Log in

Register



அர்விந்த்சாமி நடித்த நரகாசூரன் ரிலீஸ் ஆகுமா ஆகாதா? இரசிகர்கள் மனதில் பல மாதங்களாக இருக்கும் கேள்வி. கவலையேபடாதீங்க ரிலீஸ் ஆகும் என்று பதில் வந்திருக்கிறது. அட போங்கசார், கொரோனா எப்போ முடியறது, படம் எப்போ ரிலீஸ் ஆகறதுன்னு யாரும் கவலைப்பட வேண்டாம். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படம், பல ரிலீஸ் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீசாகிறது. ஏப்ரல் 17 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

இதற்கு கௌதம் மேனன் தரப்பு என்ன சொல்லப் போகிறதோ? ஏனென்றால் அவர்தான் இந்தப்படத்தின் முதல் தயாரிப்பாளர். ஆனால் அவருக்கும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும் ஏதோ மனத்தாங்கலாகி, டிவிட்டரில் வார்த்தைப் போரெல்லாம் நடந்தது. இந்த அறிவிப்பை பார்த்தால் பிரச்சனை முடிந்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது.

இதில் கிடைத்திருக்கும் நல்ல செய்தி என்னவென்றால், இனிமேல் OTT எனப்படும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஆன்லைன் தளங்களில் எந்தக் கூச்சமும் இல்லாமல், நிறைய படங்கள் ரிலீசாகும். ஐய்யய்ய ஆன்லைனில் ரலீசா என்கிற முகச்சுளிப்புகள் மறைந்துபோகும். ஓகே. பதினேழாம் தேதிக்கு ரெடியாகுங்க.

 
Published in Web series