Log in

RegisterFriday, 07 August 2020 12:54

Kappela 2020 மலையாளம்

காதல் என்பது கண்ணுக்கு தெரியாத ஒன்று என்பதால் அதனை சிலர், அவர்கள் செய்ய நினைக்கும் கலவிக்கு போர்வையாக பயன்படுத்திக் கொள்கின்றனர். 
 
படம் முழுவதும் மலையாள வாசம் விசுகிறது. எளிமையான கதை களம். எதார்த்தமான குடும்பம், துறுதுறுவென்று சுற்றி திரியும் கதாநாயகி, கேரளத்து மலை அழகு, கொட்டற மழை, வீசும் காற்று, அடிக்கும் பனியென்று எழில் கொஞ்சம் அழகியலை பார்க்கும்போது மனதிற்கு இதமாக இருக்கிறது. 
 
Kappela  2020 வெளியாகிய இந்தப்படத்தைப்பற்றிய சின்ன அலசல் ...
 
எந்த நேரத்திலும் பலர் Online ல கெடையாக கிடக்கிறோம். நம்மில் பலருக்கும் நம் வீட்டு பக்கத்தில் குடியிருப்போரைப்பற்றி தெரியாது. நாம் செல்லும் பொது வாகனத்தில் நம் பக்கத்தில் அமைதியா அமர்ந்து வருவோர்கள் நல்லவர்களா கெட்டவர்களானே தெரியாது. ஆனால் 10 நிமிடத்துல இருந்து பல மணி நேரம் பஸ் பயணம், இரயில் பயணம் போன்று மேற்கொள்ளகிறோம். ஆனால் நம்மோட  Facebook and whatsapp நண்பர்களை பத்தி நமக்கு எதுவுமே தெரியவில்லையென்றாலும் தினமும் காலையில வர GOOD MORNING மெசேஜ் போதும் உலகத்துலையே அவங்கதான் நல்லவங்க. 
 
அத விடுங்கப் படத்த பத்தி வருவோம். அட..படத்துலையும் அதே கூத்துதான். 
 
நாம் போடற போஸ்ட்க்கு எல்லாரும் என்ன கமெண்ட் பண்ணுவாங்கனு பார்க்க ஐஞ்சு நிமிடத்துக்கு ஒரு முறை Online வரோம்.  நம்மில் பலருக்கு நம்மைப்பற்றி நலம் விசாரிக்க, ஆறுதல் கூற, நல்லதா நாலு வார்த்தை சொல்ல ஒருவர் தேவைப்படுகிறார்கள். அந்த ஒருவர் 100 ல் 80 சதவீதம் போன்ல தான் கிடைக்கறாங்க. அப்படி கிடைச்சா கண்மூடிதனமா நம்ப ஆரம்பிச்சறோம். சரி, எவ்வளவு நாள் தான் மெசேஜ் மட்டுமே பண்ணறது, ஒரு முறை போன்ல பேசலாம்னு நினைக்க தோன்னுது. 
 
சினிமா வரலாற்றுல வறுத்தெடுத்த ஒரு விஷயம் படத்துல,  "ஒரு நம்பர் மாத்திப்போட்டு வேற யாருட்டையோ பேசிட்டு, திரும்ப திரும்ப நமக்கு போன் பண்ணது யாரு? நம்ப போன் எடுத்தது யாரு?" என்று யோசித்து அவர்களிடம் பேசி ஒரு நட்பு உறவை வளர்கிறது, தான்.
 
சரி, எத்தனை நாளுக்கு தான் வேறவங்க போட்டோவ பாத்துட்டு பேசறது. ஒரு நாள் நேருல பாக்க தோன்னுது. ஒரு வேளை போட்டோ ஏற்கனவே பார்த்திருந்தால் பரவால.  பார்க்கலைனா என்ன நிலைமையாகறது. 
 
போன்ல பேசி, நேருல பாக்கப்போனால் நாபோ எதிர்பார்க்காத சூழ்நிலையெல்லாம் தான் நடக்கும். அப்பறம் நம்ப கிட்ட பேசுனது யாரு என்னனு தெரிஞ்சுட்டு நம்பி போவோம். அட, இது வரைக்கும் எல்லாருக்கும் தெரியும் அப்பறம் என்ன ஆச்சு, ....
அத எப்படி என் வாயால் சொல்லுவேன். 
 
இந்த இடத்துல, தமிழ படத்துல வெளியான "ஈட்டி" எடுத்துப்போம். ஹீரோ ஓரியட்டு படம்,  Wrong Number Connect ஆகி அப்பறம் நண்பர்களாக பேசி, Miss பண்ணி அப்பறம் நேருல பாக்கும்போது தப்பான ஒரு ஆளாக அறிமுகம் நடத்து அப்பறம் ஒருவரை ஒருவர் புரிஞ்சுப்பாங்க. திவ்யா வழியில் வரும் பிரச்சனையில் அகர்வா தலையிட்டு பிரச்சனை முடித்து வைப்பார். 
 
காதல் கோட்டை, எடுத்துக்கலாம். முன்னபின்ன பார்த்து பழக்கம் இல்லாத அஜித் மற்றும் தேவயாணி PCO பேசி  கடிதத்துல காதல் பண்ணறாங்க. ஆனால் நேருல இரண்டுப்பேரும் பாக்கற தருணம், ஆட்டோ ஓட்டும் அஜிதை ஒரு அதிகபிரசங்கிதனமான ஒருவராகதான்  தேவயாணி நினைக்கறாங்க. ஆனால் முடிவுல அவர்தான் தன்னோட காதல் கோட்டையின் அரசன் என்று தெரிந்து, இணைங்கின்றனர். ஒரு வேளை அதற்குப்பின் அஜித்  கெட்டவரா மாறி தேவயாணி வாழ்க்கையை கெடுத்திருக்கலாம். இல்லை, இருவரும் கல்யாணம் செஞ்சுட்டு நல்லாவும் இருந்திருக்கலாம். எதுவேணாலும் நடந்திருக்கும். 
 
அதே போல இந்த Kappela 2020 மலையாளம் படம் ஹீரோயின் ஓரியட்டு படம். இதுலையும் கிட்டதட்ட அதே போல தான் இருக்கும். Wrong number connect யாகி ஒரு ஆட்டோ ஓட்டும் ஒருவரை காதலிப்பாள்.  இவளோட அதிகப்படியான ஆசையே "கடலை பார்ப்பது" மட்டும்தான். போன்ல பேசியதை நம்பி, முகம் தெரியாதவரை பார்க்க வந்து, வில்லன் மாதிரி காட்சியளிக்கும் ஒருத்தனிட்ட இருந்து தப்பிச்சு, ஹீரோட்ட போயி மாடிக்கொள்கிறாள். காதல் எனும் போர்வையை கலவிக்காக பயன்படுத்தி கொள்கிறான் அந்த ஆட்டோக்காரன் . அவனிடமிருந்து எப்படி தப்பிச்சு வீட்டுக்கு வருகிறாள் என்பதே அடுத்த கட்டக்கதை அத படத்துல தான் பார்க்கனும். 
 
இப்படி, நமது பல அன்றாட வாழ்வியலை படமாக வெளி வருவதை தாண்டி, அதுல trendsetter இப்போ இருக்கறது  Social media and mobile phone மூலமாக நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகள்தான். 
எந்த கதையும் புதுசு இல்ல. நமக்கு எதுவும் தெரியவில்லையென்றாலும் தெரிந்துக்கொண்டு கெட்டத நோக்கிப்போற மாதிரி ஏற்கனவே எடுத்த மற்றும் நடந்த விஷயம்தான் திரும்பவும் வேற பாணியில் Trend ஆகுது.
 
-கீதாபாண்டியன் #geethapandian
 
 
Published in Movies this week
Wednesday, 22 July 2020 06:05

AK Ayyappanum Koshiyum 2020 Malayalam 

நான் சமீபத்தில் பார்த்து மெய் மறந்து ரசித்தப் படம் இது. ஒரு சிறிய நிகழ்வு வன்மமாக ஆக்கப்பட்டு அதனால் எப்படிப்பட்ட பிரச்சனைகளே படம்.
 
ஐயப்பன் நாயரால் சந்தேக கேஸ்சில் இரவில் பிடித்து வரப்பட்டு, பிரபலங்களின் தொடர்புள்ளவர் கௌசி. அதனால் அவர்களுக்குள் ஒரு பேச்சு வார்த்தை நடக்கிறது. "ஒரு பத்து நாட்கள் ஜெயில இருங்க சார். அப்பறம் வெளிய வருவீங்க, அதுக்குள்ள இந்த கேஸ் ஒன்னுமில்லாமல் போயிடும்". என்று ஐயப்பன் சொல்லுவார். "எனக்கு மனைவி குழந்தைகள் இருக்கு. கிறிஸ்துமஸ் நான் அவங்களோட கொண்டாடனும் கிறிஸ்துமஸ் முடிந்தப்பிறகு நானே வந்து சரண்டர் ஆகறேனு" கௌசி சொல்லுவார். ஆனால் அதனை ஏத்துக்கொள்ளாமல்  ஜெயில போட்டுவிடுவர். 
 
அப்போது பத்து நாட்கள் சிறைக்கு பின்னர், வன்மம் தலைக்கு ஏறி, தனக்கு சரக்கு ஊறிக்கொடுத்தப்போது வீடியோ எடுத்திருப்பார். அதனை வெளியிட்டு நாயர் வேலைக்கு ஆப்பு வைப்பார் கௌசி. இப்படி வன்மம்த்தின் பெயரில் ஒருவரை ஒருவர் எதோயொரு வகையில் தாக்கிக்கொண்டு பிரச்சனை செய்வர். 
 
பிருத்திவ் ராஜ் என்ன நடிகர், அப்பா!!! அப்படியொரு முகபாவனை நிறையிருக்கும். ஒரு படத்தின் கதாநாயகனே ஒரு வில்லன். டரக் அடிட்டாக இருந்தாலும் ஒரு சில நல்லகுணங்கள் இருக்ககூடியவராக கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும். பெண்கள் மேலே கை வைக்ககூடாது என்ற எண்ணம். தான் குறி வைத்த போலீஸ் அதிகாரியோட ஒரு லேடியுடைய போலீஸ் யோட லைஃப் போச்சு என்றவுடன் அவர்களுக்கு வேலை வாங்கி தருவது என்றும், ஒரு வில்லனாக போலீஸ்சாரால் நடு வழியில் இறக்கி விடப்பட்டு மலைகளில் கஷ்டப்பட்டு நடந்து வருவது, செருப்பு காலை கடிப்பதாகவும் நடக்க முடியாம வேர்த்து விறுவிறுத்து தன் சட்டையை கலட்டி தோளில் வைத்தப்படி நடந்து வரும் பாவனை அதுல வரும் சின்ன சின்ன நுணுக்கமான அசைவுகள் என்று கதாபாத்திர வடிவமைப்பு அருமையாக இருந்தது. 
 
குழந்தைகள் மீது பாசம் வைத்திருக்கும் அப்பாவாக பிருவித் ராஜ், தன் மனைவி மீது அன்பாகவும் இருக்கிறான். தன் தகப்பன் செய்வது சில விஷயங்கள் பிடிக்கவில்லையென்றாலும் தன் மனைவி எதிர் கேள்விக்கேட்டால், மனைவியின் முன் அப்பாவை விட்டுக்கொடுக்காத கதாபாத்திரம் என்று கௌசி கதாபாத்திரம் தெளிவாக எழுதப்பட்டிருக்கும்.
 
தமிழ் சினிமாவும் மலையாள சினிமாவையும் ஒப்பிட முடியாது இருந்தாலும், ஒரு முக்கியமான கதாபாத்திரம் போலீஸாக இருந்தால், அரை கதவு திறக்கும்போது கூட அந்தயொரு ஸ்டெல் இருக்கும். கெத்தாக வந்து நிற்பது என்று வரையறைத்து கதாபாத்திரங்களின் வரையறை இருக்கும். ஆனால் ஐயப்பன் நாயரும் கௌசியும் படத்துல போலீஸ்ருக்கு எந்த வித ஸ்டெல் இல்லாமல் எதார்த்தமாக நடக்கறது, உக்கார்வது என்று பலதரப்பட்ட செயல்பாடுகள் எதார்த்தமானதாக இருக்கும். 
 
மலைவாழ் பெண்ணை திருமணம் செய்யுள்ள ஒரு போலீஸ் ஆண் என்பது, இந்திய அளவில் பலரையும் சரிசமமாக பார்ப்பதுப்போற் ஒரு எண்ணமுடையவர் எழுதிய கதாபாத்திரம் போற் உள்ளது. வீரமான தைரியமான எதிர் நிக்கும் மலைவாழ் பெண் கதாபாத்திரம் வரவேற்க தக்கது.  திரும்பவும் தமிழ் சினிமாவாக இருந்தால், போலீஸ் மனைவி ரொம்ப கெத்தாகவும், பணம் நகை மிகுதியாக காட்டிப்பட்டிருக்கலாம். கதாபாத்திர வடிவமைப்பிலும் அவருடைய குணங்களையும் அற்புதமாக காட்டியுள்ளனர். 
 
இறுதி வரை வன்மம் எந்த அளவிலும் குறையாமல் ஒன்டிக்கு ஒன்டி சண்டைப்போட்டப் பின்னரும் ஆழ்மனதில் தொடரும். கதாபாத்திர வடிவமைப்பும், மிதமிஞ்சிய நடிப்பும், ஒப்பிட்டு எதார்த்தமும் என் மனதை விட்டு நிக்காமல் நிற்கிறது. 
 
-கீதாபாண்டியன்
 
#Geethapandian
Published in Movies this week
எதார்த்த காதல்
 
சென்னையோட அழகியலை சற்றும் மாற்றாமல் மலையாளிகளின் சென்னை வாழ்க்கையை காட்டும் படம்  Varane Avashyamund (2020). பெரும்பாலும் எதார்த்த படங்களுங்களாக மலையாள மற்றும் கன்னட,  படங்களைப்பார்த்து இப்படியெல்லாம் ஏன் எடுக்க மாட்டறாங்கனு கண்டிப்பாக வாழ்நாளுல ஒரு முறையாவது நினைப்போம். அப்படியொரு எதார்த்த நிலைப்பாட்டை எப்போதும்  நமக்கு தரும் படங்களுள் மலையாள படங்களும் ஒன்று.
 
அப்பார்மெட் வாழ்க்கையை அழகாக எதார்த்த பாணியில் உறவுகளைப்போல் காட்டியிருப்பர். நடுவுல பேசும் தமிழ் படத்திற்கு அழகுச்சேர்க்கிறது. 
இளமைக்காதலை ஆதரித்து முதுமை காதலை எதிர்க்கும் இந்த தலைமுறையினர்களை பற்றிய படம் இது.
 
அந்த வகையில Varane Avashyamund (2020). நடிகை சோபனா, ஊர்வசி மற்றும் துல்கர் சல்மான் மற்றும் பலர் அவகளது நடிப்புல வந்த இந்த படம். இளமை காதல், திருமணம், முதுமை காதல்னு  இந்த காலகட்டத்திற்கு ஏற்றமாதிரி ஒரு படம் இருக்கு. 
 
Online Whatsapp  ல Msg பண்ண ஒருத்தனுடைய காதல் அவன் எதையோ சொல்லிட்டானு  Block பண்ணி அப்பறம் unblock போட்டு காதலிக்கும் இளமை காதல் வழி மாறிப்போயி பிரியும் சூழ்நிலை. தனக்காக வாழ்க்கையை தொலைத்த தாயை விட மாற்றார் வீட்டு தாயின் அன்பைபுடன் ஒப்பிடும் மகள்.
 
ஒரே இடத்துல வேலைப்பாக்கற நண்பர்கள் லவ் பண்ணும்போது வருகிற சந்தோஷமும் பிரச்சனையும் அதனால வரும் பிரிவும்.
 
தேடி கண்டுப்பிடிச்சு, நமக்கு ஏற்ற ஒரு பையன கல்யாணம் பண்ணற பாடு பெரும்பாடு. 
 
வாழ்க்கையில நல்லா படிச்சு கல்யாணமாகி டைவஸ் ஆகி பல வருடம் குழந்தைக்காக மட்டும் வாழ்ந்த தாய் மனசுல பூக்கிற முதுமை காதலும் அதுக்கான அங்கீகாரத்துக்காக ஏங்கும் தாயும். 
 
பிறந்த இத்தனை வருடமா காதல் கல்யாணம்னு பெரிய திருப்புமுனையே இல்லாம நாட்டுக்காக போராடிய ஓய்வுப்பெற்ற சோல்ஜர். அவருக்கு சோபனா மேல் வருகிற காதல்னு  2019 உடைய எதார்த்த காதலை காட்டியிருப்பர்.
கடைசியில இளமை காதலர்கள் நிலைமை என்ன? முதுமை காதல் ஜெயிக்குமா? என்பதே மீதி கதை. நகைச்சுவையான காதல் உணர்வுகள் கலந்த படம். 
 
-கீதாபாண்டியன்
Published in Movies this week
Monday, 27 January 2020 12:50

MINNAMINUNGU - Review

Language: Malayalam
Country: India
Released in 2017
Directed by Anil Thomas


Minnaminungu is a movie about a single mother struggling to educate her daughter; her trials and tribulations; the final tragedy and her stoic positivity in the face of adversity. Sounds like a standard soap opera story and it also makes you shed a tear and feel a lump in your throat, occasionally. In spite of all the flaws I would strongly recommend this movie simply for the sheer brilliance of Surabhi Lakshmi’s portrayal of the middle aged mother. The way she walks, holds her saree, does her chores, smiles even when she is drowning in troubles is so genuine. It is her eyes that is a treat to watch, don’t miss this movie cause you ll be missing an acting excellence.

Padmini Satyanarayanan

Published in Classic Movies

Calendar

« November 2020 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30