Log in

Register



ஒரு மாதிரி காட்சி
 
 
ஸ்பேம் என்கிற வார்த்தையை பற்றி மட்டும் அடிக்கடி பேசிட்டு, அறிவியல் பூர்வமாகவும் மெடிக்கல் ரீதியாகவும் பேசப்படாத இந்த நகைச்சுவை படம் ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி வந்திருக்க வேண்டியவை. 
 
தாராள பிரபு
 
இதில் Climax காட்சிக்கு சற்று முன்பு, அனாதை இல்லத்தில் குழந்தையை தந்தெடுக்க வருவார்கள் அப்போது குழந்தையை பார்க்க காத்திருப்பார்கள். குழந்தை வந்து நிற்கும் அப்போ ஹரிஸ் உடைய மனைவி குழந்தையின் முகத்தை பார்க்காமல்  எழுந்து போயிருவாங்க. அப்போ ஹரிஸ் குழந்தையை ஒரு பார்வை பார்த்திட்டு வெளியே போயி தன் மனைவியிடம் பேசும்போவதை பார்க்கும்போது எனக்கு 28 வருடங்களுக்கு முன்னால் "பொம்முக்குட்டி அம்மாக்கு" என்று சத்யாராஜ் சுகாஷினி நடித்த படத்தில் ஏற்கனவே இதே மாதிரி ஒரு காட்சி வந்திருக்கும் அதுதான் ஞாபகம் வந்தது. கொஞ்சம் அந்த படத்தின் சாயல் தாளார பிரபுவின் உச்சக்கட்டத்தில் இருந்தது போல் நான் உணர்ந்தேன்.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies
படத்தின் டிரைலர் தந்துள்ள எதிர்பார்ப்பை படம் பூர்த்திச்செய்யவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. குழந்தையின்மை என்பது ஒரு பிரச்சனை தான் ஆனால் தீர்வினை மெடிக்கல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ, கொண்டுச்செல்வதுப்
போல் காட்சி அமையவே இல்லை. 
 
தாராள பிரபு
 
ஸ்பேம் டோனேசன் என்று ஒரு முறையின் மூலம் குழந்தையை உருவாக்கலாம். ஆனால் டாக்டர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு வரும் அனைத்து ஆண்களுக்கு மட்டுமே பிரச்சனை. பெண்களுக்கு எந்த பிரச்சனை இருக்காது. ஒவ்வொரு ஆணின் பிரச்சனையையும் மாறுபடலாம். அதற்கு வேற வேற டிரிட்மென்ட்  கண்டிப்பாக பண்ணக்கூடிய கேஸ்சஸ் தான்.  அப்போ இயல்பான முறையில் டிரிட்மென்ட் பண்ணிருக்கலாமே. எந்த வகையிலும் இயலாமையை சரிச்செய்ய முடியாத பட்சத்தில் ஸ்பேம் டோனேஷன் பற்றிப்பேசியிருக்கனும். அத விட்டுட்டு
எடுத்த எடுப்பலையே ஸ்பேம் டோனேஷனை பற்றி கூறுவது மார்க்கெட்டிங் பண்ணற மாதிரி இருந்தது. 
 
வருபவர்களுக்கு கன்செல்டிங் பண்ணற காட்சியிருந்தது. பரிசோதனை பண்ணற  காட்சியோ, பலதரப்பட்ட டிரிட்மென்ட் பண்ணக்கூடிய காட்சியோ, அதற்கும் சரி செய்ய முடியல. அதுக்கு பிறகு ஸ்பேம் டோனேசன் நோக்கி வருமாறு காட்சிகள் அமைவே இல்லை. 
 
ஒரு ஆணின் ஒரு முறை வெளியேறும் விந்து அணுவில் மில்லியன் அணுக்கள் இருக்கும் என்பதும் அது குழந்தையை உருவாக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சரியான உணர்ச்சி இல்லாமல் எப்போமே மேன்ஸ்பேஷன் செய்வது உடலுக்குச் சரியானதா?
 
ஒரு ஆணின் ஸ்பேமில் 49 குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் அவருக்கும் மற்றக் குழந்தைக்கும் சமந்தமே இல்லாத மாதிரியான உணர்வை  தான் வெளிப்படுத்துகிறது. 
 
அந்த குழந்தைகள் அனைத்தும் வெவ்வேரு 
தாயின் வயிற்றில் பிறந்தாலும் ஒரே ஸ்பேம் தான் கருவை உருவாக்கியிருக்கும். ஜின் உடைய மரபு யார் வழியில் இருக்கும். அந்த குழந்தைகளுக்குள் வருங்காலத்தில் கல்யாணம் பண்ண இயலுமா?. இல்ல தங்கை தம்பியென்ற உறவுகள் உருவாகுமா? படத்தில் சொல்லவா இல்லை.
 
இந்த காலத்தில் கல்யாணமான அடுத்த நாளே, தனக்கு குழந்தை வேணுமென்று யாரும் நினைப்பதில்லை. ஆனால் இந்த கதாநாயகி நினைக்கிறாள். அது எதார்த்ததிலிருந்து பின் தங்கியுள்ளது. மேலும் கதாநாயகிக்குனு ஒரு முன்கதை சொல்லனுமென்றுச்சொன்ன மாதிரி இருந்தது.
 
கதாநாயகிக்கு கருப்பை பிரச்சனைக்கு கன்செல்டிங்  மட்டும் பண்ணிட்டு பரிசோதனையோ டிரிட்மென்டோ எடுப்பது போல் காட்சிகள் வரவே இல்லையே. குழந்தையின்மையை சரிச்செய்ய ஸ்பேம் டோனேஷனை மட்டும் போகஸ் பண்ணி படம் நகருது. மற்றக்கேள்விகளுக்கு பதில் படத்தில் இல்ல. படத்தின் இறுதிகட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு படம் நகவே போலீஸ் வரும் காட்சியை வைக்கனுமேனு வைச்சமாதிரி இருந்தது.
 
ஒரு நல்ல விஷயம் என்னனா நாம் நினைப்பது போல ஸ்பேம் பத்தி பேசவது அவ்வளோ டேபோ டாப்பிக் இல்லங்கறது மட்டும்தான். பழைய விவேக்கை பார்க்க முடிந்தது. ஹரிஸ்க்கு நல்ல முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.
 
மொத்தத்தில், ஸ்பேம் என்கிற வார்த்தையை பற்றி மட்டும் அடிக்கடி பேசிட்டு, அறிவியல் பூர்வமாகவும் மெடிக்கல் ரீதியாகவும் பேசப்படாத இந்த நகைச்சுவை படம் ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி வந்திருக்க வேண்டியவை. 
 
-கீதாபாண்டியன்
Published in Movies this week