Log in

RegisterFriday, 07 August 2020 12:54

Kappela 2020 மலையாளம்

காதல் என்பது கண்ணுக்கு தெரியாத ஒன்று என்பதால் அதனை சிலர், அவர்கள் செய்ய நினைக்கும் கலவிக்கு போர்வையாக பயன்படுத்திக் கொள்கின்றனர். 
 
படம் முழுவதும் மலையாள வாசம் விசுகிறது. எளிமையான கதை களம். எதார்த்தமான குடும்பம், துறுதுறுவென்று சுற்றி திரியும் கதாநாயகி, கேரளத்து மலை அழகு, கொட்டற மழை, வீசும் காற்று, அடிக்கும் பனியென்று எழில் கொஞ்சம் அழகியலை பார்க்கும்போது மனதிற்கு இதமாக இருக்கிறது. 
 
Kappela  2020 வெளியாகிய இந்தப்படத்தைப்பற்றிய சின்ன அலசல் ...
 
எந்த நேரத்திலும் பலர் Online ல கெடையாக கிடக்கிறோம். நம்மில் பலருக்கும் நம் வீட்டு பக்கத்தில் குடியிருப்போரைப்பற்றி தெரியாது. நாம் செல்லும் பொது வாகனத்தில் நம் பக்கத்தில் அமைதியா அமர்ந்து வருவோர்கள் நல்லவர்களா கெட்டவர்களானே தெரியாது. ஆனால் 10 நிமிடத்துல இருந்து பல மணி நேரம் பஸ் பயணம், இரயில் பயணம் போன்று மேற்கொள்ளகிறோம். ஆனால் நம்மோட  Facebook and whatsapp நண்பர்களை பத்தி நமக்கு எதுவுமே தெரியவில்லையென்றாலும் தினமும் காலையில வர GOOD MORNING மெசேஜ் போதும் உலகத்துலையே அவங்கதான் நல்லவங்க. 
 
அத விடுங்கப் படத்த பத்தி வருவோம். அட..படத்துலையும் அதே கூத்துதான். 
 
நாம் போடற போஸ்ட்க்கு எல்லாரும் என்ன கமெண்ட் பண்ணுவாங்கனு பார்க்க ஐஞ்சு நிமிடத்துக்கு ஒரு முறை Online வரோம்.  நம்மில் பலருக்கு நம்மைப்பற்றி நலம் விசாரிக்க, ஆறுதல் கூற, நல்லதா நாலு வார்த்தை சொல்ல ஒருவர் தேவைப்படுகிறார்கள். அந்த ஒருவர் 100 ல் 80 சதவீதம் போன்ல தான் கிடைக்கறாங்க. அப்படி கிடைச்சா கண்மூடிதனமா நம்ப ஆரம்பிச்சறோம். சரி, எவ்வளவு நாள் தான் மெசேஜ் மட்டுமே பண்ணறது, ஒரு முறை போன்ல பேசலாம்னு நினைக்க தோன்னுது. 
 
சினிமா வரலாற்றுல வறுத்தெடுத்த ஒரு விஷயம் படத்துல,  "ஒரு நம்பர் மாத்திப்போட்டு வேற யாருட்டையோ பேசிட்டு, திரும்ப திரும்ப நமக்கு போன் பண்ணது யாரு? நம்ப போன் எடுத்தது யாரு?" என்று யோசித்து அவர்களிடம் பேசி ஒரு நட்பு உறவை வளர்கிறது, தான்.
 
சரி, எத்தனை நாளுக்கு தான் வேறவங்க போட்டோவ பாத்துட்டு பேசறது. ஒரு நாள் நேருல பாக்க தோன்னுது. ஒரு வேளை போட்டோ ஏற்கனவே பார்த்திருந்தால் பரவால.  பார்க்கலைனா என்ன நிலைமையாகறது. 
 
போன்ல பேசி, நேருல பாக்கப்போனால் நாபோ எதிர்பார்க்காத சூழ்நிலையெல்லாம் தான் நடக்கும். அப்பறம் நம்ப கிட்ட பேசுனது யாரு என்னனு தெரிஞ்சுட்டு நம்பி போவோம். அட, இது வரைக்கும் எல்லாருக்கும் தெரியும் அப்பறம் என்ன ஆச்சு, ....
அத எப்படி என் வாயால் சொல்லுவேன். 
 
இந்த இடத்துல, தமிழ படத்துல வெளியான "ஈட்டி" எடுத்துப்போம். ஹீரோ ஓரியட்டு படம்,  Wrong Number Connect ஆகி அப்பறம் நண்பர்களாக பேசி, Miss பண்ணி அப்பறம் நேருல பாக்கும்போது தப்பான ஒரு ஆளாக அறிமுகம் நடத்து அப்பறம் ஒருவரை ஒருவர் புரிஞ்சுப்பாங்க. திவ்யா வழியில் வரும் பிரச்சனையில் அகர்வா தலையிட்டு பிரச்சனை முடித்து வைப்பார். 
 
காதல் கோட்டை, எடுத்துக்கலாம். முன்னபின்ன பார்த்து பழக்கம் இல்லாத அஜித் மற்றும் தேவயாணி PCO பேசி  கடிதத்துல காதல் பண்ணறாங்க. ஆனால் நேருல இரண்டுப்பேரும் பாக்கற தருணம், ஆட்டோ ஓட்டும் அஜிதை ஒரு அதிகபிரசங்கிதனமான ஒருவராகதான்  தேவயாணி நினைக்கறாங்க. ஆனால் முடிவுல அவர்தான் தன்னோட காதல் கோட்டையின் அரசன் என்று தெரிந்து, இணைங்கின்றனர். ஒரு வேளை அதற்குப்பின் அஜித்  கெட்டவரா மாறி தேவயாணி வாழ்க்கையை கெடுத்திருக்கலாம். இல்லை, இருவரும் கல்யாணம் செஞ்சுட்டு நல்லாவும் இருந்திருக்கலாம். எதுவேணாலும் நடந்திருக்கும். 
 
அதே போல இந்த Kappela 2020 மலையாளம் படம் ஹீரோயின் ஓரியட்டு படம். இதுலையும் கிட்டதட்ட அதே போல தான் இருக்கும். Wrong number connect யாகி ஒரு ஆட்டோ ஓட்டும் ஒருவரை காதலிப்பாள்.  இவளோட அதிகப்படியான ஆசையே "கடலை பார்ப்பது" மட்டும்தான். போன்ல பேசியதை நம்பி, முகம் தெரியாதவரை பார்க்க வந்து, வில்லன் மாதிரி காட்சியளிக்கும் ஒருத்தனிட்ட இருந்து தப்பிச்சு, ஹீரோட்ட போயி மாடிக்கொள்கிறாள். காதல் எனும் போர்வையை கலவிக்காக பயன்படுத்தி கொள்கிறான் அந்த ஆட்டோக்காரன் . அவனிடமிருந்து எப்படி தப்பிச்சு வீட்டுக்கு வருகிறாள் என்பதே அடுத்த கட்டக்கதை அத படத்துல தான் பார்க்கனும். 
 
இப்படி, நமது பல அன்றாட வாழ்வியலை படமாக வெளி வருவதை தாண்டி, அதுல trendsetter இப்போ இருக்கறது  Social media and mobile phone மூலமாக நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகள்தான். 
எந்த கதையும் புதுசு இல்ல. நமக்கு எதுவும் தெரியவில்லையென்றாலும் தெரிந்துக்கொண்டு கெட்டத நோக்கிப்போற மாதிரி ஏற்கனவே எடுத்த மற்றும் நடந்த விஷயம்தான் திரும்பவும் வேற பாணியில் Trend ஆகுது.
 
-கீதாபாண்டியன் #geethapandian
 
 
Published in Movies this week
Palasa  1978 இந்த படமானது தெலுங்கில் 2020 ல் வந்த 40 வருட கதையாகும். ஒரு கிராமத்தில் சாதி வெறிப் பிடித்தவர்கள் கீழ் சாதி மக்களை அசிங்கப்படுத்துவதும், இழிவு செய்வதும், தீண்டாமை செய்வது,  ஏளானம் செய்வதுமே அவரவது தலையாய வேலையாகும்.  
 
பள்ளி பருவத்தில் இருந்த கதாநாயகனுக்கு சாதி வெறிப்பிடித்தவர்கள் மீது மிகுந்த கோபம் இருந்தது. அவன் எப்படி வன்மதோடு கொலை செய்ய ஆரம்பித்து போலீசாரால் தேடப்படும் குற்றவாளி ஆனான் என்பதே இந்த நாற்பது வருட கதை. 
 
கதையின் திருப்பமே, ஒரு பெண்ணை திருமணம் செய்ய, கல்லை தூக்கி பின்னல போடுவது மாதிரி.. ஒரு ஆம்பளையா முன்னாடி வந்து நிக்கவே அந்த தகுதி தேவைப்படுகிறது. பாகுபலி மாதிரி கல்லை தூக்கி தன்னை தானே நிருபித்துக்கொண்டு, அருவாளை எடுத்து சூரை யாட ஆரம்பிப்பான் கதாநாயகன்.
 
தமிழ் படமா வேங்கையும், அசுரனையும் எடுத்துக்கொள்ளலாம். "கோபக்காரன் அருவா எடுத்ததான்டா தப்பு, காவக்காரன் அருவா எடுத்த தப்புல்லடா"  என்று ஒரு வசனம் நிகழ்காலத்தில் வேங்கை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும், அதே போல "மேற்சாதியிரின் கொடுமைக்கு காவு வாங்கும் கடவுள் போல அசுர தனமாக வெறிக்கொண்ட கோபத்தோடு இறந்தகாலத்தில் அனைவரையும் வெட்டி சாய்பார்" நடிகர் தனுஷ். 
 
கிட்டதட்ட இந்த இரண்டு விஷயத்துக்காக அருவாள் எடுத்து வெட்ட ஆரம்பிப்பார்  palasa  நடிகர். அந்த மேல்சாதி வெறிப்பிடித்தவர்களை வெட்டி சாய்த்து விடுவார். பின்னர் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு அருவாள் எடுப்பார்.  ஊரில் பலரும் பயப்படக்கூடிய ஒருவராக மாறி விடுவார்கள். காலங்கள் போக போக அருவாளுக்கு, அரசியல் சாயப்பூசப்பட்டு அடியாளு போல அரசியல்வாதிகளுக்கு அடிபணிச்சு அவர்களுக்கு எதிரானவர்களை வெட்டி சாய்பான். 
 
எல்லாத்தையும் விட்டுட்டு குடும்பம், குழந்தையென்று எதார்த்த வாழ்க்கை வாழ முற்படும்போது, எதிரிகள் சும்மா விடமாட்டார்கள். பின்னர், அணிநயத்தை தட்டிக்கேட்கும் ஒருவரான தலை மறையில் எதிரிகளை வெட்டி சாய்த்து, தலையை மூட்டை கட்டி போலீஸ் ஸ்டேஷனிலே கொண்டு வந்து கொடுப்பான். இதற்கு பின்னர் தேடப்படும் குற்றவாளியாக மாறி விடுவான். 
 
வெறிக்கொண்டு போலீஸ்சாரால் கண்டுப்பிடிக்கப்பட்டாலும், அவன் இப்படியான சோககதையை கேட்டு, போலீஸ் விட்டுட்டு போயி விடுவார். தலைமறைவாக அவரது வேட்டை நடந்துக்கொண்டே இருந்தது. ஒரு பக்கம் 2018 வரை போலீஸ் இந்த கேஸ்சை முடிக்க முடியாமல் தேடிக்கொண்டே இருப்பார்கள். 
 
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான அடிமைகள் தேவைப்படுக்கின்றனர் என்பது நீசத்தமான உண்மை. அதுபோக..படத்தில் அழகான சிறு வயது காதல் ஒன்று உருவாகுகிறது. காலகாலமாக தெலுங்கு படத்தில் இருக்ககூடிய வெறியும் தெளிவாக இருக்கிறது. பொறுமையின் உச்சத்தில் பார்க்கிற அளவு எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. 
 
 
எப்படி, சிறு வயதியிலே ஒரு கொலைக்காரன் உருவாகுகிறான். வன்மம் என்பது எங்களை வாழ விடமாட்டேங்கறாங்களே என்ற அதீத கோபத்தின் கடைசி நிலை என்பதை பச்சையாக சொல்லக்கூடிய படம். 
 
-கீதாபாண்டியன் #geethapandian
 
 
Published in Movies this week
Wednesday, 29 July 2020 07:56

Nasir

 
படம் பார்த்த என்னுடைய அனுபவம். என் வீட்டிலும் ஒரு நசிர் இருக்கிறார் போன்ற அனுபவம்
 
எதார்த்த பின்னணியில் ஒருவருடைய ஒரு நாள் ஓட்டத்தை பக்குவமாக காட்டியுள்ளனர். கமெசியல் பின்புலமின்றி ஒவ்வொரு செயல்களையும் அழுத்தமாக வடிவமைத்துள்ளனர்.
 
 (உதாரணத்திற்கு, இயல்பான ஒருவன், எப்படி பொறுமையாக நிதானமாக சேவ் பண்ணுவான், குளிப்பான், சட்டைப்போடுவான். நடப்பான், ஒரு சிகரெட்டை எடுத்து அதனை பற்ற வைத்து, அதனை எத்தனை முறை புடித்து விட்டு பின்னர் எப்படி அதனை மிதிப்பான்.) இதை போன்று ஒவ்வொரு நிகழும் இயல்பு தன்மையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
 
ஒரு ஏழை எளிய மனிதன், அவனுடைய குடும்ப நிலை, வயதான அம்மா, மூளை வளர்ச்சியில்லாத குழந்தை, சொந்தகாரங்களால் வேலைகாரியாக நடத்தப்படும் மனைவி, ஒரு துணி கடை திறக்கறதுல இருந்து மூடற வரை எவ்வளவு வேலை செய்கின்றனர்.
 
கடனை அடைபதற்காக பணத்திற்காக முதலாளியிடம் காத்திருக்கும் தொழிலாளி, முதலாளி குடும்பத்திற்கு வேலைகாரனாக நடத்தப்படும் நசிர். தன் குழந்தையின் மருத்துவ செலவுக்கு போராடும் ஒரு தந்தை, மனைவியை சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டு மனமே இல்லாம இருக்கும் கணவன், என்று ஒருவருடைய ஒரு நாள் பயணத்தை அருமையாக வெளிப்படுத்தி, நமது உள்ளங்களை உருக்கும் அளவுக்கு ஒரு எதிர்பாராத உச்சக்கட்டத்தை கொடுக்கும் படம். இப்படி நசிருடைய ஒரு நாள்ளே கதை களம். 
 
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நசிர்(அப்பா, கணவன், தாத்தா, தம்பி, அண்ணா) கண்டிப்பாக இருப்பாங்க. அவர்களை நசிர் வடிவில் வைத்துப் பார்த்தது போல ஒரு அனுபவம்.
(திலிப் குமாரின் :ஒரு குமாஸ்தாவின் கதை : சிறுகதை தழுவல்) 
 
-எதார்த்த மனிதர்கள் பார்க்க வேண்டிய படம். #கீதாபாண்டியன் #Geethapandian
 
 
 
 
 
Published in Movies this week
Wednesday, 22 July 2020 06:05

AK Ayyappanum Koshiyum 2020 Malayalam 

நான் சமீபத்தில் பார்த்து மெய் மறந்து ரசித்தப் படம் இது. ஒரு சிறிய நிகழ்வு வன்மமாக ஆக்கப்பட்டு அதனால் எப்படிப்பட்ட பிரச்சனைகளே படம்.
 
ஐயப்பன் நாயரால் சந்தேக கேஸ்சில் இரவில் பிடித்து வரப்பட்டு, பிரபலங்களின் தொடர்புள்ளவர் கௌசி. அதனால் அவர்களுக்குள் ஒரு பேச்சு வார்த்தை நடக்கிறது. "ஒரு பத்து நாட்கள் ஜெயில இருங்க சார். அப்பறம் வெளிய வருவீங்க, அதுக்குள்ள இந்த கேஸ் ஒன்னுமில்லாமல் போயிடும்". என்று ஐயப்பன் சொல்லுவார். "எனக்கு மனைவி குழந்தைகள் இருக்கு. கிறிஸ்துமஸ் நான் அவங்களோட கொண்டாடனும் கிறிஸ்துமஸ் முடிந்தப்பிறகு நானே வந்து சரண்டர் ஆகறேனு" கௌசி சொல்லுவார். ஆனால் அதனை ஏத்துக்கொள்ளாமல்  ஜெயில போட்டுவிடுவர். 
 
அப்போது பத்து நாட்கள் சிறைக்கு பின்னர், வன்மம் தலைக்கு ஏறி, தனக்கு சரக்கு ஊறிக்கொடுத்தப்போது வீடியோ எடுத்திருப்பார். அதனை வெளியிட்டு நாயர் வேலைக்கு ஆப்பு வைப்பார் கௌசி. இப்படி வன்மம்த்தின் பெயரில் ஒருவரை ஒருவர் எதோயொரு வகையில் தாக்கிக்கொண்டு பிரச்சனை செய்வர். 
 
பிருத்திவ் ராஜ் என்ன நடிகர், அப்பா!!! அப்படியொரு முகபாவனை நிறையிருக்கும். ஒரு படத்தின் கதாநாயகனே ஒரு வில்லன். டரக் அடிட்டாக இருந்தாலும் ஒரு சில நல்லகுணங்கள் இருக்ககூடியவராக கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும். பெண்கள் மேலே கை வைக்ககூடாது என்ற எண்ணம். தான் குறி வைத்த போலீஸ் அதிகாரியோட ஒரு லேடியுடைய போலீஸ் யோட லைஃப் போச்சு என்றவுடன் அவர்களுக்கு வேலை வாங்கி தருவது என்றும், ஒரு வில்லனாக போலீஸ்சாரால் நடு வழியில் இறக்கி விடப்பட்டு மலைகளில் கஷ்டப்பட்டு நடந்து வருவது, செருப்பு காலை கடிப்பதாகவும் நடக்க முடியாம வேர்த்து விறுவிறுத்து தன் சட்டையை கலட்டி தோளில் வைத்தப்படி நடந்து வரும் பாவனை அதுல வரும் சின்ன சின்ன நுணுக்கமான அசைவுகள் என்று கதாபாத்திர வடிவமைப்பு அருமையாக இருந்தது. 
 
குழந்தைகள் மீது பாசம் வைத்திருக்கும் அப்பாவாக பிருவித் ராஜ், தன் மனைவி மீது அன்பாகவும் இருக்கிறான். தன் தகப்பன் செய்வது சில விஷயங்கள் பிடிக்கவில்லையென்றாலும் தன் மனைவி எதிர் கேள்விக்கேட்டால், மனைவியின் முன் அப்பாவை விட்டுக்கொடுக்காத கதாபாத்திரம் என்று கௌசி கதாபாத்திரம் தெளிவாக எழுதப்பட்டிருக்கும்.
 
தமிழ் சினிமாவும் மலையாள சினிமாவையும் ஒப்பிட முடியாது இருந்தாலும், ஒரு முக்கியமான கதாபாத்திரம் போலீஸாக இருந்தால், அரை கதவு திறக்கும்போது கூட அந்தயொரு ஸ்டெல் இருக்கும். கெத்தாக வந்து நிற்பது என்று வரையறைத்து கதாபாத்திரங்களின் வரையறை இருக்கும். ஆனால் ஐயப்பன் நாயரும் கௌசியும் படத்துல போலீஸ்ருக்கு எந்த வித ஸ்டெல் இல்லாமல் எதார்த்தமாக நடக்கறது, உக்கார்வது என்று பலதரப்பட்ட செயல்பாடுகள் எதார்த்தமானதாக இருக்கும். 
 
மலைவாழ் பெண்ணை திருமணம் செய்யுள்ள ஒரு போலீஸ் ஆண் என்பது, இந்திய அளவில் பலரையும் சரிசமமாக பார்ப்பதுப்போற் ஒரு எண்ணமுடையவர் எழுதிய கதாபாத்திரம் போற் உள்ளது. வீரமான தைரியமான எதிர் நிக்கும் மலைவாழ் பெண் கதாபாத்திரம் வரவேற்க தக்கது.  திரும்பவும் தமிழ் சினிமாவாக இருந்தால், போலீஸ் மனைவி ரொம்ப கெத்தாகவும், பணம் நகை மிகுதியாக காட்டிப்பட்டிருக்கலாம். கதாபாத்திர வடிவமைப்பிலும் அவருடைய குணங்களையும் அற்புதமாக காட்டியுள்ளனர். 
 
இறுதி வரை வன்மம் எந்த அளவிலும் குறையாமல் ஒன்டிக்கு ஒன்டி சண்டைப்போட்டப் பின்னரும் ஆழ்மனதில் தொடரும். கதாபாத்திர வடிவமைப்பும், மிதமிஞ்சிய நடிப்பும், ஒப்பிட்டு எதார்த்தமும் என் மனதை விட்டு நிக்காமல் நிற்கிறது. 
 
-கீதாபாண்டியன்
 
#Geethapandian
Published in Movies this week
 திரைக்கதையில் திக்கும் கதை--பெண்குயின்
 
பெண்குயின் சொன்ன உடனே நான் நினைச்சது இந்த படம் பெண்குயின் சார்ந்து வருக்கிற படமோ அல்லது அதுதான் இந்த படத்தோட முக்கியமான களம்னு நினைச்சேன். படம் பார்த்த பின்னாடிதான் தெரியுது. பெண்குயினுக்கும் படத்துக்கும் சமந்தமே இல்லனு. குயின் என்றால் ராணி என்று. கீர்த்தி சுரேஷ் தான் அந்த ராணி. 
 
படத்தின் ஒரு வரி என்னனு பார்த்தால் "தாய்மை" தாயின் குணத்தை பிரதிபலிக்கற கதையே பெண்குயின். "Mother is not a Role. It s Attitude".  
 
***இந்த படத்தின் திரைக்கதையே சற்று விமர்சனத்துக்குரியது***
 
நிறை மாத கர்பிணியாக காட்டப்படும் பெண் கீர்த்தி சுரேஷ். தன் 4 வயது குழந்தை காணாம போன பிறகு பைத்தியகாரி மாதிரி ஆயிட்டாள். தினம் தினம் வேதனை அழுகை மேலும் அவளின் செயல்கள் கணவனுக்கு வலியை ஏற்படுத்தியது. அப்படி இருந்ததால் கணவன் விட்டுட்டு போயிட்டான். தற்போது குழந்தையும் இல்லாமல் கணவனும் இல்லாமல் தனிமரமானவள். அந்த வலியிலிருந்து வெளியே வந்து இரண்டாவது கல்யாணம் செய்து தாம்பத்தியமும் செய்து இடையே தன் தொலைந்துப்போன குழந்தையும் நினைச்சிட்டு இருக்கிறாளாம். இரண்டாவது புருஷனிடம் இருந்த அன்பை முதல் புருஷனிடம் வைத்திருந்தால் அவன் விட்டுட்டு போயிருப்பானா? 
 
யார் அந்த கிட்னாப்பர் என்று தெரியாமல் குழம்பிப்போன கீர்த்தி சுரேஷ்க்கு தினமும் ஒரு மாதிரியான கனவு வருகிறது. அதில் ஒரு உருவமும் வருகிறது. ஏன்னென்றால் குழந்தை காணாமப்போன விஷயம் அவளுக்குத் தெரிவதற்கு முன்னாடி ஒரு பெண் குழந்தை மூலம் கடைசியா அவள் கேள்விப்பட்ட விவரம் அது. அதனால அவளது கனவில் அந்த உருவம் வருகிறது என்று வைத்துக்கொள்ளலாம். அந்த உருவத்தையே தொலைந்துப்போன குழந்தை கிடைத்தற்குப்பின் வரைகிறான். ஆனால் ஒரு காட்சியில் "என்னோட கனவுல வந்த உருவத்தை அவனும் வரைகிறானு" கீர்த்தி சுரேஷ் சொல்லுவாள். கேள்விப்பட்டது கனவாக வருகிறது. கடத்திட்டுப்போன உருவத்தை அந்த பையன் வரைகிறான். கடத்திட்டுப்போன உருவத்தைதான் கீர்த்தி சுரேஷ் கேள்விப்படுகிறாள். எனவே திரைக்கதையில்  வசனங்களை எழுதும்போது இதனை கவனிக்கவில்லை. 
 
படம் ஆரம்பத்தவுடன் சில நிமிடங்களின் அமைதி படத்தை பார்ப்பதற்கு சலிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. கதாபாத்திரங்களுக்கு அறிமுகம் இல்லாமலே படம் ஆரம்பிக்கிறது. 
 
அஜீ மாதிரி இன்னொரு குழந்தை தொலைந்துப்போக கூடும். அஜீ கிடைத்த பின்னர் ஒரு காட்சியில் நாய் மோப்பம் பிடித்துக்கொண்டு ஒரு வீட்டிற்கு செல்லும், அந்த டாக்டர் மீது சந்தேகத்தை உண்டுப்பண்ணும் சில காட்சிகள் வரும். உதாரணத்திற்கு டாக்டரை வீட்டு வாசலில் பார்த்தவுடன் அஜீ பயந்து அம்மாவின் பின்னாடி போவான்.  கீர்த்திக்கு அந்த கிட்னாப்பர் யார் என்று தெரியும் வரை அந்த டாக்டரின் பங்கு இருந்தது. அதனை தெரியப்படுத்தனும் என்பதற்காக அந்த கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது பச்சையா தெரியுது. இவைகள் மக்களை திசை திருப்ப எடுக்கப்பட்ட காட்சிகள் என்றே சொல்லலாம். டாக்டர் மற்றும் கீர்த்தி சுரேஷ் கேள்வி பதில்கள் காட்சி நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள உழைப்பு திரையில் தெரிகிறது. 
 
அந்த கிட்னாப்பர் கீர்த்தி சுரேஷ் வீட்டுக்கு வரும் காட்சியில் அது ஒரு ஆண் உருவம் என்பது போல தெரியும். இறுதி காட்சியில் பெண் உருவத்தில் வரும்போது உடம்பு அந்த அளவுக்கு ஸ்ட்ப்பாக இருக்காது. 
 
அஜீ தப்பிக்கும்போது, அந்த பெண்ணுடைய முகத்தை பார்ப்பதுப்போல் இறுதியில் flash back சொல்லப்படும். ஆனால் தன் அம்மாவின் தோழியாக பல முறை பார்த்த போதும் அந்த பையனுக்கு பயம் வருவதுப்போல ஒரு காட்சி கூட இருக்காது. 
 
ஒரு குழந்தையை தொலைத்த அம்மாவின் அன்பும், தவிப்பும், தனியாக படும் போராட்டமும் காட்டப்படும். ஆனால் உச்சக்கட்டத்தில் குழந்தை ஏன் காணாம போனது என்ற காரணம் கதையில் எதிர்ப்பாக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
 
அந்த காலத்தில் ஒரே குடும்பத்தில் 10,12 குழந்தைகள் இருந்தது. அவர்களுள் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பேசும் பழக்கம் பெற்றோர்களுக்கு இருந்தது. அதனை குழந்தைகளும் பெரிசாக எடுத்துக்க மாட்டாங்க. ஆனால் காலம் போக போக, வீட்டுக்கு ஒரு குழந்தை என்று ஆனது. அப்போது குழந்தை நல்லா படிக்கல என்றாலும் வேறன்ன காரணமென்றாலும் நம் வீட்டு குழந்தையை வேற வீட்டுக்குழந்தையுடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்தோம். அந்த ஒப்பிட்டுப்பேசுவதே ஒரு குற்றம் என்று சொல்வதை அதன் விளைவு சில குழந்தைகளின் எண்ணங்களை சைகோ தனமாக மாற்றுகிறது என்பதை ஒரு கருவாக எடுத்து ஒருவருடைய பலவீணத்தை பலமாக மாற்றிக்கொள்ளும் சைகோ பெண் விரித்த வளையிலிருந்து தப்பிக்கும் பெண்குயின் தன் குழந்தைகளை தற்காத்துக்கொள்ளும் கதையே இது.
 
கேம்ரா ஆங்கிள்  Long Shot யாகவும்  closeup shot அதிலே சற்று வித்தியாசமானதாக இருக்கும்.  எடுக்கப்பட்டிருக்கும். மலைகளைக் காட்டும் ஆங்கிள் பசுமையான ஒளிப்பதிவை தந்தது. மொத்ததில் நல்ல முயற்சி. 
 
-கீதாபாண்டியன்
 
 
 
Published in Movies this week
எதார்த்த காதல்
 
சென்னையோட அழகியலை சற்றும் மாற்றாமல் மலையாளிகளின் சென்னை வாழ்க்கையை காட்டும் படம்  Varane Avashyamund (2020). பெரும்பாலும் எதார்த்த படங்களுங்களாக மலையாள மற்றும் கன்னட,  படங்களைப்பார்த்து இப்படியெல்லாம் ஏன் எடுக்க மாட்டறாங்கனு கண்டிப்பாக வாழ்நாளுல ஒரு முறையாவது நினைப்போம். அப்படியொரு எதார்த்த நிலைப்பாட்டை எப்போதும்  நமக்கு தரும் படங்களுள் மலையாள படங்களும் ஒன்று.
 
அப்பார்மெட் வாழ்க்கையை அழகாக எதார்த்த பாணியில் உறவுகளைப்போல் காட்டியிருப்பர். நடுவுல பேசும் தமிழ் படத்திற்கு அழகுச்சேர்க்கிறது. 
இளமைக்காதலை ஆதரித்து முதுமை காதலை எதிர்க்கும் இந்த தலைமுறையினர்களை பற்றிய படம் இது.
 
அந்த வகையில Varane Avashyamund (2020). நடிகை சோபனா, ஊர்வசி மற்றும் துல்கர் சல்மான் மற்றும் பலர் அவகளது நடிப்புல வந்த இந்த படம். இளமை காதல், திருமணம், முதுமை காதல்னு  இந்த காலகட்டத்திற்கு ஏற்றமாதிரி ஒரு படம் இருக்கு. 
 
Online Whatsapp  ல Msg பண்ண ஒருத்தனுடைய காதல் அவன் எதையோ சொல்லிட்டானு  Block பண்ணி அப்பறம் unblock போட்டு காதலிக்கும் இளமை காதல் வழி மாறிப்போயி பிரியும் சூழ்நிலை. தனக்காக வாழ்க்கையை தொலைத்த தாயை விட மாற்றார் வீட்டு தாயின் அன்பைபுடன் ஒப்பிடும் மகள்.
 
ஒரே இடத்துல வேலைப்பாக்கற நண்பர்கள் லவ் பண்ணும்போது வருகிற சந்தோஷமும் பிரச்சனையும் அதனால வரும் பிரிவும்.
 
தேடி கண்டுப்பிடிச்சு, நமக்கு ஏற்ற ஒரு பையன கல்யாணம் பண்ணற பாடு பெரும்பாடு. 
 
வாழ்க்கையில நல்லா படிச்சு கல்யாணமாகி டைவஸ் ஆகி பல வருடம் குழந்தைக்காக மட்டும் வாழ்ந்த தாய் மனசுல பூக்கிற முதுமை காதலும் அதுக்கான அங்கீகாரத்துக்காக ஏங்கும் தாயும். 
 
பிறந்த இத்தனை வருடமா காதல் கல்யாணம்னு பெரிய திருப்புமுனையே இல்லாம நாட்டுக்காக போராடிய ஓய்வுப்பெற்ற சோல்ஜர். அவருக்கு சோபனா மேல் வருகிற காதல்னு  2019 உடைய எதார்த்த காதலை காட்டியிருப்பர்.
கடைசியில இளமை காதலர்கள் நிலைமை என்ன? முதுமை காதல் ஜெயிக்குமா? என்பதே மீதி கதை. நகைச்சுவையான காதல் உணர்வுகள் கலந்த படம். 
 
-கீதாபாண்டியன்
Published in Movies this week
முன்னணி நடிகர்களைக் கொண்டு வெளிவந்து நம்மை ஏமாற்றிய படம் தம்பி...
 
தன் மகள் செய்த ஒரு தவறை மறைக்க திரும்ப திரும்ப தப்புச்செய்கின்ற குடும்பத்துடன் தப்பு தப்பா செய்தவன் உள்ளே நுழைந்து நல்லவனாய் மாறுகிறான். 
 
காணாம போன தம்பி யார் அவனுக்கு என்ன ஆச்சு என்பதே கதை. தேவையில்லாம திரைக்கதை நீண்டுக்கொண்டு இருக்கிறது. டிரைலர்காக படம் எடுத்தமாறி இருந்தது. ஒரு குடும்பமே நடிக்குது. 
 
படத்தின் கடைசி நிமிடம் வரை உண்மையான சரவணன் யார் என்று விறுவிறுப்பைக் கொடுக்கிறது. ஜோதிகாவை மையமாக வைத்து படம் நகர்கிறது இருப்பினும் ஜோதிகாவின் பங்கு குறைவுதான். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நடிக்கும் படத்தின் எதிர்ப்பார்ப்பை உடைகிறது. 
 
பாதி வில்லனாக சத்யராஜ் தன்னுடைய பழைய முகத்தைக்காட்டிள்ளார். ஆரம்பத்துல இருந்து வில்லனா இருக்கறவன்  முடிவு மொக்கையாகுகிறது. 
 
கூடவே இருக்கறவன் கெட்டவனாகவும்,  பொறுக்கியை ஹீரோவாகவும் கதாபாத்திரம் சித்தரித்துள்ளனர். 
 
பழங்குடியினர் நல்வாழ்வு என்ற ஒரு விஷயத்தை (TOOL)  உதவியாக எடுத்து கதை அடுத்த அடுத்த கட்டத்திற்கு கதை நகருக்கிறது. ஆனால் அதனால் பழங்குடியினருக்கு என்ன உபயோகம் இருக்குனு படத்துல பார்த்தா தெரியும்.
 
குழந்தைகளை வளர்க்கும்போதே கண்காணித்து நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்க்கனும். அம்மா, பாட்டி, அக்கா, அப்பானு எல்லாரும் இருக்கறவன் தப்புப்பண்ணறான் அப்படினா அது யாரு மேல தப்பு. 
 
இப்படி கதைய போற போக்குல விட்டுட்டு பின்னாடி Flashback சொல்லி கதைய இழுத்துப்பிடிக்கறாங்க. 
 
இறுதியில் தவறை உணர்ந்தவர்கள் உண்மையான பாசத்துடன் ஒரே குடும்பமாக வாழப்போகிறார்கள் என்பதே முடிவு.
-கீதாபாண்டியன்
 
 
Published in Movies this week
Sunday, 19 April 2020 07:31

HIT THE FIRST CASE

நம் எதிரிகள் எல்லா நாளும் எதிரிகளாக இருப்பதில்லை. ஆனால் கூடவே இருக்கும் நண்பன் ஒரு நாள் துரோகியாக மாறுவான் என்பதில் படத்தில் திரும்பம் காட்டிள்ளனர். தெலுங்கு படமான HIT The first Case
 
HIT எனும் போலீஸ் Department ல் போலீஸாக இருக்கும் ஒருவன் வாழ்க்கையில் நேர்ந்த பல விஷயங்களினால்  மன நோய் வந்திருக்கும். நெருப்பை பார்த்து  மன அளவில் பாதிப்பு அடைந்துள்ளதால் அந்த மன நோய் அவன் செய்யும் வேலைக்கு தொந்தரவாக இருக்கும். 
 
அதற்காக சிறிது காலம் விடுமுறையில் ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பான். 
அப்போது தொடர்ச்சியாக இரண்டு பெண்கள் காணாமல் போயிருப்பார்கள். அதில் ஒருவர் விக்ரம் எனும் கதாநாயகனுக்கு காதலி. 
 
இந்த விஷயம் தெரிய வர அவர் திரும்பவும் பணியில் சேர்வார். இந்த கேஸ்களை விசாரிப்பதன் போது நடக்கற அதிர்ச்சி நிகழ்வுகளே HIT The first Case.
 
இது ஒரு புறம் இருக்கவே. மறுப்பறம் அனாதை இல்லத்தில் பல குழந்தைகள் வளர்கிறது. அதில் மூன்று குழந்தைகளில் ஒருவரை ஒரு தம்பதிகள் வந்து சீட் குலுக்கிப்போட்டு தேர்ந்தெடுத்துக்கூட்டிட்டு போவர். அப்போது ஒரு பனிரெண்டு வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை பத்து வயது நிரம்பிய பெண் குழந்தையிடம் ஒரு விஷயத்தைச்சொல்வால், "நம்மோட ஆறு வயது நிரம்பிய தோழிக்கு இருதய கோளாறு இருக்கறனால நீ அவங்க சொல்லி உதவிச்செய்ய சொல்வியா" என்று கண் கலங்கினாள். 
 
அப்போது அந்த பத்து வயது சிறுமி வாக்குறுதி கொடுத்து விட்டு அதனை மறந்து விடுவாள். பின்னர் அந்த ஆறு வயது சிறுமி இறந்து விடும். பணம் வந்ததும் மாறிப்போனவளை ஒரு பக்கம் பழி வாங்க துடிக்கிறவள். இந்த இரண்டு பக்கங்களும் சந்திக்கின்ற இடத்தில்  படத்தின் இரண்டாம் பாதியில் விறு விறுப்பாக கதை பயணிக்கும் அதுவே HIT The first Case.
 
காதலியின் நினைவுடன் பழைய விஷயங்களின் மன நோயாளியுடன் இந்த கேஸ் நடத்தும் கதாநாயகன். Case ஜெயிக்குமா? என்பது இப்போதும், விக்ரமின் மன நோயாளியின் காரணங்கள் பார்ட் -2 ல் வரும் என்பதுடன்  படம் முடிகிறது...
 
-கீதாபாண்டியன்
 
 
Published in Movies this week
இந்தப்படத்தை பார்க்க வேண்டாம். ஆனால் இந்த படத்தில் வரும் நிகழ்வுகளை நேரடியாக சந்திப்பிங்க. 
 
எட்டுத்திக்கும் பற...
 
வறுமை, அடையாளத்தை இழத்தல், மதம் மாற்று திருமணம், ஆணவக்கொலை, கொள்கை ரீதியாக போராடுபவர்கள், சாதி அரசியல், மானத்தை இழந்து சம்பாதிப்பவர்கள் இதுப்போன்ற எல்லா பிரச்சனையும் ஒன்று திரட்டி எடுக்கப்பட்ட படம் "எட்டுத்திக்கும் பற". 
 
சராசரியான மக்களாகியவர்கள், அவகளது அன்றாட வாழ்வில் இதுப்போல பல வித பிரச்சனைகளை கடந்துச்செல்கிறோம். இந்த பிரச்சனைக்குள்ளும் மாட்டிக்கொண்டுதான் இருக்கோம். ஆனால் அதனை சரிச்செய்ய முடியல என்பது தான் நிசத்தமான உண்மை. 
 
மகனுக்கு உடல்நிலை சரியில்ல தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க பணமில்லை. முற்றிலும் வறுமை.
சொந்த நிலத்தையும் அடையாளத்தையும் இழந்து தங்குவதற்கு வீடு இல்லாமல் "Care of platform" வாழும் அடிதட்டு மக்களின் நிலை. 
முதியோர் திருமணம், தனது வாழ்க்கை துணை இறந்து பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இல்லாமல் தவிக்கும் வெவ்வேறு மதத்தினரின் திருமணம்
 
ஒரே ஊர், வெவ்வேறு சாதியினரின் காதல். சாதிக்காரன் உடைய பொழப்பு. ஆணவக்கொலை.
கொள்கை ரீதியாக, அணிநயத்திற்கு எதிராக போராடுபவர்களின் அர்த்தமற்ற சாவு. 
அரசியல்வாதிகளின் சாதி அரசியல் எல்லா ஆளுங்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு, தன் சாதிக்கொரு இழுக்கு வந்தால் விடாமல் இரத்தத்தை சுவைக்கும் அரசியல்
மானத்தை பறிக்கொடுத்து ஆடிபாடி வயிற்றை கழுவும் பெண்கள். 
 
வன்மம், வஞ்சம், லஞ்சம், கொலை, கௌவரம், கற்பழிப்பு, சாதி,மத பாகுபாடு
..................................................... ........................................................ ........................................................................ .......................................................... ................................................... ..................................
 
இது ஒரு தொடர்கதை...நாட்டின் சாபகேடு...
 
இவைகள் இல்லாத ஒரு நல்ல சமூகம் வளர்வது தான் ஒரு விடியல் இல்லவிடில் பிணங்கள் மயமாகும் சமூகம்
 
-கீதாபாண்டியன்
Published in Movies this week
படத்தின் டிரைலர் தந்துள்ள எதிர்பார்ப்பை படம் பூர்த்திச்செய்யவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. குழந்தையின்மை என்பது ஒரு பிரச்சனை தான் ஆனால் தீர்வினை மெடிக்கல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ, கொண்டுச்செல்வதுப்
போல் காட்சி அமையவே இல்லை. 
 
தாராள பிரபு
 
ஸ்பேம் டோனேசன் என்று ஒரு முறையின் மூலம் குழந்தையை உருவாக்கலாம். ஆனால் டாக்டர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு வரும் அனைத்து ஆண்களுக்கு மட்டுமே பிரச்சனை. பெண்களுக்கு எந்த பிரச்சனை இருக்காது. ஒவ்வொரு ஆணின் பிரச்சனையையும் மாறுபடலாம். அதற்கு வேற வேற டிரிட்மென்ட்  கண்டிப்பாக பண்ணக்கூடிய கேஸ்சஸ் தான்.  அப்போ இயல்பான முறையில் டிரிட்மென்ட் பண்ணிருக்கலாமே. எந்த வகையிலும் இயலாமையை சரிச்செய்ய முடியாத பட்சத்தில் ஸ்பேம் டோனேஷன் பற்றிப்பேசியிருக்கனும். அத விட்டுட்டு
எடுத்த எடுப்பலையே ஸ்பேம் டோனேஷனை பற்றி கூறுவது மார்க்கெட்டிங் பண்ணற மாதிரி இருந்தது. 
 
வருபவர்களுக்கு கன்செல்டிங் பண்ணற காட்சியிருந்தது. பரிசோதனை பண்ணற  காட்சியோ, பலதரப்பட்ட டிரிட்மென்ட் பண்ணக்கூடிய காட்சியோ, அதற்கும் சரி செய்ய முடியல. அதுக்கு பிறகு ஸ்பேம் டோனேசன் நோக்கி வருமாறு காட்சிகள் அமைவே இல்லை. 
 
ஒரு ஆணின் ஒரு முறை வெளியேறும் விந்து அணுவில் மில்லியன் அணுக்கள் இருக்கும் என்பதும் அது குழந்தையை உருவாக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சரியான உணர்ச்சி இல்லாமல் எப்போமே மேன்ஸ்பேஷன் செய்வது உடலுக்குச் சரியானதா?
 
ஒரு ஆணின் ஸ்பேமில் 49 குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் அவருக்கும் மற்றக் குழந்தைக்கும் சமந்தமே இல்லாத மாதிரியான உணர்வை  தான் வெளிப்படுத்துகிறது. 
 
அந்த குழந்தைகள் அனைத்தும் வெவ்வேரு 
தாயின் வயிற்றில் பிறந்தாலும் ஒரே ஸ்பேம் தான் கருவை உருவாக்கியிருக்கும். ஜின் உடைய மரபு யார் வழியில் இருக்கும். அந்த குழந்தைகளுக்குள் வருங்காலத்தில் கல்யாணம் பண்ண இயலுமா?. இல்ல தங்கை தம்பியென்ற உறவுகள் உருவாகுமா? படத்தில் சொல்லவா இல்லை.
 
இந்த காலத்தில் கல்யாணமான அடுத்த நாளே, தனக்கு குழந்தை வேணுமென்று யாரும் நினைப்பதில்லை. ஆனால் இந்த கதாநாயகி நினைக்கிறாள். அது எதார்த்ததிலிருந்து பின் தங்கியுள்ளது. மேலும் கதாநாயகிக்குனு ஒரு முன்கதை சொல்லனுமென்றுச்சொன்ன மாதிரி இருந்தது.
 
கதாநாயகிக்கு கருப்பை பிரச்சனைக்கு கன்செல்டிங்  மட்டும் பண்ணிட்டு பரிசோதனையோ டிரிட்மென்டோ எடுப்பது போல் காட்சிகள் வரவே இல்லையே. குழந்தையின்மையை சரிச்செய்ய ஸ்பேம் டோனேஷனை மட்டும் போகஸ் பண்ணி படம் நகருது. மற்றக்கேள்விகளுக்கு பதில் படத்தில் இல்ல. படத்தின் இறுதிகட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு படம் நகவே போலீஸ் வரும் காட்சியை வைக்கனுமேனு வைச்சமாதிரி இருந்தது.
 
ஒரு நல்ல விஷயம் என்னனா நாம் நினைப்பது போல ஸ்பேம் பத்தி பேசவது அவ்வளோ டேபோ டாப்பிக் இல்லங்கறது மட்டும்தான். பழைய விவேக்கை பார்க்க முடிந்தது. ஹரிஸ்க்கு நல்ல முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.
 
மொத்தத்தில், ஸ்பேம் என்கிற வார்த்தையை பற்றி மட்டும் அடிக்கடி பேசிட்டு, அறிவியல் பூர்வமாகவும் மெடிக்கல் ரீதியாகவும் பேசப்படாத இந்த நகைச்சுவை படம் ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி வந்திருக்க வேண்டியவை. 
 
-கீதாபாண்டியன்
Published in Movies this week
Page 1 of 2

Calendar

« November 2020 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30