Log in

Register



சுனைனா!
காதலில் விழுந்தேன் படத்தில் பரத்துக்கு ஜோடியாக சூப்பர் அறிமுகம். ஆனால் அதற்குப் பின் ஏனோ தேங்கிவிட்டார். பெயர் சொல்லும்படியான படங்கள் அமையவில்லை. ஆனால் இன்று வரை அதே அழகுடன் இருக்கிறார். சமீபத்தில் வெளியான சில்லுக்கட்டி படம் ஒரு உதாரணம். கணவனின் காதலுக்கு ஏங்கும் பாத்திரத்தில் அவருடைய அழகும், நடிப்பும் சில்லுக்கட்டி படத்துக்கு ஒரு அழகியல் கலந்த நிறைவைத் தந்தது.


Published in Actress

சில்லுக் கருப்பட்டி

ஒரு ஆணுக்கு தேவையான உண்மையான அன்பையும், நான் இருக்கேன் அப்படிக்கற பாசத்தையும் எப்படிக்கொடுத்தா அவங்க நல்லது கெட்டதுல நமக்கு பங்கு இருக்கறத தூய்மையா மிஷின் மூலமா காட்டிருக்கு இந்த படம்...

ஏய், கதைகேளுகதைகேளு கதைகேளு பொன்னாத்தா சொல்லற கதைய கேளு.
ஏன்டி இவளே 2020 பொரந்திருச்சு. இந்த வருஷத்துல என்ன ஸ்பெல்னு பாத்தையா. இனிமே இப்படியும் படம் பண்ணலாம். என்ன அக்கோவ் சொல்லற,
அட நம்ப தமிழ் சினிமால கொஞ்சப்பேரு தான் பெண் இயக்குநர் இருக்காங்கைடி. இன்னும் நிறையா திறமையுள்ள உள்ள புள்ளிங்க உள்ளவர முன் உதாரணமா ஒரு படம் வந்திருக்குடி, ஆனா அது ஒன்னு இல்ல நாலு படத்துக்கு சமம்டி.

பிங்க் பேக் 
குப்பமேடுல வேலைச்செய்யற
குப்பத்து புள்ளைங்களோட அதிகப்படியான சந்தோஷத்த படத்துல காட்டியிருக்காய்ங்க. குப்பைக்குள்ள
ஒரு பிங்க் பேக் இருந்திருக்கு. அதுக்குள்ள நம்ப மான்ஜா தேவையான பொருளுக தனியா பிரிக்கும்போத ஒரு பொன்னோட போட்டோவ அதுல பார்த்திடறான். அவனுக்கு அத பாக்கும்போது மனசுல அம்புட்டு சந்தோஷம் வருது.
அப்போ இருந்து அந்த புள்ள வீட்டுல இருந்து வர பிங்க் பேக் எல்லாமே இவன் தேடி பாப்பான். அந்த பணக்கார வீட்டு புள்ள தொலைச்ச சந்தோஷத்த குப்ப அள்ளறவன் தேடி கொடுக்கறதான் இந்த கதையே..

காக்கா கடி
ஒருத்தனோட வாழ்க்கை துணையா வர பொன்னுக்கு அவனோட நல்லது கெட்டதுல நிறைய பங்கு இருக்கு, ஆனா இந்த காலத்து புள்ளிங்க. மேட்டிமோனியில பதிவு பண்ணறவங்க, எதோ வயது ஆகுதேனு தான் வரன் பாக்கறாங்க.
ஒரு ஆணுக்கு தேவையான உண்மையான அன்பையும், நான் இருக்கேன் அப்படிக்கற பாசத்தையும் எப்படிக்கொடுத்தா அவங்க நல்லது கெட்டதுல நமக்கு பங்கு இருக்கறத தூய்மையா காட்டிருக்கு காக்கா கடி.
பொதுவா *கேன்சர்* கறது ஒரு வியாதி. அது குணமாக ஒருத்தருடைய உண்மையான அன்பு எல்லாம் சரியாகிடும் என்கிற மன உறுதியும் கொடுத்தாவே போதும்.
அதுதான் காக்கா கடி.

டர்டில்ஸ்
இளமை விட முதுமைக்குதான் எல்லா வகையான காதலும் தேவை. என்னதான் துணிச்சு கல்யாணமே வேணாம் அப்படினு வாழ்நாள் முழுசா வாழ்ந்து, பல திறமையான விஷயங்கள ஈடுபாடு வைச்சுக்கிட்டாலும் சொந்த கால் மேல நம்பிக்கைய இழந்து, வீல்சேர் ல நம்பி உக்காரும்போது நமக்கு ஒரு துணை இருந்தா நல்லாயிருக்குமே என்கிற ஏக்கம் கண்டிப்பா வரும்.
முதுமை காதலுக்கு இருக்கற எதிர்பார்ப்பை ஏற்று வாழ்றதுதான் உண்மையான காதல். அதுப்பத்தி தான் டர்டில்ஸ் சொல்லுது. இதன் எதார்த்த வார்த்தையை திரேட்டரில் பார்ங்க.

ஹே அம்மு
காதலிச்சு ஒரு வருடத்துலையே கல்யாணம் பண்ணனும் உன்னோட வாழனும் உன் குழந்தைக்கு தாய் ஆகனும்னு பல விஷயங்கள பெண் மனசு எதிர்பாக்குது. கல்யாணம் பண்ணி இரண்டு வருஷத்துலையே பேசறதுக்கு எதுவும் இல்லாம போகுது.
இரண்டு, மூன்று குழந்தைகள் ஆனாலும் தன் கணவன் தன்னை வர்னணை செய்யனும், பேசனும், ரசிக்கனும், அப்படிக்கற எதிர்பார்ப்பு 13 வருடம் கழிச்சி வருது.
பொதுவாக ஆண் மனசு சுகங்களை மட்டுமே தன் மனைவியிடம் கேக்குது. இப்படி ஒரு பேச்சுவார்த்தையே இல்லாம அவங்க அவங்க தேவையும் எதிர்பார்ப்பையும் ஒருத்தரை ஒருத்தர் திணிக்கும்போது அங்க சண்டை உருவாக்குது.
இப்படியெல்லாம் இருப்பதை கடந்த தலைமுறைகள் கடந்து எதோ வாழ்க்கையை வாழ்ந்தனர். இதுவே தொடர்ந்தால் இனி இன்றைய தலைமுறைகள் வாழ மூன்றாவதாக ஒரு மிஷின் உள்ள வந்து ஒருவரை பற்றி ஒருவரிடம் எடுத்து கூறினால் தான் வாழ முடியும் என்று ஆகப்போவதை முன் கூட்டியே சொல்லுது ஹே அம்மு.
இதன் நுணுக்கங்களைப் படத்தில் பார்ங்க.
ஒவ்வொரு வகையான சமூகத்திரையில் ஒவ்வொரு வகையான வயதினரின் காதலை சொல்லிருக்கு இந்த படம் சில்லுக் கருப்பட்டி.

-GEETHA PANDIAN

Published in Classic Movies

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30