிரையலர் உள்ளது. "ஒரு உண்மையையோ ரகசியத்தையோ வெளிய சொன்னால் செத்திடுவே" என்பது சுவாரசியம். நடைமுறையில் நடக்கவே முடியாத ஒரு களத்தை தேர்ந்தெடுத்து பயணிக்கின்றனர்.
 
மேலும் அந்த ரகசியத்தை வெளியே சொல்லாமல் போவதால் இன்னும் பல பிரச்சனைகளும் குழப்பங்களும் உருவெடுக்கிறது. அதை சரி செய்ய இரண்டாவது சான்ஸாக ஒரு டிக்கெட்டை தருகிறார் மாடர்ன் கடவுள் விஜய் சேதுபதி.  நடந்தது என்ன படத்தில் பார்க்கலாம்.
 
இந்த டிரையலரில் பாதி கதையை சொல்வதுப்போல் ஒரு வசனம் "Wife Ah kuda friend ta  பாத்திடலாம் Sir, ஆனா friend Wife ah...!? 
 
-கீதாபாண்டியன்
 

 

Published in Cine bytes

அதிரடியாக வந்தாச்சு மாஸ்டர் 3வது போஸ்டர்!

விஜய் - விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து கர்ஜிக்கும் போஸ்டரை, விஜய் டிவிட்டரில் வெளியிட்ட அடுத்த வினாடியே வைரலாகிவிட்டது. 

Published in Cine bytes
Title : விஜய்-வுடன் விஜய்சேதுபதி இருப்பாரா? 
 
லோகேஷ்கனகராஜ் இயக்கித்தில் #Master என்ற படத்தில், விஜய், விஜய்சேதுபதி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்துடைய Firstlook, Secondlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையில், இன்று (26/01/2020) மாலை 5 மணிக்கு #MasterThirdLook வெளியாக உள்ளது. முதல் இரண்டு போஸ்டர்-ல விஜய்சேதுபதி இல்லை. இந்த விஜய்சேதுபதி இருப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Published in Cine bytes