Log in

Register



Saturday, 15 February 2020 15:12

மகராசன் - 27

நற்பணி மன்ற தலைவன் என்ற பெயரில் அரசியல் லூட்டி அடிக்கிறார் நடிகர் கமல் 
 
மகராசன்
 
ஒரு முழு நீள காமெடி திரைப்படம். என்னதான் வருத்தம், சோகம், துக்கம், காதல், அழுகை போன்ற ஜெனர்கள் இருந்தாலும், திரைக்காட்சிகளில 
காமெடி  மட்டும்தான் எல்லாத்தையும் தூக்கிச்சாப்பிட்டுவிடும். அந்த மாதிரி வெகு சில படங்களுல, "மகராசன்" படமும் நடிகர் கமல் உடைய திரைப்பயணத்துல முக்கியமான ஒன்னுதான். 
 
ஒருத்தருக்கு கிடைக்காத விஷயத்தையோ அல்லது கிடைக்க கால தாமதமாகற விஷயத்தையோ, நமக்கே தெரியாமல் தீடிரென கடவுள் மாதிரி ஒரு மனுஷன் கொண்டுவந்து சேர்க்கற போது பயன் அடைந்தவர்கள், வாயாற "மகராசன்" மாதிரி இருக்கனும் என்று வாழ்த்துவது தான் இதன் பெயர்காரணம்.
 
1993 ம் ஆண்டு இயக்குநர் ரங்கராஜன் இயக்கிய மகராசன்,  இந்த காலத்துல மாபெரும் பிரபலமாகவும் வரும் தலைமுறையினருக்கு உதாரணமாக இருக்கக்கூடிய பலரை உள்ளடக்கிய படம். ("பாடகர்கள், எழுத்தாளர்கள், நகைச்சுவை நடிகர்கள், நடிகர்கள், இசை அமைப்பாளர்" )
 
ஜோசியம் பார்த்து மூடநம்பிக்கையில மக்கள் சிலர் செய்யற அபத்தமங்களினால் விளையுறத நகைச்சுவையா சொல்லிருக்காங்க.
 
படத்துல, கல்யாணமான இரண்டுப்பேரு, அவங்களுக்கென ஒரு குடும்பம். பொதுவாக ஒரு குடும்பத்துல குழப்பம் வந்தால், என்னன்ன பிரச்சனைகள் வரும்னு அப்படி ஒரு டிராக். சேரிக்கார மக்களா, அதுலையும் அந்த சேரிக்குள்ள ஒரு "நற்பணி மன்றம்" வைச்சு நடத்திட்டு வம்பு இழுக்கற பொறுப்புள்ள தலைவன் மற்றும் அவனுடைய சொந்த வாழ்க்கையில கொஞ்சம் அப்படி இப்படினு இருக்கறவன் ஒருத்தருடைய டிராக் ஒரு பக்கம் நகருது.
 
இந்த இரண்டு டிராக்கும், பல இடங்களுல ஒன்னா சந்திக்கும் ஆனால் ஒரே டிராகாக படத்துல தீடிரென டூஸ்ட் அடிச்சு பல கேள்விகள் எழுப்பி படத்தின் முன்கதை வைச்சு உச்சக்கட்டத்தை தொடுகிறது. 
 
கணவனுக்கு பயந்து சில உண்மையை சொல்லாமல் வாழும் மனைவி,  ஒரு கட்டத்தில் விபத்துக்கு உள்ளாகி கோமாவிற்கு செல்லுவதும்,
கணவனுடைய சந்தேக புத்தியும்,
 
 possessiveness சொல்லக்கூடியதை நகைச்சுவையாக உள் வைத்து காதல் செய்வதும், சின்ன வயசுல இருந்துப்பார்த்து வளரங்க சொல்லிக்கொள்ளாமல் மனசுல வளர காதலும்,
 
நற்பணி மன்ற தலைவன் என்ற பெயரில் நக்கலாக காட்சிகள் செல்வதும், 
ஒரே வீட்டிலோ அல்லது நிறுவனத்திலோ வேலைச்செய்பவர்கள் சண்டையும் சச்சரவுமாக இருப்பதும், 
 
குடும்பத்தில் வயசான பெருசுங்கள சொத்துக்காக "காக்கா பிடிக்கும் மகன்கள்" மேலும் பெத்த அப்பாவிற்கு தண்ணீர் கூட தராத மகன்கள்,  மாமியாரை பார்த்துக்காவே சண்டைப்போடும் மருமகள்கள், 
 
ஊர் மக்கள் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் மேலும் அரசியல் சாயங்கள் கலந்த காட்சிகள் வருவதும், இதுப்போன்ற பல நகைச்சுவை தருணங்கள் கதையில் இணையும். மேலும்,  உச்சக்கட்ட உண்மை தெரிய வரும்போது ஏற்படும் குழப்பத்திலிருந்து காப்பாற்றும் கதாநாயகனே "மகராசன்". 
 
வசனங்கள் அவரவர் வாழ்க்கை நடையில் அமைந்திருக்கும். தொழில்களில் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கும், மேலும் திரும்ப திரும்ப பயன்படுத்தும் ஸ்டைல், 
 
அதை காட்டினும் "பிற உறவுகளை விட, பெண்  குழந்தை இருந்தால்தான் வாழ்வில் பெற்றோருக்கு தண்ணி தரவாது ஆளிருக்கும்" அப்படிப்பட்ட பெண் குழந்தையை ஜோசியத்தை காரணம் காட்டியோ, இல்ல காசு பணம் இல்லையென்று காரணத்தை காட்டியோ கொல்வதும், அதாதை ஆஸ்ரமத்தில் விடுவதும், தந்துக்கொடுப்பதும் போன்ற ஏதேனும் செய்தால் அது ஒரு பாவம். மேலும்,  அந்த பாவம் உங்க மகன், மருமகள் வடிவிலேயே பிரதிபலிக்கும்" என்பதை உள் கருத்தாக கதையில் கூறியுள்ளனர்.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies