Log in

Register



ஒரு அண்ணன் இருந்தால் தங்கச்சி என்றுச்சொல்லக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்
 
நடிகர், ஜீவா ஒரு இடைவெளி விட்டு நடித்து வெளியாகியிருக்கப்படம் சிறு. ஜிப்ஸி மாதிரி ஒரு படத்தை மக்கள் இடத்தில் கொண்டுப் போயி சேர்க்கவும் ஜீவாவை மக்களுக்கு ஞாபகப்படுவதற்காக  எடுக்கப்பட்ட படம் போல் சீறு தெரிகிறது. 
 
 ஜீவாவின் நடிப்புல ஆசை ஆசையாய், தென்னாவெட்டு, ஈ, கோ, நண்பன், ஜிப்ஸி னு சில படங்கள் அவரு பயணத்துல முக்கியமான படங்கள்.
 
சீறு படத்தில் கதாநாயகிக்கு குறைந்த அளவு காட்சிகளே.  காமெடி நடிகர்கள் இருக்காங்க. ஆனால் படத்துல காமெடி பத்தல. திரைக்கதையில ஒரு காரணமே இல்லாத காட்சிகளாக வருது. ஒரு முட்டாளை அடையாள படுத்துவதற்கான காட்சிகள் பார்வைக்கு புதுமையாக இருக்குது. தங்கச்சிக்கு இருக்ககூடிய பிரச்சனை புதுமை வாய்ந்தாக இருக்கு. 
 
படத்துல ஒரு லோக்கல்  சேனல வைச்சு  நடத்தற ஜீவா, அநியாத்த தட்டிக்கேக்கறாரு. அந்த ஊருல இருக்கற ஒரு பெரிய தலைக்கட்டுக்கு எதிரியாக ஆகறாரு. அவர் மூலமா சென்னையில இருக்கற பிரபலமான அடி ஆளுட்டப் பேசி ஜீவாவை மர்டர் பண்ணச்சொல்லறாரு. 
சமந்தமே இல்லாம, வீட்டிற்கு கொல்ல வருகிறவனுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பின்னர் அப்படியே படத்தின் கரு மாறுகிறது. 
 
அந்த கொல்ல வருகிற வில்லனை நல்லவனாக நினைப்பதற்காவே தங்கச்சி சென்டிமென் வைக்கப்பட்டதுப்போல் தெரிகிறது. மேலும் சாதிக்க ஆசைப்படும் பெண்களை வளர விடமாட்டாங்க. அப்படிங்கற கண்ணோட்டத்துல கதை நகருது. அப்பறம் வேறொரு வில்லனை முக்கியமாகப்படுகிறது. 
 
ஒரு அண்ணன் இருந்தால் தங்கச்சி என்றுச்சொல்லக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். ஆனால், படத்தில் பத்து பெண்கள் சேர்ந்து ஒரு கொலை முயற்சி பண்ணலாம் என்று வன்முறையைச்சொல்லி தர மாதிரி கதை அம்சம் இருக்கு. 
 
ஒரு கூட்டத்துல இருக்கறவனை அதே கூட்டத்துல இருக்கறவன் முதுகில் குத்தறங்கறது, யாரா இருந்தாலும் பணம், பொறாமை, சுயநலம் இருந்தால் நமக்கு ஆபத்து வெளியே இல்ல. பக்கத்துலையேதான் இருக்குனு அர்த்தம். 
 
அதே மாதிரி அன்பளிப்பாக நாம் தருகிற பண உதவி நமக்கே லஞ்சமாக கொடுத்தால் அது மிகவும் மோசமான மன நிலை என்பதும் படத்தில் யோசிக்க வைக்குது.
 
 உச்சக்கட்டத்துல தன் தங்கச்சியை காப்பாற்றிவனை எப்படி தங்கச்சி முன்னாடி நிறுத்த போறான். பாதிக்கப்பட்ட பல தங்கச்சிகளை எப்படி வில்லனிடமிருந்து காப்பாற்றப்போறான் என்பதுதான் கதை. 
 
கீதாபாண்டியன்
Published in Reviews