Log in

Register



Tuesday, 26 May 2020 06:00

வேடிக்கை எனது வாடிக்கை-விசு

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
வேடிக்கை எனது வாடிக்கை வேடிக்கை எனது வாடிக்கை விசு
 மூன்று பெண்களுக்கு எப்படி நீதி வாங்கி கொடுக்கறார் தாய் மாமா
 
அண்ணன் தங்கை என்னதான் பாசமாக இருந்தாலும், தங்கைக்கு கல்யாணம் ஆயிட்டால் சொந்த அண்ணன் கூட வேத்து ஆளுதான். கணவன் மனைவி வாழ்க்கையில் அடிமைப்படுத்துவதும், சந்தேகப்படுவதும் மிக எளிமை என்ற நிலை வந்தப்பிறகு, எதுக்கு உலகத்தை ஏமாற்றனும் என்று அமைதியா வாய மூடிட்டு வீட்டுக்குள்ளேயே பேசாமல் இருக்கும் பெற்றோர்.
 
தப்பை தட்டிக்கேட்டு, மூட நம்பிக்கையிலிருந்து வெளியே வந்து வாழ நினைப்பவன் கதைக்கு ஹீரோ மாதிரி இருந்தாலும் நாட்டுல ஜீரோவாக இருக்கும் மகன். 
 
ஊருக்கே கவிதை எழுதுபவனாய் ஹீரோவாக இருப்பவன். மற்றவர்களை ஒப்பிடுகையில் ஜீரோ வாக இருப்பவன். அப்பா, அம்மா பேசறதுல்ல, அண்ணன் வியக்கானம் பேசுபவன், சின்ன அண்ணன் சிந்தனை சிற்பி இவர்களிடம் தன் மன  ஆசையை வாயை திறந்து பேச முடியாமல் வருத்தும் மகள். 
 
தங்கச்சி மகளுக்காகவும், 'தன் மகளை உங்க தங்கச்சி பசங்கள யாருக்காவது கொடுக்கனும்' தன் மனைவிச் சொன்னதுக்காகவும் என்று மெட்ராஸ் வந்து எதையும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்ப்பதே தன் வாடிக்கையாக கொண்ட உறவுக்காரனின் கதை.
 
வந்த இடத்தில் கௌவரம், பணம், சாதி வேற்றுமை என்று மூன்று குழப்பங்கள் தன்னுடைய தங்கையோட மகன்கள், மகள் வாழ்க்கையில் அதற்காக வறுமை போராடுகிறது. வேற்று சாதி காரணத்தினால் முதல் மகன் காதலித்த பெண்ணின் வாழ்க்கையும், கௌவரம் காரணத்தினால் இளைய மகனால் கெட்டுப்போன ஒரு பெண்ணின் வாழ்க்கையும், நிச்சயதார்த்தம் வரை வந்து நின்னுப்போன காரணத்தினால் மகள் இது மூன்றுக்கும் காரணக்கத்தாவே பெறாற அப்பன்காரன் தான்.
 
தன் மனைவியின் வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போன சோகதுடன் மேலும் அந்த மூன்று பெண்களுக்கு எப்படி நீதி வாங்கி கொடுக்கறார் என்பதே கதை. ஊருல இருக்கறவங்களுக்கு நல்லது செஞ்சு, தன் கையாளகாத தனத்தினால் தனது குடும்பத்தை சரியா பாத்துக்க முடியாத ஒருவரின் நிலை.
வழக்கம்போல் விசு படங்களில் வரும் நீண்ட வசங்களுடன் அவர்க்கே தனித்துவமான நகைச்சுவையுடன் டாஸ்க் மாதிரி வடிவமைத்து எடுக்கப்பட்டப்படம். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் மற்றும் உறவுகளின் மிக்கியத்துவமும் விசு படத்தில் சிறப்பாகவே இருக்கும். அதுலையும் வேடிக்கை எனது வாடிக்கை குறைந்தது அல்ல. 
 
-GEETHA PANDIAN 
Read 497 times
Login to post comments

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31