Log in

Register



இந்தியன் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் வயதான சேனாதிபதி வேடத்திற்கான மேக்கப் டெஸ்டிற்கு கமல் தயாராகிக்கொண்டிருந்தார் ,தயாரானபின் படக்குழு முன் வந்து நின்ற கமலை அனைவரும் வியந்து பார்த்தனர் . கதாப்பாத்திரத்தின் வடிவத்திற்கு ஏற்ப அவரது லுக் கனகச்சிதமாக இருந்தது என ஷங்கர் உட்பட அனைவரும் பாராட்டினார் ஆனால் கமல் திடீரென மீசையை மறந்துட்டேன் ஓட்டிட்டு வந்துடுறேன் எனக்கூற, இதுவே அற்புதமாக இருக்கின்றது மீசை தேவையில்லை என எல்லோரும் கூறினார் ,சங்கருக்கும் பிடித்துப்போக படப்பிடிப்பை ஆரம்பித்தனர்.

ஆனால் ஷங்கர் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போது வயதான கமலுக்கு மீசை இருக்கும்படிதான் வைத்திருந்தார் ,ஆனாலும் மீசை இல்லாத ளுக்கும் அவருக்கு பிடித்துபோகவே படப்பிடிப்பை ஆரம்பித்தார் .ஷங்கருக்கோ வயதான கமலை மீசையுடன் காட்டவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டுதான் இருந்தது .
படத்தில் நாட்டுக்காக சேனாதிபதி தனது பிள்ளையான சந்துருவை கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும் .அப்போது சேனாதிபதி தான் தவமிருந்து பெற்ற பிள்ளையை தன் கையாலேயே கொள்ளும்போது எவ்வளவு வலி நிறைந்திருக்கும் என்பதை உணர்த்துவதற்காக ஒரு வசனம் பேசவேண்டும் .அந்த வசனத்தை யோசித்துக்கொண்டிருக்கும்போது ஷங்கருக்கு அந்த மீசை கதை ஞாபகத்திற்கு வந்தது ,எனவேதான் " எங்களுக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் கழிச்சி பொறந்தவன் சந்துரு ,சின்னவயசுல தூக்கி கொஞ்சும்போது மீசை முடி குத்துதுன்னு அழுவான் ,அன்னிக்கு அவனுக்காக மீசையை இழந்த இந்த சேனாதிபதி இன்னிக்கு நாட்டுக்காக அவனையே இழக்க முடிவு பண்ணிட்டேன்னு” சொல்லி சந்துருவை கொன்றபின் கிளைமாக்ஸில் சேனாதிபதி கதாபாத்திரத்திற்கு மீசை இருக்கும்படி செய்து இந்த இந்தியனுக்கு சாவே கிடையாதுன்னு முடித்திருப்பார்

இவ்வாறு தான் யோசித்த ஒரு விஷயத்தை முதலில் கதையில் செலுத்தமுடியாவிட்டாலும் ,பின்பு மிகவும் நேர்த்தியாக கதையின் போக்கை மாற்றாமல் அமைப்பதில் வல்லவராய் இருப்பதால் தான் அவர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனரில் ஒருவராக திகழ்கிறார்.

 - வினோத் குமார்

Published in Classic Movies