Log in

Register



டிரைலர் எப்படி இருக்கு? 
 
நாட்டுல எவ்வளவோ கொட்டிய நோய் இருக்கு. எவ்வளவோ குறை இருக்கற மக்களும் இருந்திருக்காங்க. 
 
அதுல குழந்தை இல்ல அப்படிங்கறது ஒரு குறையாக இருந்த காலம் போயி அதொரு வியாதியாக மாறிய காலத்திற்கு வந்திட்டோமோனு யோசிக்க வைக்குது டிரைலர்.
 
புதுசா இணைந்திருக்க கூட்டணி ஹரிஸ் விவேக் கூட்டணி. விவேக் சினிமாவின் மிடில் காலத்துல இருந்து பல கருத்துக்களைச் சொல்லி யோசிக்க வைக்கற வகையில நகைச்சுவை பண்ணிட்டு வந்திருக்காரு. இன்றைய பல முன்னால் நடிகரோட முதன்மையான பல காமெடிகளில் இவருக்கும் முக்கிய பங்கு இருக்கு. அந்த மாதிரி கடந்த சில வருடமாக இன்றைய பல புது நடிகர்களோட வெற்றி கூட்டணி அடிக்கறாரு விவேக்.
 
இந்த படத்துல காமெடிக்கு பஞ்சமே இல்ல. மருத்துவர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்காரு. இந்த காலத்துல கல்யாணமானவங்களுக்கு குழந்தை இல்லங்கறது ஒரு பிரச்சனை என்றாலும் இப்படியொரு நிலைக்குப்போறதுக்கு Health condition சரியாகவும் இல்லை என்பதும் முக்கியமான பாய்ன்ட்.
 
இந்த நிலை நீடித்துக்கொண்டே போனால், கண், சிறுநீரகம், இதயம் மாற்றுச்சிகிச்சை பண்ணற மாதிரி நல்ல Healthy யான ஆண் உடம்புல இருந்து "ஸ்பேம்" எடுத்து பெண்கள் உடலில் செலுத்துவதுப் போன்ற சிகிச்சை பண்ணி குழந்தைப்பிறக்க வைப்பதான் ஒரே வழி.
 
நம் சுற்றுச்சூழல், உடலுக்கு கேடு தருக்கிற உணவு மற்றும் போதைப்பொருள்கள், மரபணு பிரச்சனை போன்ற எதோயொரு காரணத்தினால், நமது அடுத்த சந்ததியை நம்மால் உருவாக்க முடியாமல் போனால்  நமக்கு குழந்தைப்பிறக்க ஸ்பேம் கூட கடன் வாங்கிதான் அடுத்த சந்ததியை உருவாக்க முடியும் என்று தற்கால பிரச்சனை உடைய தீர்வை படத்துல சொல்லிருக்காங்க போல.
 
அப்படியொரு விஷயம் நடைமுறைக்க வர,  இது சரி தவறா? கலாசாரம் இடம் கொடுக்குமானு பல எதிர்ப்புகளையும்  டிரைலர்ல காட்டிருக்காங்க. அப்படி ஸ்பேம் கொடுக்கறனால டோனேட் பண்ணறவங்க வாழ்க்கையில வருகிற பிரச்சனை பற்றியும் படம் பேசிருக்குப்போல. 
 
நகைச்சவை கலந்து, ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வுச்சொல்லிருக்கு படம். யாருக்கெல்லாம் ஸ்பேம் வேணுமோ தாராளமா அள்ளிக்கொடுத்திருக்காரு ஹரிஸ். தாராள பிரபு டிரைலர் எப்படி இருக்கு.. 
 
உங்களுக்கு "ஸ்பேம்" வேணுமா? விரைவில் திரை அரங்கில்
 
-கீதாபாண்டியன்
Published in Cine bytes

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30