Log in

Register



Thursday, 02 April 2020 10:05

மீண்டும் கோகிலா

கமல் ஒரு சபல புத்திக்காரர்
 
கமலின் சபல நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம்.  வீட்டுல சுறுசுறுப்பாக காலை எழுந்து யோகா செய்து விட்டு பொண்டாட்டி கையால தலைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிச்சு பொண்டாட்டி அயன் பண்ணி வைச்ச துணியப்போட்டுட்டு, பொண்டாட்டி கையால் சாப்பிட்டு சூவ் போட்டுட்டு டிப் டாபா கிளம்பி ஆபிஸ் போயி ஈ ஓட்டிட்டு வேலையே செய்யாம அசதியில தூங்கற வக்கீல் தான் மீண்டும் கோகிலா ஹீரோ.
 
நம் ஐயர் ஆளவா மணிக்கு ஒரேயொரு மனைவியும் ஒரு பொன்னும் இருக்காங்க. ஆத்துக்காரிக்கு புருஷன் மேல அப்படியொரு பாசம் நம்பிக்க. ஆனால் சார்வால் பொண்டாட்டிய பொது இடத்துக்கு கூட்டிட்டு போகறதே கௌரவ குறைச்சல். நெட்டுல மட்டும் கௌரவம் காணாம போயிடும். அது மட்டுமா இன்னொரு பொன்னு மேல அப்படியொரு நெருக்கமாவில்ல இருக்கான். 
இவன் வக்கீள் மணியா? இல்ல வழியற மணியா?
 
கேஸ் சே கிடைக்காம இருந்து, நண்பர் ஒருத்தரால ஒரு நடிகையோட சவகாசம் கிடைக்குது. அவளோட கேஸ் இந்த மணி எடுத்து நடத்துனா நல்லாயிருக்கும் னு அந்த மேனாமினிக்கி ஆசைப்பட்டாள்...
மணிக்கும் கோகிலாக்கும் கேஸ் கிடைச்சுதுல அப்படியொரு சந்தோஷம். ஆனால் மணி வக்கீலா மட்டுமா இருந்தாரு. பொண்டாட்டிட்ட பொயிச்சொல்லிட்டு அந்த நடிகையிட்ட வழிஞ்சுட்டுதானே இருந்தாரு. வெளியுர் போறது என்ன? பாட்டுப்படறது என்ன, சைக்கிள் ஓட்டறது என்ன? கதை பேசறது என்ன? சபலத்தோட பாக்கறது என்ன?...
 
ஒரு வழியா, அந்த நடிகையோட கேஸ் ல ஜெயிச்சுக்கொடுத்திட்டாரு. நாளாக நாளாக கோகிலாக்கு பயம் வந்திருச்சு. எங்க தான் புருஷன் தன்னை விட்டுட்டு போயிடுவானோனு பயந்து நேரா அந்த மேனாமினிட்டப்போயி பேசி ஒரு வாங்கு வாங்கிட்டு வந்திட்டாள்.
கடைசியா அந்த நடிகையே கண்டப்படி பேசி மணிய அவமானம் படுத்திட்டாளே..
 
சுகத்துக்காகவும் என்னோட பணத்துக்காவும் என்னோட பேசுனவங்க மத்தியில நீங்க என்னை சிரிக்க வைச்சிங்க. உங்க கிட்ட நல்ல நட்புதான் எதிர்ப்பாத்தேன். ஆனால் நீங்க தப்பான எண்ணத்தோட பழகியிருக்கேங்களே 
ஐ சே யு கெட்அவுட் னு சூட்டிங் ல எல்லாத்து முன்னாடியும் கத்திட்டாள். 
 
 பெத்த பிள்ளை உயிருக்கு போராடிட்டு கிடக்கு. அந்த நேரத்துல அந்த நடிகைதான் வந்துக்காப்பாத்துனாள். மணி, தன்னோட தவற புரிச்சுட்டு மீண்டும் கோகிலாட்டையே வந்துட்டான். 
 
கையில வெண்ணெய் வைச்சிட்டு நெயிக்கு அழச்சாங்கற கதை தான் மணியுது.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies

சில படங்களைப் பார்க்கும்போது இறுதிக் காட்சி முடிவதற்குள்ளாகவே பார்வையாளர்கள் எழுந்து கிளம்பத் தொடங்குவர். இனி அடுத்து எல்லாம் ஒன்றாகச் சேர்வார்கள், யாவும் நலமாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்முடிவும் அவ்வாறுதான் இருக்கும். இரண்டரை மணிநேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் கடைசி இரண்டு மணித்துளிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எழுந்து ஓடுவார்கள். வேறு சில படங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். இறுதிக் காட்சி முடிந்து, படமும் முடிந்து திரையணைந்தால்கூட எழுந்து செல்லும் ஊக்கமில்லாமல் அப்படியே அமர்ந்திருப்பார்கள். படம் அவர்களை அவ்வளவுக்குப் பாதித்திருக்கும். பெரும் சோகம் அவர்களை எழ முடியாதபடி அழுத்திப் பிடிக்கும். துக்க வீட்டிலிருந்து படக்கென்று எழுந்து போக முடியாத இறுக்கம்போன்ற ஒன்று அவர்களைச் சூழ்ந்துவிடும். நானும் அப்படிச் சில படங்களில் எழுந்து போக மனமின்றி உட்கார்ந்திருக்கிறேன். அரங்கமே வெளியேறிய பிறகு கடைசியாளாய் எழுந்து போயிருக்கிறேன். அப்படி என்னைத் துயரில் மூழ்கடித்த படங்களின் ஒன்று 'மூன்றாம் பிறை.'

மூன்றாம் பிறையில் பாலு மகேந்திரா முன்வைத்த ஆண் பெண் உறவு, காதல் என்ற வளையத்துக்குள்ளேயே வராது. அன்பின் வழியே ஓர் உறவு நிலை இயல்பாகக் கனிந்து தொடர்ந்து செல்லும். அதைக் காதல் என்ற வழக்கமான சட்டகத்துக்குள் அடக்குவது தவறுதான். விஜிக்கும் சீனுக்கும் உள்ள இயல்பை மீறிய பாசப்பிணைப்பு மேலும் என்னாகிறது என்ற புள்ளியில் பிரிவே இறுதித் தீர்ப்பாகிறது. ஏனென்றால் சீனுக்கு விஜியின்மீது இருந்தது காதலே என்றாலும் விஜிக்குச் சீனு மீது இருந்தது முதிராச் சிறுமியின் மனத்தில் பெருகும் பேரன்புதான்.

உதகையைப் பற்றி எத்தகைய திரைப்படங்கள் வந்தாலும் மூன்றாம் பிறை உருவாக்கிய துயரத்தை அவற்றால் கடக்க முடியவில்லை. பெருந்துக்கத்தைத் திரையில் தீட்டுவதற்குரிய மலைநிலமாக வெவ்வேறு இயக்குநர்கள் உதகையைப் பயன்படுத்திக்கொண்டனர். பிற்பாடு வந்த 'இதயத்தைத் திருடாதே'விலும் அதேதான் நிகழ்ந்தது. இராபர்ட்-இராஜசேகரன் எடுத்து 'மனசுக்குள் மத்தாப்பு' திரைப்படத்திலும் அவ்வாசனையை முகரலாம். தனிப்பட்ட முறையில் பாலுமகேந்திராவின் விருப்பத்திற்குரிய வெளிப்புறப் படப்பிடிப்புத் தளமும் உதகைதான். படங்களில் பார்த்த உதகையின் பசுமை நேரில் செல்கையில் இல்லாமற் போவதும் உண்டு. பல்வேறு வண்ண அழுத்தங்களைக் கொடுத்து உதகையின் இயற்கையழகை மீறிய காட்சிகளாக அவற்றைக் காட்டுகிறார்கள். பாலுமகேந்திரவின் ஒளிப்பதிவில் இயற்கையழகு மட்டுமே படம்பிடிக்கப்பட்டிருக்கும். சூரியனுக்கும் ஒளிப்பதிவாளர்க்குமான நேரடி வினை அது.

மூன்றாம் பிறையைப் போன்ற இன்னொரு படத்தையோ, அல்லது அதற்கு நிகரான மற்றொரு படத்தையோ பாலுமகேந்திராவினால்கூட பிற்காலத்தில் ஆக்க முடியவில்லை. அதுதான் மூன்றாம் பிறையின் சிறப்பு.
- இ.என்.பாபு

Published in Classic Movies

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30