Log in

Register



Thursday, 28 May 2020 11:46

வெற்றிவேல்

Written by Geetha Pandian
Rate this item
(1 Vote)
ஜீ தமிழ் ஜீ தமிழ் வெற்றிவேல்
 100 க்கு மேற்பட்ட முறை ஒளிப்பரப்புச்செய்துள்ள ஜீ தமிழ் 
 
இளையதளபதி விஜய் நடித்த ஜில்லா படத்தில் இணை இயக்குனராகவும், 13 படங்களுக்கு துணை இயக்குனராகவும்  கிட்டதட்ட 10 வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வந்துக்கிறார் இயக்குனர் வசந்தமணி. இவரது முதல் படைப்பாக நடிகர் சசிகுமார், பிரபு, இளவரசு, விஜி, தம்பி ராமய்யா, சமுத்திரக்கனி  போன்ற பலரும் நடித்து 2016 ம் ஆண்டு வெளியான  "வெற்றிவேல்" இவருக்கு ஒரு வெற்றிக்கரமான படைப்பாகும். பல புது நடிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம். 
 
பிள்ளைகளை திட்டிக்கொண்டே இருக்கும் அப்பாவின் கோபத்தை அருமையாக எடுத்துள்ளார். அப்பா கோபத்தில் போனை தூக்கிப்போட்டு உடைத்து விட்டு பின்னர், அந்த போனை சரிபண்ணும் எதார்ந்த நிலை கண்டிப்பாக ஒவ்வொரு மிடில்கிளாஸ் குடும்பத்திலும் நடக்கும். அம்மா, அப்பாக்காகவும் பேச முடியாமல் மகனையும் தேர்த்த முடியாமல் நடுநிலையில் ஒன்றுமே தெரியாமல் இருக்கும் அம்மாவாக இருந்தாலும் முக்கியமான நேரத்தில் அம்மாவின் பேச்சு எடுப்படும். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நமது குடும்ப உறவுகளை ஞாபகபடுத்தும் அளவுக்கு எடுத்திருப்பார். 
 
கட்டிட்டு வந்தவன் பெயர் கூட தெரியாத பொன்னு மனசுல,எப்படி காதல் வளருது. இளம் வயசு பசங்க காதலிக்கற பொன்னுக்காக என்னவெல்லாம் பண்ணறானு எவ்வளவு படங்களில் பார்த்தும் இதுலையும் பார்ப்பதற்கு சலிப்பை ஏற்படுத்தா அளவுக்கு சசிகுமாரின் கதாபாத்திரத்தை அழகாக காட்டியிருக்கிறார் வசந்தமணி.
 
மனசுல, விரோதம் இருக்கற ஒரு பொம்பள நமக்கு பார்க்கவே கடுப்பை ஏற்படுத்தறமாதிரி கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கார். கை எடுத்து குடும்பிடும் அளவு பிரபு அவர்களின் பேச்சும், கம்பிரமும் மனசுல நீங்கா இடம் பிடிக்கற அளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திரைக்கதையையும் தெளிவாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் வசந்தமணி.
 
பாடல்களுக்கு, இமானைப்  போட்டு அடி மனச தொடும் பாடல்களை எழுதி வாங்கியிருக்காருனே சொல்லலாம். சண்டைக்காட்சிகள பொறிப்பறக்க வைச்சிருக்காரு. வசனங்கள ஆழமாகவும் அழுத்தமாகவும் எழுதி பேச வைச்சிருக்காரு. 
 
பொன்ன கடத்தி காதலனோட சேர்த்து வைக்கற நாடோடிகளை பார்த்திருக்கோம். ஆனால் மாத்தி பொன்ன கடத்தி ஹீரோவோட வாழ்க்கையையே மாத்தர நாடோடிகள வெற்றிவேல் படத்துல சிரிச்சிட்டே பார்க்கலாம்.
 
ஊர், உலகம், பெத்தவங்க, காதலினு யாரையும் யோசிக்காம வாழ்க்கையை தொலைத்த அவலைப்பெண்ணுக்கு வாழ்க்கைக்கொடுக்கறதும், கொரியர் பாய் கொரியர் கொடுக்கும்போது,   பல சீன்களில் சொல்லக்கூடிய கதையை ஒரே சீன்னில் காட்டியிருப்பார்கள். தப்பு பண்ணவங்கள மனிக்கறதே பெரிய தண்டனை எடுக்கப்பட்ட காட்சிகள் வெற்றிவேலுக்கே( வசந்தமணி) சொந்தமானது. 
 
58 நாட்களில் எடுக்கப்பட்ட தரமான படம். A, B, C என்ற அனைத்து தரப்பு மக்களும் பார்க்ககூடிய திரைப்படம். கிராமங்கள், நகரங்கள், சிறியவர்கள், பெரியவர்கள், மிடில் கிளாஸ்னு பலர் இடத்திலும் இந்த படம் சென்றுச்சேர்ந்திருக்கு. எதார்த்தமான கிராமத்து வாழ்க்கை, சலிப்பு தட்டாத காதல், நினைச்சு நினைச்சு சிரிக்க வைக்கும் காமெடி மண் மணம் மாறாத கதை என்று தெளிவான திரைக்கதையை வடிவமைத்து எழுதியுள்ளனர். இதுப்போன்ற கிராமத்து நடுத்தர குடும்பம் சார்ந்த திரைப்படங்கள் இனிமே வருமா? உண்மையான கிராமங்களிலே இது போன்ற சூழல்கள் நடக்குமா? என்று எண்ணிக்கூட பார்க்க முடியாத கதை களம்தான் வெற்றிவேல்.
 
"வெற்றிவேல்" வெளியான முதலிருந்து ஜீ தமிழ் வாங்கி கிட்டதட்ட 100 மேற்பட்ட முறைக்கள் ஒளிப்பரப்புச்செய்துள்ளனர். இதில் மிகுந்த ஆச்சிரியத்திற்குரிய விஷயம் என்னனா! டிவியில ஒவ்வொரு முறையும் போடும்போதும் மக்களால்  பெரும்பாலும் பார்க்கப்பட்டு டிஆர்பி அதிகமாகிறது. இதனை ஜீ தமிழ் டிவியும் கொண்டாடுகிறது. 
 
நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குனர் வசந்தமணி ஆகியோருக்கு மிக முக்கியமான படம் வெற்றிவேல். இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்தால் இன்னொரு மறக்க முடியாத படம் மக்களுக்கு கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
 
-கீதாபாண்டியன்
 
 
 
Read 979 times
Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30