Log in

Register



Thursday, 05 March 2020 14:35

எதிர்பார்ப்பு

 
"கல்யாணத்திற்கு பின்னாடி காதலை மறக்கறதும் கணவனையே மறப்பதும் இன்றைய காதலாகிப்போச்சு"
 
இயக்குனர் மாரி நடித்து இயக்கும் 3 முடிச்சு யூடூப் தொடர் வெளியாகி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
 உயிருக்கு உயிராக காதலித்து 2018 கல்யாணம் ஆகி ஒருத்தரால ஒருத்தர் நிறைய சந்தோஷத்தை தொலைத்திருக்காங்க. அதனால இரண்டு வருடத்துல வாழ்க்கையே கசந்துபோச்சு. ஆனாலும் மனசுக்குள் இருக்கற அன்ப வெளிக்காட்டாமலே வாழ்றாங்க.
 
இரண்டுப்பேருமே மனசு விட்டு பேசாதது தான் அந்த சண்டைக்குக் காரணம். ஒரு நாள் பேசறாங்க. அவங்க அவங்க எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி மீண்டும் காதலர்களா மாறுக்கின்றனர். வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியும் சந்தோஷமா கழிக்கறாங்க. இதுக்கு இடையில் வீடு தேடி வருகிற பிரச்சனையை எப்படி கடக்கின்றனர் என்பதே தற்போது போகும் காட்சிகள். 
 
"கல்யாணத்திற்கு பின்னாடி காதலை மறக்கறதும் கணவனையே மறப்பதும் இன்றைய காதலாகிப்போச்சு", இன்றைய சமூக கட்டமைப்பு மனுஷனுக்கு ஒரு வித அழுத்தத்த கொடுத்திட்டேதான் இருக்கு. ஒரு 3 முடிச்சு என்பது கழுத்தில் கட்டுவது அதை ரொம்பவும் இறுக்கி கட்டினால் என்னாகும்.
 
மாரியின் திரைக்கதை, எடிட்டிங் மற்றும் அடுத்த எபிசோடுக் காட்சியைப்பற்றிய தூண்டுதலை இந்த காட்சியிலையே கொடுப்பது போன்ற அனைத்தும் அவருக்கே ஏற்ற பாணி. 
 
எதோயொரு காரணத்தினால் கதாநாயகி கடத்தப்படுகிறாள். அதற்கு யார் காரணம்? கதாநாயகன் நிலைமை என்னவாகும்? அடுத்த அடுத்த எபிசோடுகளில் தொடர்ந்து 3 முடிச்சு தொடரும்...நீங்களும் பாருங்க.
 
-கீதாபாண்டியன்
Published in Web series
Friday, 24 January 2020 14:44

When shy boy falls in Love

You Tube Being Thamizhan
 
When shy boy fall in love 
 
பொதுவா பசங்க பொண்ணுங்ககிட்ட பேச வெட்கப்படுறாங்க அப்படினா, இந்த  சமூகம் கொஞ்சம் வித்தியாசமாதான் பார்க்கும். 
 
அப்படியே அந்த பையன் அப்படி இருக்கறதனாலையே சில பொண்ணுங்களுக்கு பிடிச்சாலும் காதல், கல்யாணம் அப்படினு வாழ்க்கையில அடுத்தடுத்த லெவலுக்கு போகும்போது சின்ன சின்ன விஷயத்தைக்கூட நம்பக்கிட்ட பேச கணவன் வெட்கப்படறான். 
 
அப்படினா, ஒரு கட்டத்துக்கு மேல மனைவிக்கு கோபம் கண்டிப்பா வரும். அப்படி அவன் எதுக்கெல்லாம்  Shy ஆகிறான் என்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்ட  Web Series தான் When shy boy fall in love. 
 
இதுல ஒரு பொண்ணுகிட்ட காதல் சொல்றதுக்கு எப்படியெல்லாம் பேசுனா அந்த பொண்ணு மனச கவர முடியும் யோசித்து, கிட்ட போயி, அவங்கள பார்த்தவுடனே பேச முடியாம திக்கிப்போயி நிக்கறது. 
 
பொண்டாட்டி பக்கத்துல உக்காருவதற்கு, சாப்பிட்டிங்களானு கேட்பதற்கு, உடம்பு சரியில்லையானு கேட்பதற்கு, சாப்பாட்டுல உப்பு அதிகமா இருக்குனு சொல்வதற்கு... இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துல கூட பொண்டாட்டியிட்ட பேச கூச்சப்பட்டு திணறிப்போயி நிற்கிர ஒரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பில் இயக்குநர். திரு ஜெய் சங்கரின் திறமை வெளிப்படுது. 
 
பார்ப்பதற்கு "ஐயோ பாவம்" அப்படிக்கற முக பாவனையில எதார்த்தமாக நடிச்சிருக்காரு குரு. மேலும் நுணுக்கமான பல காமெடியிலும் கலக்கறாரு. 
 
Web series தான் அடுத்த தலைமுறையின் முதல் பொழுதுப்போக்காக இருக்கும். அப்படிப்பட்ட களத்தில் வெற்றிப்பயணத்தை ஆரம்பித்து  
சென்று க்கொண்டிருக்கிறது 
When shy boy fall in love 
 
-GeethaPandian
Published in Web series

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30