Print this page
Friday, 03 July 2020 07:59

JULY-1

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
VISU VISU JULY-1 1945-MARCH-22 2020
இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது.
 
இயக்குனர் விசு இறந்தபின் வரும் முதல் பிறந்தநாள் இன்று. 1945 ம் ஆண்டு ஜீலை-1 அன்று பிறந்தார். வாழ்க்கையில் நீண்ட காலம் கிடைத்த வேலையைச் செய்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் நாடக உலகத்திற்கும் சினிமா உலகத்திற்கும் தன் காலை பதித்தவர். கே.பாலசந்தரின் உதவி இயக்குனராக இருந்தவர். 
 
எழுத்தாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் பல வேறு அவதாரங்களை எடுத்தார். இவரது பெரும்வாரியான படங்கள் குடும்பம் சார்ந்த பிரச்சனைகளையும் கலகலப்பையும் சொல்லக்கூடியவை. ஒரு 40 வருடம் வாழ்ந்தவர்கள் இவரது படத்தினைப்பார்த்தால் அவரவர் குடும்பத்தையும் குடும்ப பிரச்சனையும் நினைவு கூற முடியும். இவரே நடித்து இயக்கும் படங்களில் படத்திற்கு இடையில் ஒரு மீளா முடியாத முடிச்சினை போட்டு அதனை இறுதி கட்டத்தில் வந்து அவிழ்ப்பார். அவரது படங்களைப் பார்க்கும் நாம் தான் அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருப்போம். அந்த அளவுக்கு ஒரு இணக்கம் ஏற்படும். 
 
கிட்டத்தட்ட 80 படங்களில் இவரது பங்கு எழுத்தாளராகவும், இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும். மேடை, சினிமா, தொலைக்காட்சி என்று ஒரு சுற்றுப்பயணத்தையே மேற்கொண்டிருப்பார்.  ஆனால் இவர் அன்றே இவரது தகுதிக்கு ஏற்ற விருதுக்களை பெற்றுள்ளார். இருப்பினும் இன்று பல விருதுக்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவரை அங்கீகரீக்க பல தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் மறந்து விடுகிறது என்பது முற்றிலும் ஒரு உண்மை. 
 
இவரது கடைசி படம் மணல் கயிறு -2. இவருக்கு என்று ஒரு நடிகர்கள் பட்டாளம் வைத்துக்கொண்டார். பல புதுமுகங்களுக்கே வாய்ப்பு தந்ததார். ஒரே கதையே நாடகத்திற்காகவும் சினிமாகாகவும் மாற்றி அமைத்து எடுப்பார். இவர் மேல் நம்பிக்கையற்றவர்களை நம்ப வைத்தார். இன்று இவரை மறந்தவர்கள் திரையிலும் தரையிலும் ஏராளம். மார்ச்-22 அன்று இயற்கை ஏந்தினார். 
 
இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது. 
 
இவரைப் பற்றி பதிவிட ISR Ventures பெருமைபடுகிறது.
Read 439 times

Related items

Login to post comments