Log in

Register



ஒரு மனிதனின் வாழ்க்கையை நண்டு உடன் ஒப்பிடும் கதை.
 
லக்னோவில் இருக்கும் பணக்கார ஆதிக்கம் நிறைந்த குடும்பத்தையும், சென்னையிலுள்ள நடுத்தரத்து குடும்பத்தைப் பற்றிய உயிரோட்டமே நண்டு.
 
இயக்குனர் திரு. மகேந்திரன் அவரது வாழ்க்கையுடைய ஒரு உண்மை சம்பவத்தை குறிக்கும் நிகழ்வை படமாக்கியுள்ளார்.
 
லக்னோவில் மாதிரியான பகுதியில் பொதுவாக ஆண் ஆதிக்கம் நிறையிருக்கும். பெண்கள் மற்றும் மனைவிமார்கள் உடைய வார்த்தைக்கி மதிப்பு அளிக்காத ஒரு சூழல். குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் நிலை. இதுப் போன்ற சூழலிலிருந்து வீட்டினை எதிர்த்து நம் கதாநாயகன் ராம் குமார் சர்மா  வெளியேறுகிறார். (இதனை கள்ளிச்செடியிருந்து வண்டி வெளியேறுப்போல் காட்டிருப்பர்)
 
மெட்ரஸ் வேலை கிடைத்தது, அவருக்கு அந்த வீட்டை விட்டு வெளியேற கிடைத்த நம்பிக்கை. மேலும் மெதராஸ் வந்து வேலையில் சேர்கிறார். அடுத்த கட்டம் தங்குவதற்கு ஒரு வீடு. 
 
ஒரே வீட்டில் ஒரு பாத்ரூம் கொண்ட இடத்தில் பல குடும்பங்கள் குடித்தனம் இருக்கும் அப்படிப்பட்டயொரு வீட்டை 70, 80களில் வந்த பல படங்களில் பார்க்கலாம். அதுப்போன்ற ஒரு வீட்டில் கதாநாயகி சீதா குடும்பம், சீதாவுடைய தோழிக்குடும்பம், அவுஸ்வோனர் குடும்பம், வெண்ணிற ஆடை முர்த்தி குடும்பம் என்று பலர் தங்கி இருப்பர்.
இத்தனை மணிக்குள்ள குளிக்கனும், எவ்வளவு நேரம்தான் தண்ணீர் வரும், இரவு 10 மணிக்கு மேல வுட்டுல லைட் எறியக்கூடாது. அசைவம் சமைக்க கூடாது என்று பல பேச்சுகளுக்கு நடுவுல வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு கனவுதான்.
 
அப்படிப்பட்ட வீட்டில் மாடி போஷனில் ஒரு அறைக்கு குடி வருகிறார். ஒரு கூட்டுக்குடும்பம் போல எந்த முடிவும் அனைவரும் சேர்ந்துதான் எடுக்கனும். ஒரு விஷேச காலங்களில் எல்லாரும் ஒன்னு திரண்டு சிறப்பிப்பர். 
 
சீதாக்குடும்பம் ஒரு நடுத்தரத்து வாழ்க்கை. அக்காக்கும் அக்காபுருஷனுக்கும் சண்டை. அப்பா இல்ல. அம்மா சின்ன வயதுல இருந்து விதவை. ஒரே சம்பாத்தியம். சிவனேனு ஒரு இருக்கும் குடும்பம்.
 
அவுஸ்வோனரோட பொன்னுக்கு ராம்குமார் மேல ஒரே கண்ணு.
சீதாவும் ராம்குமார்சர்மாவும் ஒன்னா ஒரே ஆபிஸ் ல  வேலைச்செய்கிறார்கள். அதனால அடிக்கடி வீட்டிலும் பேசிக்கொள்வார்கள். இதனால பல பேச்சுகளுக்கு ஆள் ஆகுகிறாள் சீதா.
 
ராம்குமார்சர்மாக்கு சிறுவயதிலிருந்து ஆஸ்துமா அதனால வரும் இரும்பல் தும்மல் காட்சிகளில் (நண்டு முள் செடியில் இருப்போல் காட்சி வரும்).
அந்த நேரத்தில் மருத்துவரை வரவழைத்து ராம்குமாரை பார்த்துக்கொள்வாள். சீதாக்கு கெட்டப்பெயர் வந்தால அவளை பெண் கேட்டு போவார் ராம்குமார்.
 
எங்களுக்கு விருப்பம் உங்கள் வீட்டுல ஒத்துப்பாங்களானு கேட்கும்போது, லக்னோ போயி வீட்டில் எடுத்துச்சொல்வான். அவர்கள் நீ எக்கேடோ கெட்டுப்போ என்று விரட்டுவார்கள். அதனை பெரிது படுத்தாமல் கல்யாணம் முடியும். கொஞ்ச நாளில் சீதாக்கு குழந்தைப்பிறக்கும் இதனை அடுத்து , ஆஸ்துமா தொல்லையில் ரொம்ப கஷ்டப்படுவார் ராம்.
 
இரண்டு வருடம் கழித்து தங்கை கல்யாணத்திற்காக ராம்குமாருக்கு அழைப்பு வந்திருக்கும். மனைவி குழந்தையுடன் போயி இருப்பான். தம்பி, தங்கை, அம்மா அனைவருக்கும் மூவரின் வருகை சந்தோஷம் அளித்தது. லக்னோ முழுவதும் சுற்றிப்பாக்கின்றனர். ராம்குமாருடைய அண்ணனும், அப்பாவும் திட்டி விரட்டி அடித்தனர். அங்கிலிருந்து வந்ததிலிருந்து ராம்குமார் ஆஸ்துமாவால் மிகுந்த வேதனை பட்டார். (இது நண்டு கொஞ்ச கொஞ்சமாக அந்தரத்தில் தோங்குவதுப்போல் காட்டப்பட்டது)
 
மேலும் இதில் ஒரு சிறப்பு தமிழ்நாட்டில் காதலிக்கும்போது ஷிந்தி பாடலும், லக்னோவை சுற்றிப்பார்க்கும்போது தமிழ் பாடலும் வரும்.
 
இதற்கிடையில் அவுஸ்வோனரோட பொன்னு ஒரு ரிக்சாகாரனை கூட்டிட்டுப்போயி கல்யாணம் பண்ணிக்கிச்சு. தன் அம்மாதான் தன் குழந்தைக்கு பெயர் வைக்கனும்னு ஆசைப்பட்டேன். அது நடக்கல. இப்போ வைச்சிடலாம். சொந்தகாரர்களிடம் சொல்லிடு என்றுச்சொல்லி விட்டு மருத்தவமனைக்கு போயிட்டு வந்தான்.
 
அப்போ இருந்து அவன் சரியில்ல. யாரிடமும் பேசல. தூங்காமல் மன கஷ்டம் பட்டான். இதுல்லாம் சீதாக்கு பயத்தை ஏற்படுத்தியது. (கொஞ்சம் கொஞ்சம் நண்டு தொங்குவது போல் காட்சி காட்டப்பட்டது). உண்மையை சீதாவிடம் சொல்லினான். (அந்த உண்மை தனக்கு ஆஸ்துமா அதிகமாகி கேன்சர் வந்து விட்டது) சீதா அழுதாள். இது அவங்க குடும்பத்துக்கும் தெரியப்படுத்தனும் என்று கடிதம் எழுதினாள். 
 
மருத்துவமனையில் பரிசோதனை நடத்துக்கொண்டே இருந்தது. கடிதத்தை பெற்ற ராம் உடைய தந்தை அதனை கிளித்து எரிந்தார். மற்றவர்கள் கேட்டதற்கு வெள்ளிக்கிழமை அவன் வரான் என்று பொய் சொல்லும் அளவுக்கும், உடல் நலம் சரியில்லாத மகனை பார்க்க கூட பிடிக்காம போனது. தகப்பனுக்கு.
 
ஒரு கட்டத்தில் அதே வெள்ளிக்கிழமை மகனின் வருகைக்காக சந்தோஷமாக காத்திருந்த தாய் இறந்துப்போயிட்டார். மருத்துவமனையில் ராம்குமார்சர்மாவும் இறந்துப்போயிட்டார். அவர் உயிருக்கு போராடி தருணங்கள் 
(நண்டு தான் இருக்கும் ஊடத்தை விட்டு வெளியேறியது). 
இறந்த தருணத்தில்(நண்டு கீழே விழுந்தது)
 
ஒரு பெண் சின்ன வயதுலையே விதவை ஆவது எவ்வளவு கொடுமை என்ற பரிதாபத்தில் சீதாவின் அழுகையில் நிறைவுப்பெறுகிறது. பெற்ற மகன் ஒவ்வொரு முறையும் வெளியேறும் நிலையை தட்டி கேக்க முடியல என்ற வருத்தத்தில் மகன் வரும்போதே தனக்கு செய்வதை செய்யட்டும் என்று ஏமார்ந்து இறந்த அம்மாவின் மரணம். ஒரு பாவமும் செய்யாமல் தாய், மனைவி, குழந்தை விட்டுட்டு போன ராம்குமார் என்று இது என்னடா நண்டு வாழ்க்கை. 
 
 
 
 
 
 
 
 
 
   
Published in Classic Movies