Log in

Register



மாணவர்களுக்கு அறிவுப்பசியை விட காமபசியும் காதலும்தான் 
 
திரைப்படங்களிலும் ஆசிரியர்கள் மீது மரியாதையும் அன்பும் இருக்கற பல காட்சிகளைப் பார்த்திருப்போம். அதில் 1979 களில் சினிமாவின் கனவு கன்னி  ஷோபா, ஆசிரியராக நடித்த அழியாத கோலங்கள் காலத்தால் அழியாதவை. 
 
குழந்தைதன்மையிருந்து இளமைப்பருவத்திற்கு எட்டிப்பார்க்கும் ஒரு கட்டத்தில் (13-16) வயதில் இருக்கும் மூன்று பசங்களின் அனைத்து சேட்டையும் தான் கதை. அவங்க ஊருக்கு புதுசா வந்திருக்கும் பெண் ஆசிரியரை காதலிக்கும் ஒருவன், அவங்களுக்கு எது வேணாலும் செய்ய நினைப்பவன். ஆனால் அவங்களுக்கு நம்மை விட
முக்கியமானது நிறைய இருக்குதுனு தெரிஞ்சுக்கிட்டு அந்த இளம் முதல் காதலை மனசுக்குள்ளே வைச்சு தவிப்பான். 
காலம் போன காலத்தில் அந்த ஆசிரியர் உடைய மரண செய்தியைக்கேட்டு பழைய விஷயத்தை நினைத்துப்பார்ப்பதே அழியாத கோலங்கள். 
 
இந்த படம் பாலுமகேந்திர உடைய சரித்திர படைப்புகளுள் ஒன்று. ஒருவர் தன்னுடைய இளமை பருவத்தை எவ்வளவு ரசித்திருந்தால்தான் இவ்வளவு நுணுக்கமான கதை அம்சம் பொருந்தி வந்திருக்கும். இந்த படத்தில் முக்கியமான மூன்று கதாபாத்திரத்தின் குணங்களில் நிறைய வித்தியாசத்தை அதாவது மனிதனே இந்த மூன்று வகைதான் என்பது போல செதுக்கிருப்பார். 
 
முதல் மாணவன் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடியவன். பொதுவாக எந்தவொரு விஷயத்திலும் அதன் உச்சக்கட்டத்தை பார்ப்பதற்குள் வேறொரு சப்பையானதை தேடி போகக்கூடியவன். பல நேரங்களில் சட்டைக்கூட போடாம சுற்றுவான். பார்ப்பதற்கே வெகுளியாக சோடாபுடி கண்ணாடி போட்டு சின்ன சின்ன சந்தோஷங்களை கூட சுவாசிப்பவன். 
 
இரண்டாவது மாணவன் பத்தாம் வகுப்பு படிக்கறான்.  நல்லா வாட்டசாட்டமா  இருக்கக்கூடியவன். செக்ஸ் சமந்தமான புத்தகங்கள் படித்து வளர்த்திக்குறான் அறிவ. இந்த பையனா இப்படியென்று கேட்கும் அளவிற்கு இருந்துட்டு எல்லா தில்லாங்கடியும் செய்வான். செக்ஸ் சமந்தமா பேசி மற்ற பசங்களையும் வசப்படுத்தக்கூடியவன். 
 
மூன்றாவது மாணவன் பத்தாம் வகுப்பு வீண் வம்புகளுக்கு செல்லாதவன் இந்த இரண்டுப்பேருக்கும் நடுநிலையானவன். மனசுக்குள்ள காதல் கோட்டையே தன் ஆசிரியருக்காக வைத்துள்ளான் என்றாலும் அன்பும், மரியாதையும் அதிகமாகவே உள்ளவன். தனக்கு பிடிச்சவங்கள ஒரு வார்த்தை தப்பா பேசுனா நண்பனா இருந்தா கூட உதறி தள்ளிட்டுப் போயிடுவான். டீச்சருக்கு உதவி செய்யும் நண்பனாக இருப்பான்.
எல்லாத்தையும் மனசுக்குள்ளையே போட்டு தவிப்பவன். இப்படி மூன்று கதாபாத்திரத்திற்கு பின்னாலையும் ஒரு காரணம் இருக்கு. 
 
எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் தெளிவாக நடிக்கக்கூடியவர் ஷோபா. இதில் அமைதியான மாணவர்களுக்கு பிடித்த எதார்த்தமான டீச்சராக நடித்திருப்பார். இவர் கல்யாணம் பண்ணிக்கப்போறவர், படத்தின் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் ஒரு கணவன் மனைவிக்குரிய புரிதல் இருக்கும். 
 
மக்களுக்கு உதவிச்செய்கிற பெயரில் மற்றவரிடம் விஷயத்தை கறக்க கூடியவர் அந்த ஊர் தபால்காரன். காமபசிக்கு தீனி தேடக்கூடியவன். நாட்டியகாரப் பெண்ணை நடனம் ஆடும்போது பார்ப்பதற்கும், இடிந்த கோவிலுள்ள பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பவர்க்கும் இருக்கும் பெண்மையின் வித்தியாசம் அவங்களோட எதார்த்த நடிப்பு. 
 
இளம் பருவத்தை தொடும் மாணவர்களுக்கு அறிவுப்பசியை விட காமபசியும் காதலும்தான் அவனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துக்கிறது என்பதைக் காட்டியிருப்பார்.
 
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்த பாணியில் ஒரு தனி தன்மையுடன் எழுதிருப்பார். இப்படி ஒரு ஊரு. அதுல இந்த மாதிரி மக்கள் இருக்கானு வித்தியாசபடுத்தி காட்டிருப்பது பாலுமகேந்திரவுடைய தனி சிறப்பு.
 
-கீதாபாண்டியன்
 
Published in Classic Movies

சில படங்களைப் பார்க்கும்போது இறுதிக் காட்சி முடிவதற்குள்ளாகவே பார்வையாளர்கள் எழுந்து கிளம்பத் தொடங்குவர். இனி அடுத்து எல்லாம் ஒன்றாகச் சேர்வார்கள், யாவும் நலமாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்முடிவும் அவ்வாறுதான் இருக்கும். இரண்டரை மணிநேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் கடைசி இரண்டு மணித்துளிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எழுந்து ஓடுவார்கள். வேறு சில படங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். இறுதிக் காட்சி முடிந்து, படமும் முடிந்து திரையணைந்தால்கூட எழுந்து செல்லும் ஊக்கமில்லாமல் அப்படியே அமர்ந்திருப்பார்கள். படம் அவர்களை அவ்வளவுக்குப் பாதித்திருக்கும். பெரும் சோகம் அவர்களை எழ முடியாதபடி அழுத்திப் பிடிக்கும். துக்க வீட்டிலிருந்து படக்கென்று எழுந்து போக முடியாத இறுக்கம்போன்ற ஒன்று அவர்களைச் சூழ்ந்துவிடும். நானும் அப்படிச் சில படங்களில் எழுந்து போக மனமின்றி உட்கார்ந்திருக்கிறேன். அரங்கமே வெளியேறிய பிறகு கடைசியாளாய் எழுந்து போயிருக்கிறேன். அப்படி என்னைத் துயரில் மூழ்கடித்த படங்களின் ஒன்று 'மூன்றாம் பிறை.'

மூன்றாம் பிறையில் பாலு மகேந்திரா முன்வைத்த ஆண் பெண் உறவு, காதல் என்ற வளையத்துக்குள்ளேயே வராது. அன்பின் வழியே ஓர் உறவு நிலை இயல்பாகக் கனிந்து தொடர்ந்து செல்லும். அதைக் காதல் என்ற வழக்கமான சட்டகத்துக்குள் அடக்குவது தவறுதான். விஜிக்கும் சீனுக்கும் உள்ள இயல்பை மீறிய பாசப்பிணைப்பு மேலும் என்னாகிறது என்ற புள்ளியில் பிரிவே இறுதித் தீர்ப்பாகிறது. ஏனென்றால் சீனுக்கு விஜியின்மீது இருந்தது காதலே என்றாலும் விஜிக்குச் சீனு மீது இருந்தது முதிராச் சிறுமியின் மனத்தில் பெருகும் பேரன்புதான்.

உதகையைப் பற்றி எத்தகைய திரைப்படங்கள் வந்தாலும் மூன்றாம் பிறை உருவாக்கிய துயரத்தை அவற்றால் கடக்க முடியவில்லை. பெருந்துக்கத்தைத் திரையில் தீட்டுவதற்குரிய மலைநிலமாக வெவ்வேறு இயக்குநர்கள் உதகையைப் பயன்படுத்திக்கொண்டனர். பிற்பாடு வந்த 'இதயத்தைத் திருடாதே'விலும் அதேதான் நிகழ்ந்தது. இராபர்ட்-இராஜசேகரன் எடுத்து 'மனசுக்குள் மத்தாப்பு' திரைப்படத்திலும் அவ்வாசனையை முகரலாம். தனிப்பட்ட முறையில் பாலுமகேந்திராவின் விருப்பத்திற்குரிய வெளிப்புறப் படப்பிடிப்புத் தளமும் உதகைதான். படங்களில் பார்த்த உதகையின் பசுமை நேரில் செல்கையில் இல்லாமற் போவதும் உண்டு. பல்வேறு வண்ண அழுத்தங்களைக் கொடுத்து உதகையின் இயற்கையழகை மீறிய காட்சிகளாக அவற்றைக் காட்டுகிறார்கள். பாலுமகேந்திரவின் ஒளிப்பதிவில் இயற்கையழகு மட்டுமே படம்பிடிக்கப்பட்டிருக்கும். சூரியனுக்கும் ஒளிப்பதிவாளர்க்குமான நேரடி வினை அது.

மூன்றாம் பிறையைப் போன்ற இன்னொரு படத்தையோ, அல்லது அதற்கு நிகரான மற்றொரு படத்தையோ பாலுமகேந்திராவினால்கூட பிற்காலத்தில் ஆக்க முடியவில்லை. அதுதான் மூன்றாம் பிறையின் சிறப்பு.
- இ.என்.பாபு

Published in Classic Movies

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30