Log in

Register



யாரு என்ன perfume போடறாங்க. யாருலெல்லாம் குளிச்சாங்க, குளிக்கல. 
வீட்டுலையும் பாத்ரூம் லையும் என்ன நாற்றம் அடிக்குது. தலைக்குப்போடற எண்ணெயிலிருந்து காலுக்கு போடற Nailpolish வரையும் உபயோகப்படுத்தற கண்ட நாற்றமோ மனமோ தெரிஞ்சக்கதான் வாசனை உணர்வு இருக்கா முட்டாள்களே...
 
அருவம்
 
இதை எல்லாத்தையும் தாண்டி சாப்பிடற பொருள்களுலையும் மற்றும் உணவுகளுலையும் இருக்கற கலப்படத்தை கண்டுப்பிடிக்க வக்குகில்லையே. 
 
தினந்தோறும் நாம் வாங்கி உபயோகிக்கும் பொருள்களிலுள்ள கலப்படத்தைப்பற்றி அறிந்தும் வாயை மூடிக்கொண்டு கருப்பவர்களுக்கு எதற்கு வாசனை சக்தி.
 
நீ வேற சாதி, நீ வேற மதம் என்று ஆசாரம் பார்க்கும் மக்களுக்கு தெரிகிறதா எண்ணெயின் கலப்படம். ஆரோக்கியமான உலகை உருவாகுவதாக போவதாக நினைத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மாடுப்பாலோடு சேர்த்து பச்சதண்ணீரையும் கலந்து Chemical லையும் கலந்து பால் 
என்று ஏமாற்றி கொடுத்துக்
கொண்டிருக்கிறோமே ஏன் பாலின் கலப்படத்தைப்பற்றி தெரிந்தும் கேக்காமல் அமைதியாக இருக்கிறோம். நமக்கு எதுக்கு இந்த வாசனை திறன்.
 
இதுப்போல கேட்கும் விதத்தில் படத்தில் தட்டிக்கேக்கின்றனர். ஒரு நல்ல அதிகாரி நேர்மையாக இருக்கனும் என்று ஆரோக்கியமான வாழ்வும் சத்தான வாழ்வும் மக்கள் வாழ வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருப்பது பாராட்டுக்குரியது. 
 
எதார்த்ததிலாவது இப்படி நடக்கும்போல, ஆனால் படத்தில் எதிர்த்து போராட முடிந்தும் தன் சாவு போயிம்போயிம் கலப்படக்காரனால வர வேண்டாம் என்று தற்கொலை செய் கொள்வதற்கு பின்னாடி வரும் காட்சிகள் இயல்பற்றவையாக இருக்கு.
 
தப்பை தட்டிக்கேக்கவும் கெட்ட எண்ணம் படைத்தவர்களை ஒழிக்கவும் மனிதனால முடியமாட்டைங்கதே. பேய் தான் ஆனா உனா கிளம்பி வருது. அப்போ இந்த சமூதாயத்துல தப்ப தட்டிக்கேக்கனும் நினைச்சால் செத்து ஆவியாக வந்து கேக்கலாம். மனுஷனால எதுவும் பண்ண முடியாது அப்படிதான் அருவம் படம் சொல்லவருதா...
 
வாசனை சக்தி இருந்தும் பொருளின் தரத்தைப்பற்றி தெரிந்தும் வாங்கி பயன்படுத்தி பணத்துக்காக கலப்படம் செய்பவனை தட்டிக்கேக்காமல் வாய முட்டி இருக்கிறவங்க அப்படியே தான் இருப்போம். எவனாவது எதிர்த்து நின்னா துணையாகவும் இருக்க மாட்டோம் எப்படினும் எதிர்த்துக்கேக்கறவன உலகம் மதிக்காது மிதிக்கும் ஓடவிடும் கூடவே செத்திருந்தால் பேயாக வந்து அநியாயத்த நிறுத்தம். இதல்லாம் நம்பாத விதத்ததில் இருந்தாலும் பேயே வந்து தட்டிக்கேக்கறேன் நாயே நீயும் தட்டிக்கேளுனு படம் சொல்லவருவதுப்போல் படம் முடிகிறது.
 
-கீதாபாண்டியன்
 
 
Published in Movies this week