Log in

Register



வெள்ளைப் பூக்கள்! லோ பட்ஜெட்டில் தமிழ் நடிகர்களை வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட ஆங்கில இண்டிபெண்டன்ட் படம் போல இருக்கிறது.

 எதை நினைத்தார்களோ அதை நிதானமாக எடுத்திருக்கிறார்கள். ஸ்க்ரிப்டிலிருந்து ஸ்கரீனுக்கு மாற்றும்போது வரக்கூடிய எந்தக் குழப்பங்களும் இல்லை. தெளிவு! ஆனாலும் . . .

தமிழ்படம் என்று முடிவு செய்தபின் எதனால் முக்கிய கதாபாத்திரங்களை அமெரிக்கர்களாக மாற்றினார்கள் எனத் தெரியவில்லை.

குறிப்பாக விவேக்கின் மருமகளை அமெரிக்க பெண்ணாக சித்தரிக்காமல், தமிழ் பெண்ணாகவே காண்பித்திருந்தால் இந்தப் படம் கோடம்பாக்கத்தை கவர்ந்திருக்கும்.

சுவர்கள் இல்லாத வெள்ளை அறைகளில் கதாபாத்திரங்களை உட்கார வைத்து ஒருவரையொருவர் பேச வைத்து திரைக்கதை முடிச்சுகளை அவிழ்ப்பது நல்ல உத்தி. ஆனால் இது பிலிம் ஸ்கூலில் படித்துவிட்டு வருபவர்கள் வழக்கமாகக் கையாளும் பழைய உத்தி. தமிழ் சூழலுக்கு இது பொருந்துவதே இல்லை.

விவேக் - சார்லி இணை பரவாயில்லை, போரடிக்கவில்லை. இவர்களுக்குப் பதில் அஜித் - அர்ஜீன், கமல் - பிரதாப் போத்தன் என விதவிதமான ஸ்டார் பவர் உள்ள காம்பினேஷன்களை இந்த கதாபாத்திரங்களுக்குள் பொருத்த முடியும். வெள்ளைப் பூக்கள் உண்மையிலேயே பெரிய நடிகர்களுக்கான கதைக்களம்.

தோட்டமாக வந்திருக்க வேண்டிய படம் தொட்டிச் செடியாக வந்திருக்கிறது. பொறுமையாக இரசிக்கலாம்... 

Published in Movies this week