Log in

Register



நம்ப வாழ்வில் தொலைந்துப் போன காதலையும் காலத்தையும் திரும்ப கண்டுப்பிடிக்க முடியுமா. முடியும் உணர்பூர்வமான அடையாளங்களை வைத்திருந்தால் நாப இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் நாம் தொலைத்த காதலும் காலமும் நம் இல்லம் தேடி வரும். 
இயக்குனர் சேரன் இயக்கி நடித்த படங்களுள் "பொக்கிஷம்" ஒன்று. 
 
இந்த காலத்துல நாபோ  காதலிக்கறவங்கள, வாழ்க்கைத்துணையா வரபோறவங்கள பல நாட்கள் பாக்கலைனாலும் போன் மூலமா பார்த்துப்பேசிக்கிறோம். ஆனால் 70 களோட ஆரம்பித்துல அதிக பட்சம் கடிதம் எழுதுவது மட்டுமே நடைமுறையில இருந்தது. லேன்லைன்களின் ஆரம்ப காலம். 
 
என்னொரு காதல், ஒட்டுமொத்த வாழ்க்கையில ஒரு பதிரெண்டு நாளில் வெறும் சில மணி நேரம் மட்டுமே பார்த்துப்பேசி பழகுவது எவ்வளவு ஸ்வாரசியமான ஒரு உணர்வு. திரும்பவும் பார்க்க முடியுமானு பேச முடியுமானு வாழ்க்கை முழுவதும் ஏங்கி ஏங்கி சுற்றுவது எவ்வளவொரு உணர்பூர்ணமான விஷயம். அதுவே இந்த படத்தின் காதல் கதை.
 
அதிலும் அந்த சில காலம் இனிக்கனுனா நம்பளோட எண்ணோட்டமும் நமக்கு பிடிச்சங்களோட எண்ணோட்டமும் ஒரே மாதிரியானதா இருக்கனும். அப்படி மட்டும் கிடைத்தா நம்பள விட கொடுத்து வைத்தவங்க யாரு இருப்பாங்க. 
 
கடிதம் மூலமே காதல். படகாட்சிகளை கண்ணில் பார்க்கும்போது எதோ நாமே அந்த இடத்தில் இருப்பதுபோற் மனம் யோசிக்கது. சாதி, மதம், மானம், சுயம்னு பலவற்றை, எல்லாமே எதிர்ப்பாக நிக்குது. உயிருக்கு உயிராக நினைக்கற காதலியிடமிருந்து பதிலே வரலைனா நொந்துப்போக தோன்னுது. அதுலையும் நமக்கு பிடிச்சவங்க நம்மிடம் சொல்லாம போனால், ஒரு நிமிடம் கூட தாங்க முடியாது. ஆனால் சேரன் 33 வருடம் தாங்கிருக்கார். அத பார்க்கும்போது நான் என்னை அந்த இடத்துல வைச்சு பார்த்தேன். கல்யாணம் ஆனாலும் விடா முயற்சிய அவர் இறுதி காலங்கள் வரைக்கும் தேடிட்டே இருந்தாரு காதலையும் காதலியையும். இதுதான் காதலா? 
 
ஒருத்தரை பார்த்ததுலிருந்து சாகறவரைக்கும் நினைவுகளை அடையாளங்களாக மாற்றி பொக்கிஷமா பாதுக்காத்து மனம் உருகுற அந்த காதலை சொல்ல வார்த்தையே இல்ல. நம்பளோட காணாம போன காதல் நம்ப சந்ததிகளால கிடைக்கறது என்பது ஒரு வரம் அந்த வரத்தை பெற்றுள்ள இந்த பொக்கிஷமா காதல். 
 
நிலா, நீர், வானம், காற்று, மழை, அருவி ஊற்று, இசை, திசை இது இயற்கையின் பொக்கிஷம்!!!
புராண கதைகள், தொல்காப்பியம், திருக்குறள், ஐப்பெருங்காப்பியம், ஐஞ்சிறுக்காப்பியம் இதுப்போன்ற அனைத்தும் வரலாற்றின் பொக்கிஷம்!!!
நீ எனக்கு பொக்கிஷம் நான் உனக்கு பொக்கிஷம் நம் காதல் இது நமக்கு கிடைத்த பொக்கிஷம்!!!
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies