Log in

Register



Items filtered by date: Tuesday, 23 June 2020
தேவையான கம்மசியல் எலிமெண்ட் இல்லாமல் தான், படம்  அதிகம் பேசபடலையோ...
 
நடுநிசி நாய்கள் என்ற படத்தை திரு. கௌதம் வாசுதேவன் மேனன் அவர்கள் இயக்கத்தில் 2011 ல் வீரா மற்றும் சமீரா ரெட்டி நடித்த சைகோ திர்ளர். கதை அமைப்பிலும், வீட்டு அமைப்பிலும் நுணுக்கமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எடிட்டிங் மற்றும் கேம்ரா வேலைப்பாடுகள் மற்றும் பின்னனி இசை அனைத்தும் நல்ல கவனம் செலுத்தி எடுத்திருப்பர். கார்க்குள் எடுக்கப்படம் காட்சி தெளிவாக எடுக்கப்பட்டிருக்கும்.
 
ஒருவன் தனது சிறு வயதிலிருந்து ஒரு மாதிரியான தனிமையில் வன்கொடுமை சார்ந்த வாசனை நெருக்கடியில் வாழ்ந்து வருகிறான். அது அவனின் முதல் பாதிப்பு. மேலும் அவனை காப்பாற்றி அடைகளம் தரும் பெண், வயதில் பெரியவரானலும் அவளுடைய பாதுக்காப்பையும், வளர்ந்த பருவத்தில் அவனுக்கு அவனை வளர்க்கும் பெண்ணின் வாசனையும் அறிந்துக்கொள்கிறான். 
 
அதிலிருந்து மீள முடியாமல் நடக்கக்கூடிய எதார்த்த நிகழ்வுகளை அழிக்கறான். அந்த அடைக்களம் தந்த பெண்ணையும் கொன்று விடுகிறான்.  பெண்களை கை வசம் கொண்டு வந்து அவர்களைக் கொல்வதில் அவனுடைய சைகோ தனம் பிறிகிறது. 
 
மேலும், ஒரு நாள் இரவு வீட்டிற்கு தெரியாமல் காதலர்கள் படம் பார்க்கச்செல்கின்றனர். வீராவின் அடுத்த டார்கெட், சமீரா.  சமீராவை கொலை முயற்சிச்செய்து கடத்திக்கொண்டுப்போயி சித்திரவாதை செய்வதே படத்தின் வெகுநேர கதை. 
தன்னை கொல்ல வருபவர்களையும், தான் கொல்ல நினைப்பவர்களையும் கொல்லும் முறை என்று திரைக்கதை தெளிவாக இருந்தது. 
 
அந்த பையனின் கடந்த கால வாழ்க்கை பெரிதும் திரையில் விவரிக்க படவில்லை. ஒரு குழந்தை எப்படி எதைப்பார்த்து  வளர்கிறதோ அவ்வாறுதான் அது வளர்ந்த பின் நடந்துக்கொள்ளும் என்பதும், நம்மையும் தாண்டிச்செல்லும்  விஞ்ஞானம் இணையதளம் நல்ல வழியை விட கெட்ட வழிக்கு எளிமையில் கொண்டுச்சேர்கிறது என்பதும் படத்தின் இரு வரிகள்.
 
தேவையான கம்மசியல் எலிமெண்ட் இல்லாமல் தான், படம்  அதிகம் பேசபடலையோ...
 
-கீதாபாண்டியன்
 
 
 
Published in Classic Movies
பத்து வருட இடைவெளியில வெளி வந்த இந்த இரண்டு படங்களுக்கும் ஒற்றுமை இருக்கு. ராம்கி மற்றும் ஊர்வசி நடித்து 1995 வெளியாகிய மாயாபஜார் 1995 ஒரு நகைச்சுவை திர்லர். சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் பேரழகன் குடும்ப டராமாவில் ஒரு வெற்றிப்படம்.
 
இந்த இரண்டு படங்களிலும் ஹீரோ, ஹீரோனி இருவரும் இரு வேடங்கள் ஏற்று நடித்திருப்பர். மாயாபஜார் மற்றும் பேரழகன்  இரண்டு படத்திலும் உள்ள இரு கதாநாயகியில் ஒருவர் இறந்து விடுவார். மாயாபஜாரில் வரும் ஊர்வசி வெகுளியாக இருக்கும் கதாபாத்திரம் இறந்து விடும் மற்றும் பேரழகன் படத்தில் வசிகரமான ஜோதிகா கதாபாத்திரம் இறந்து விடும். 
 
இரண்டு படத்தில் நகைச்சுவைக்காக பலரும் இருந்தாலும் இரண்டு படத்தையும் நாம் ஒப்பிடும் பேச ஏற்றாப்போல் "விவேக்" நகைச்சுவை நிறைந்திருக்கும். ராம்கி மற்றும் சூர்யா இருவரும் அந்த அந்த காலகட்டத்தில் காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளை கொடுத்துள்ளதோடு  அவர்வர்க்கு என்று தனி பாணியைக்கொண்டு நடிக்கின்றனர்.
 
மாயாபஜார் வில்லன் தனது முகத்தை கதாபாத்திரம் ராம் மாதிரி மாற்றிக்கொண்டு வெகுளி ஊர்வசியை கொல்வான். பின்னர் வெகுளி பெண் இறந்தப்பின்னால், கிழவி வேடத்தில் இருக்கும் ஊர்வசியை அறிமுகம் செய்வர். இறுதியில் உண்மையான ராம், தன் மனைவியாக நடிக்க வந்த பெண்ணை தன் மனைவி என்றே நம்பி விடுவான். 
 
இதேப் போல் பேரழகன் படத்தில் கண் தெரியாத செண்பகம் கதாபாத்திரத்திற்கு சின்னா, தான் ஒரு ஆறு அடி உயரம் வாட்டசாட்டமா இருப்பேன் என்றுச் சொல்லி செணீபகத்திற்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பான். கண் பார்வைப்பெற்று அவள் மருத்துவமனையில் இருக்கும்போது, கார்த்திக் வந்து செண்பகத்தை பார்க்கும்போது, இறந்துப்போன தன் காதலின் கண்ணை இவளுக்கு வைத்திருப்பதை பார்த்துக்கோண்டு இருப்பான். உண்மையை தெரியாத செண்பகம் அது தன் சின்னா என்று நினைத்து விடுவாள். பின்னர் மனோரோமா வந்து சொல்லவே அந்த காட்சி விலகும். 
 
மேலும் தனிப்பட்ட முறையில் மாயாபஜார் படத்திற்கு அவர்கள் போட்ட உழைப்பும், பேரழகன் படத்திற்கு இவர்கள் போட்ட உழைப்பும் மாறுபடும். சொத்திற்காக நடக்கும் கொலையே படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச்செல்லும். பேரழகன் படத்தில்  கோபத்தாலும் வன்மத்தாலும் பிரியா இறந்துப்போயி, அவரது கண்களை செணாபகத்திற்கு வைப்பதே கதையை வேற வழியில் மாற்றியமைக்கும். 
 
மாயாபஜார் படத்தில் நல்ல கதாப்பாத்திரம் ராம் மற்றும் நடிக்க வந்த பெண்ணும் ஒன்னுச்சேர்வதும். பேரழகன் படத்தில் சின்னா, செண்பகம் ஒன்னு சேர்வது என்று சுபமாக படம் முடியும்.
 
சூர்யா உடல் ரீதியான மாற்றங்களை வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். ஊர்வசி பேச்சிலும் மொழியிலும் மாற்றம் காட்டி நடித்திருப்பார். கதை களம் மாறுப்படும் ஆனால் ஒரே பதார்த்தம் ஒன்றே. ஹீரோ ஹீரோனி இருவரும் இருவேடம் நடித்த இன்னும் சில படங்களும் வந்துள்ளது. இது நான் சமீபத்தில் பார்த்த இந்த இரண்டு படங்களின் சிறிய ஒப்பீடு...
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies