Log in

Register



Saturday, 25 December 2021 07:22

Decoupled - ரொமாண்டிக் காமெடி

Written by ISR Selvakumar
Rate this item
(0 votes)

ரொமான்டிக்காக ஒரு காமெடி பார்க்க வேண்டுமென்றால் Decoupled பார்க்கலாம். ராதாமோகன்தனமான ஒரு கேட்டட் கம்யூனிட்டி, ஜொள்ளு அங்கிள், பத்துப்பதினைந்து சின்னப்பசங்க மற்றும் ஸ்கூல் பசங்க. அங்கு வசிக்கிற இப்போதே பிரிந்துவிடலாம் என்று முடிவெடுக்கும் ஒரு இளம் கணவன் மனைவி. கிட்டத்தட்ட யுடியூபர்களின் சீரியல் செட்டப். ஆனால் மாதவனும், சர்வீன் சாவ்லாவும் இதைப் பார்க்க வைக்கிறார்கள். இருவரும் வொயிட் ஒயின் போல நமக்குள் இறங்குகிறார்கள். முப்பது சொச்ச நிமிடங்களுக்கு ஒரு எபிசோட். இளம் ஈகோ உரசலுடன் அடல்ட் ஜோக் கலந்த சின்னச் சின்ன சம்பவங்கள். கதையெல்லாம் கிடையாது. உன் பேச்சு கா என்பது போல உன் கூட விவாகரத்து என ஊடாடும் கணவன் மனைவி. டீன் ஏஜ் பொண்ணுகிட்ட எப்படிச் சொல்வது. உன் அம்மாவா, என் அம்மாவா. யார்கிட்ட முதலில் சொல்வது. இதுக்கு நடுவில் உன்னுடைய எக்ஸ் கூட நீ போ, என்னுடைய எக்ஸ் கூட நான் போகிறேன் என எல்லை மீறும் வெறுப்பேற்றல். இவ்வளவுதான் ஒவ்வாரு எபிசோடிலும் கதை. நாட்டுச் சரக்கு அடிப்பவர்களுக்கு இந்த வெள்ளை ஒயின்தனம் சற்று போரடிக்கலாம். பிண்ணனியில் சிரிப்பு சத்தம் சேர்த்தால் சிட்-காம் ஆகிவிடக் கூடிய அளவுக்கு மகா லேசாக பிரச்சனைகளை அணுகியிருக்கிறார் இயக்குநர். மேலோட்டமாக ஆண்டி இன்டியன், மாட்டுக்கறி, டிரம்ப் ஜோக்குகளும் வந்து போகின்றன. மாதவன் சேத்தன் பகத்துடன் போட்டியிடும் எழுத்தாளர். சர்வீன் சாவ்லா ஸ்டார்ட் அப் நிதி ஆலோசகர். பணப்பிரச்சனை இல்லாததால் மனப்பிரச்சனை. எந்த எபிசோடிலும் அது என்ன பிரச்சனை எனச் சொல்லவில்லை. அதனால் காட்சிகள் இலகுவாக இரசனையாக இருந்தாலும் ஒட்டவில்லை. படம் முழுவதும் அனைவருமே வாட்சப்பில் மெசேஜ் அனுப்பிக் கொண்டே உரையாடுகிறார்கள். நாமும் அதே மாதிரி இதைப் பார்க்கலாம். எதுவுமே மிஸ் ஆகாது. எல்லா ஓடிடி சீரிஸிலும் வருவது போல இதிலும் ரெண்டுங்கெட்டான் வயதில் (மாதவனுக்கு) ஒரு மகள் இருக்கிறாள். (உபயம் : ஃபேமிலிமேன்) விவாகரத்தெல்லாம் ஒரு சப்ஜெக்டா சார். சும்மா ஊதிவிடுங்க சார். இந்த தொனியில்தான் இந்த நெட்பிளிக்ஸ் சீரிஸ் இருக்கிறது. லைட்டா சிரிக்கலாம்! - ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்.

Read 5274 times
Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30