Log in

Register



Thursday, 23 January 2020 11:55

அந்த ஒரு மாதம்

அந்த ஒரு மாதம்:

சில நாட்களுக்கு முன்பு நானும் என் வகுப்பு மாணவர்களும் களஆய்விற்க்காக கீரனுர் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தோம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கு தங்கிருந்த அனுபவங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

 என்னுடைய வாழ்வில் இந்த ஒரு மாதத்தை மறக்கவே முடியாத நாட்களாக இருந்தது.அந்த அளவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், என்னை நான் யாரென்று புரிந்துகொள்ள ஒரு உகந்த இடமாக இருந்தது. எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை அங்குதான் தெரிந்துகொண்டோம். எங்களுக்குள் என்னதான் சண்டை வந்தாலும், கொஞ்ச நேரம் தான் கோவமாக இருப்போம். அதன் பிறகு பேசி சிரித்து கொள்வோம். அங்கு சென்றிருந்தவர்கள் பெரும்பாலும் நகர் புறத்தில் வளர்த்தவர்களே.

ஆகையால், எங்களுக்கு கிராமத்து வாழ்க்கை புதிதாக இருந்தது. கிராமம் என்றாலே அழகுதான்.

அதில், நாங்கள் சென்றிருந்த கீரனுர் என்ற கிராமம் மிகவும் அழகா இருந்தது. ஆரம்பத்தில கிராமத்து வாழ்க்கை ஒத்துப்போகவில்லை என்றாலும், போகப்போக கிராமத்தின் சிறப்பை புரிந்துகொண்டோம். அதிகாலை சூரியன், பசுமையான மரங்கள், தூய்மையான காற்று, கலப்படம் இல்லாத தண்ணீர்  இவையனைத்தையும் நாங்கள் ஒவ்வொருநாளும் அனுபவித்தோம்.

இது எங்களுக்கு புதியதாகவும், மறக்கமுடியாத நினைவாகவும் இருந்தது. அடுத்து கிராமத்தின் மக்களை பற்றி கண்டிப்பா சொல்லியாக வேண்டும். நகரத்து வாழ்க்கையில் பக்கத்துக்கு வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத காலகட்டத்தில், நாங்கள் கிராமத்துக்கு சென்றதுமே நாங்கள் வந்த செய்தி கிராமம் முழுவதுமே பரவி விட்டது. உடனே அவர்கள் எங்களை வித்தியாசமாக தான் பார்த்தார்கள்.

ஆனால், நாட்கள் போகப்போக எங்களிடம் மிகவும் பாசமாகவும், அன்பாகவும், யதார்த்தமாகவும், எந்தவித கள்ளங்கபடம் இல்லாமல் பழகினார்கள். எங்களை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார்கள்.

எங்களது ஆய்வு காலம் முடியும் நேரம் வந்ததும், மிகவும் வருத்தமாக இருந்தது, அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் ஆயிவை முடித்துக்கொண்டு வந்தோம் 

Published in ISR Selva speaking

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30