Log in

Register



ராஜா ரவிவர்மா ஓவியங்களை அப்படியே புகைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? யோசித்துக் கொண்டே இருக்காமல் அதை செய்து காண்பித்துவிட்டார் பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்.  ரவிவர்மாவின் சில ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த ஓவியத்தில் உள்ள பெண்களின் சாயலில் தோன்றும் நடிகைகளுக்கு ஒப்பனை செய்து, அந்த ஓவியம் போலவே புகைப்படமெடுத்து ஆச்சரியப்பட வைத்துவிட்டார் வெங்கட்ராம்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சமந்தா, ஸ்ருதிஹாசன் என இன்றைய தலைமுறை ஹீரோயின்களில் ஆரம்பித்து நதியா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி என அன்றைய தலைமுறை ஹீரோயின்கள் வரை இதில் போஸ் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கே இது வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால் டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். இன்றைய வைரல் இந்த ஓவியப் புகைப்படங்கள்தான்.

கலக்கிட்டீங்க வெங்கட்ராம். அத்தனை ஹீரோயின்களுக்கும் இன்றைய ஹீரோ நீங்கள்தான்.

Published in Cine bytes