Log in

Register



Thursday, 20 February 2020 04:10

Director Re- Entry Bharathiraja

பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை சினி பிக்
 
மண் மணம் மாறாமல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பல படங்கள் இயக்குனர் பாரதிராஜாவால் எடுக்கப்பட்டவை. அப் படங்களில் ஏராளமா கிராமத்து சித்திரங்களை திரை சித்திரங்களாக வடிவமைத்து காட்டிருந்தார். பல நடிகைகளையும், நடிகர்களையும் உருவாக்கி வளர்த்து விட்டவர். திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எண்பதுகளில் (80 s) கலக்கியவர். கடந்த சிறிது காலமாக குணச்சித்திர நடிப்பில் கவனம் செலுத்தி இன்று மறுபடியும் புத்துணர்வு கொண்டு எழுந்து வந்திருக்கார்.
 
அதுதான் மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம். நாகரீகம் கெட்டுப்போச்சு, வழக்கம் வழக்குலைந்து போச்சு, பாட்டி தாத்தா பாசமெல்லாம் பழசாகிப்போச்சுனு சொல்லற விதமா ஒரு படம் வெளி வரப்போகுது. 
 
வெளி நாடுகளில், கிராமத்து பாட்டி, பேரனுக்கு துணி மாற்றி விடுவதும், தலையில் எண்ணெய் தேய்ப்பதும் பேரன் பேத்திக்கு பாசம் போல தெரியல. பாட்டி தாத்தா உடைய  பாசம் என்ன என்றாலே தெரியல. இதற்கு இடையில் மொழியொரு தடையாக இருக்கிறது. அதை விட அந்த நாட்டில் குழந்தை பாதுக்காப்பு சட்டம் கடுமையாக உள்ளது. எதற்காகவும் எப்பவும் யாரும் யாருமேலையும் போலீஸ் கேஸ் போடலாம்.
 
இதில் கலாசார வித்தியாசமும் தெரியுது. தலைமுறை இடைவெளி மற்றும் பாசத்தை பற்றி தெரியாமல் வளரும் குழந்தைகள், வளர்க்கும் பெற்றோர். அதற்கு ஒரு வகை காரணமாக அறிவியலும் விஞ்ஞானமும் இருக்கிறது. 
 
ஒரு காலகட்டத்துல தமிழ் கலாசாரத்துல, பாட்டி கிள்ளிட்டாங்க, தாத்தா அடிச்சிட்டாங்கனு பெற்றோரிடம் சொன்னா கூட அத பெருசா எடுத்திக்க மாட்டாங்க. அந்த நிலை எந்த இடத்துலையும் மாறுதுனு சொல்லிருக்கு இந்த சினி பிக்.
 
80ஸ் முதல் மரியாதை வெற்றிக்கொண்டாடம். 2020 ல் மீண்டும் ஒரு மரியாதை எப்படி இருக்கும் தியேட்டரில் போயி பாக்கலாம்.
 
-கீதாபாண்டியன்
Published in Reviews