Log in

Register



Tuesday, 23 June 2020 06:10

நடுநிசி நாய்கள்-சைகோ திர்ளர்

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
நடுநிசி நாய்கள் நடுநிசி நாய்கள் 2011
தேவையான கம்மசியல் எலிமெண்ட் இல்லாமல் தான், படம்  அதிகம் பேசபடலையோ...
 
நடுநிசி நாய்கள் என்ற படத்தை திரு. கௌதம் வாசுதேவன் மேனன் அவர்கள் இயக்கத்தில் 2011 ல் வீரா மற்றும் சமீரா ரெட்டி நடித்த சைகோ திர்ளர். கதை அமைப்பிலும், வீட்டு அமைப்பிலும் நுணுக்கமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எடிட்டிங் மற்றும் கேம்ரா வேலைப்பாடுகள் மற்றும் பின்னனி இசை அனைத்தும் நல்ல கவனம் செலுத்தி எடுத்திருப்பர். கார்க்குள் எடுக்கப்படம் காட்சி தெளிவாக எடுக்கப்பட்டிருக்கும்.
 
ஒருவன் தனது சிறு வயதிலிருந்து ஒரு மாதிரியான தனிமையில் வன்கொடுமை சார்ந்த வாசனை நெருக்கடியில் வாழ்ந்து வருகிறான். அது அவனின் முதல் பாதிப்பு. மேலும் அவனை காப்பாற்றி அடைகளம் தரும் பெண், வயதில் பெரியவரானலும் அவளுடைய பாதுக்காப்பையும், வளர்ந்த பருவத்தில் அவனுக்கு அவனை வளர்க்கும் பெண்ணின் வாசனையும் அறிந்துக்கொள்கிறான். 
 
அதிலிருந்து மீள முடியாமல் நடக்கக்கூடிய எதார்த்த நிகழ்வுகளை அழிக்கறான். அந்த அடைக்களம் தந்த பெண்ணையும் கொன்று விடுகிறான்.  பெண்களை கை வசம் கொண்டு வந்து அவர்களைக் கொல்வதில் அவனுடைய சைகோ தனம் பிறிகிறது. 
 
மேலும், ஒரு நாள் இரவு வீட்டிற்கு தெரியாமல் காதலர்கள் படம் பார்க்கச்செல்கின்றனர். வீராவின் அடுத்த டார்கெட், சமீரா.  சமீராவை கொலை முயற்சிச்செய்து கடத்திக்கொண்டுப்போயி சித்திரவாதை செய்வதே படத்தின் வெகுநேர கதை. 
தன்னை கொல்ல வருபவர்களையும், தான் கொல்ல நினைப்பவர்களையும் கொல்லும் முறை என்று திரைக்கதை தெளிவாக இருந்தது. 
 
அந்த பையனின் கடந்த கால வாழ்க்கை பெரிதும் திரையில் விவரிக்க படவில்லை. ஒரு குழந்தை எப்படி எதைப்பார்த்து  வளர்கிறதோ அவ்வாறுதான் அது வளர்ந்த பின் நடந்துக்கொள்ளும் என்பதும், நம்மையும் தாண்டிச்செல்லும்  விஞ்ஞானம் இணையதளம் நல்ல வழியை விட கெட்ட வழிக்கு எளிமையில் கொண்டுச்சேர்கிறது என்பதும் படத்தின் இரு வரிகள்.
 
தேவையான கம்மசியல் எலிமெண்ட் இல்லாமல் தான், படம்  அதிகம் பேசபடலையோ...
 
-கீதாபாண்டியன்
 
 
 
Read 672 times

Related items

Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30