Log in

Register



Friday, 03 July 2020 07:59

JULY-1

இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது.
 
இயக்குனர் விசு இறந்தபின் வரும் முதல் பிறந்தநாள் இன்று. 1945 ம் ஆண்டு ஜீலை-1 அன்று பிறந்தார். வாழ்க்கையில் நீண்ட காலம் கிடைத்த வேலையைச் செய்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் நாடக உலகத்திற்கும் சினிமா உலகத்திற்கும் தன் காலை பதித்தவர். கே.பாலசந்தரின் உதவி இயக்குனராக இருந்தவர். 
 
எழுத்தாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் பல வேறு அவதாரங்களை எடுத்தார். இவரது பெரும்வாரியான படங்கள் குடும்பம் சார்ந்த பிரச்சனைகளையும் கலகலப்பையும் சொல்லக்கூடியவை. ஒரு 40 வருடம் வாழ்ந்தவர்கள் இவரது படத்தினைப்பார்த்தால் அவரவர் குடும்பத்தையும் குடும்ப பிரச்சனையும் நினைவு கூற முடியும். இவரே நடித்து இயக்கும் படங்களில் படத்திற்கு இடையில் ஒரு மீளா முடியாத முடிச்சினை போட்டு அதனை இறுதி கட்டத்தில் வந்து அவிழ்ப்பார். அவரது படங்களைப் பார்க்கும் நாம் தான் அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருப்போம். அந்த அளவுக்கு ஒரு இணக்கம் ஏற்படும். 
 
கிட்டத்தட்ட 80 படங்களில் இவரது பங்கு எழுத்தாளராகவும், இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும். மேடை, சினிமா, தொலைக்காட்சி என்று ஒரு சுற்றுப்பயணத்தையே மேற்கொண்டிருப்பார்.  ஆனால் இவர் அன்றே இவரது தகுதிக்கு ஏற்ற விருதுக்களை பெற்றுள்ளார். இருப்பினும் இன்று பல விருதுக்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவரை அங்கீகரீக்க பல தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் மறந்து விடுகிறது என்பது முற்றிலும் ஒரு உண்மை. 
 
இவரது கடைசி படம் மணல் கயிறு -2. இவருக்கு என்று ஒரு நடிகர்கள் பட்டாளம் வைத்துக்கொண்டார். பல புதுமுகங்களுக்கே வாய்ப்பு தந்ததார். ஒரே கதையே நாடகத்திற்காகவும் சினிமாகாகவும் மாற்றி அமைத்து எடுப்பார். இவர் மேல் நம்பிக்கையற்றவர்களை நம்ப வைத்தார். இன்று இவரை மறந்தவர்கள் திரையிலும் தரையிலும் ஏராளம். மார்ச்-22 அன்று இயற்கை ஏந்தினார். 
 
இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது. 
 
இவரைப் பற்றி பதிவிட ISR Ventures பெருமைபடுகிறது.
Published in Actors
மிடில் கிளாஸ் பசங்களுக்கு இருக்கற கொழுப்ப பாரு... ஒரு சாதாரணமான  மிடில் கிளாஸ் பையன் ஒரு நல்ல செட்டிலான வேலைக்கு போகறதுக்கு ரொம்ப பாடு பாடுவான். ஆனால் போயிட்டானா அவன் பண்ணற அலப்பற இருக்கே...
 
அக்கா-தம்பி இரண்டுப்பேரையும் சொந்தக்கார மாமா "நாரதர் நாயுடு" தான் வளர்க்கறாரு. அப்பறம் கல்யாணம் பண்ணி அக்காவும் மாமாவும் சென்னையில வசிக்கிறாங்க. இரண்டுப்பேருக்கும் எப்பவும் லவ் தான். தம்பிக்காரனுக்கு வேலைக்கிடைச்ச உடனே அவன் சென்னையிலையே வேற இடத்துல தங்கப்போயிட்டான். அடுத்தென்ன கல்யாணம்தான். ஆனால் அதுக்கு அவன் போட்ட கன்டிஷனும் எதார்த்துல நடந்தும் என்ன என்பதுதான் கதையே..
 
கதாநாயகியோட குடும்பத்துல அப்பாக்கு காது கேக்காது. அவரால நிறைய குழப்பம் நடக்கும். ஒரு அண்ணன் வீரமா பையன். வேற்றுமதத்துல கல்யாணம் பண்ணிட்டு போயிடுவான். இன்னொரு மகன் பயந்தாங்கோலி. அம்மா, பொன்னு கல்யாணமான போதும்னு நினைக்கறாங்க. பொன்னு பத்து failஆகிட்டு நாலு வருடமா வீட்டுலையே சும்மா இருக்காள்.
 
கிட்டுமணி கல்யாணம் பண்ணிக்க 8 கன்டிஷன் போடறான். அந்த கன்டிஷன் எல்லாம் ஒத்து வரமாதிரி பொன்னே கிடைக்கல. கிடைச்ச எல்லாரையும் ரீஜட் பண்ணறான். அப்போ, தன் சொந்தக்கார மாமா "நாரதர் நாயுடு"  கல்யாண போகராக இருக்கறனால அவரட்ட அந்த பொறுப்ப ஒப்படைக்கிறான். 
 
"கன்டிஷன் நம்பர் ஒன்னு" -நான் B.Sc  அதனால பொன்னு பி.எஸ்.ஆகவும் இருக்க கூடாது. எஸ்.எஸ்.எல்.சி யாகவும் இருக்க கூடாது. ஆனால் கீழ படிச்சிருக்கனும்
"நாரதர் கழகம்" : கிட்டுமணி பொண்டாட்டி பத்தாவது Fail. ஆனால் பி.எஸ். சி பஸ்ட் இயர்னு சொல்லிருப்பாங்க.
 
கன்டிஷன் நம்பர் ஒன் ஏ: அவளுக்கு ஷந்தி தெரிஞ்சிருக்கனும். எங்க ஆப்ஸ் இந்தியா முழுவதும் இருக்கு. அங்க போன இவ காய்கறி கடைக்காரனோட பேசனும். 
"நாரதர் கழகம்"- எதோ லைடா தெரியும்னு சொல்லிட்டாங்க. ஆனால் உச்சக்கட்டத்துல எல்லா பிரச்சனையில இருந்தும் விடுபட ஷந்திதான் உதவும்.
 
"கன்டிஷன் நம்பர் இரண்டு"- மெட்ரஸ் ல திருட்டு பயம் அதிகம். பகலையே திருடன் வருவான். நான் ஆபிஸ் போயிருக்கும்போது பகல யாராவது திருடன் வந்தா தைரியமா அவன  எதிர்த்துப்போராடனும். 
"நாரதர் கழகம்"- நாரதர் கழகம் எல்லாம் அவன் புருஷனுக்கு தெரிய வரும்போது, புருஷன் கிட்ட போராடுவாள்.
 
"கன்டிஷன் நம்பர் மூன்னு"- நான் சைவம் தான் ஆனால் என் நண்பனுக்கு அசைவம் சமைத்துக் கொடுக்கனும். அதனால அவளுக்கு அசைவம் சமைக்க தெரியனும். 
"நாரதர் கழகம்"- சமையலுக்கு நாரதர் நாயுடு உதவி கண்டதையும் குழம்புல போடுவார். ஆனால் கிட்டுமணியோட நண்பர் அத சாப்பிடாமல் சாமிக்கு மாலப்போட்டு தப்பிச்சுடுவான். 
 
"கன்டிஷன் நம்பர் நாலு"- அந்தப்பொன்னு எனக்கு மட்டும்தான் அழகா இருக்கனும். அடுத்தவன் கண்ணுக்கு அழகாக இருக்க கூடாது. அப்படினா கல்யாணத்துக்கு முன்னாடி அவள யாரும் காதலிருச்ச கூடாது.
"நாரதர் கழகம்"- கிட்டுமணிக்கு போட்டோ காட்டறதுக்கு முன்னாடி. நாயுடு போட்டோ பார்த்துட்டு இந்த போட்டோலையே கேவலமா இருக்கேனு சொல்லுவாரு. ஆனால் கிட்டுமணி கண்ணுக்கு அவ அழகா இருப்பாள். 
 
"கன்டிஷன் நம்பர் ஐஞ்சு"- எனக்கு மிருதங்கம் வாசிக்க தெரியும். அந்த பொன்னு நடனம் ஆடனும். 
"நாரதர் கழகம்"- முதலில் அவளுக்கு நடனம் ஆட தெரியாதுனு கிட்டுமணிக்கிட்ட மாட்டிப்பாள். ஆனால் கிட்டுமணியோட அக்கா திட்டி ஆடச்சொன்ன பிறகு நடனமும் வேணாம் ஒன்னும் வேணானு சொல்லிடுவான். 
 
"கன்டிஷன் நம்பர் ஆறு"- நானே செத்தாகூட அந்தப்பொன்னு அழக்கூடாது. 
"நாரதர் கழகம்"- இந்த கழகத்தில் பொய் சொல்லி மாட்டிக்கிட்டு ஒவ்வொரு நாளும் இவன் அந்த பொன்ன அழ மட்டும்தான் வைப்பான்.
 
"கன்டிஷன் நம்பர் ஏழு"- என்னைப்பற்றிய ரகசியம் அவளுக்கும் அவள பத்தி எனக்கும் தெரியனும். ஆனால் எங்கப்பத்திய ரகசியம் வெளி உலகத்துக்கு தெரியக்கூடாது. 
"நாரதர் கழகம்"- கிட்டுமணி தான் நினைச்சமாதிரி பொண்டாட்டி கிடைக்கல. தெரிஞ்ச உடனே பொண்டாட்டியோட அம்மா வீட்டுல சண்டைப்போட்டு பொண்டாட்டிய கூட்டிட்டு போகும்போது பக்கத்துல குடியிருக்கற எல்லாருக்கும் இவங்க விஷயம் தெரிய வந்திடும்.
 
"கன்டிஷன் நம்பர் எட்டு"- கல்யாணத்துக்கு அப்பறம் நான் செத்துட்டால் அந்த பொன்னு வேற கல்யாணம் பண்ணிக்கனும். 
"நாரதர் கழகம்"- ஆனால் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைச்சப்போது வீட்டுல தினந்தோஷம் வரும் சண்டையில அந்த பொன்னு மனம் உடஞ்சு தற்கொலை முயற்சிச்செய்வால் ஆனால் நாயுடு காப்பாத்திடுவாரு.
 
இந்த கன்டிஷன் போயி தனமாக இருக்கு. இந்த மாதிரி பொன்னு கிடைக்காதுனு. அவன் சொன்ன கன்டிஷனுக்கு ஏற்று மாதிரி பொன்னு இருக்குனு பொன்னோட குடும்பமே பொயி கல்யாணம் நடந்து அது கூட நடந்திடும். ஆனால் தன்னோட எந்த கன்டிஷனும் எதார்த்துல நடக்கலனு நிறைய பிரச்சனைகள் வரும். 
 
அதுக்குப்பின்னும் நாரதர் கழகத்துல மாப்பிள பொன்னு குடும்பமே சேர்ந்து அவங்க இரண்டுப்பேரையும் சேர்த்து வைப்பர். எந்த கன்டிஷனையிலும் ஒத்து வராதவ. கற்பம் தரிப்பாள். அப்போலிருந்து இரண்டுப்பேரும் சேர ஆரம்பிப்பாங்க. 
 
(நாரதர் நாயுடு ஒரு பணக்காரக்குடும்பம். 40 கன்டிஷன் போட்டு ஒரு பொன்ன பார்த்து அந்த பொன்ன ரீஜட் பண்ணிடுவான். அவங்க அவமானம் தாங்கமா செத்துவாங்க. அதுல இருந்து வெளியே வரமுடியாம. கல்யாண போகராகி ஏழையான அவழை பெண்ணுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைப்பாரு. அதுல ஒரு பொன்னுதான். "கிட்டுமணியோட மனைவி உமா". )
 
கடைசியில ஒரு நல்லா பொன்னு கல்யாணமாகி எந்த பிரச்சனையும் இல்லாம இருக்க பாடுபட்டவரை எல்லாருமே தப்பா பேசுவாங்க. ஆனால் கடைசி உமா வந்து நாயுடுவ பார்த்துச் சொல்லுவாள்.
 
" எனக்கு நல்ல வாழ்க்கை கொடுத்ததுக்கு நன்றி" 
 
இங்கையும் போடப்பட்ட கன்டிஷன் முடிச்சுகளை விசு இயக்கி நடித்து அவிழ்கிறார். இதில் சிரிப்பிற்கு பஞ்சமில்லை ....
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies
இயக்குநர் விசு படமென்றாலே நிறைய கதாபத்திரங்களை கொண்டவர்கள் இருப்பாங்க. ஒவ்வொரு கதாபாத்திரமும் தரமான உறவைகளை ஞாபகப்படுத்தும். இந்த படம் பட்டுக்கோட்டை பெரியப்பா, பாதியிலிலே நின்னுப்போன தன்னோட தம்பி மகன் கல்யாணத்த அழையா விருந்தாளி பெரியப்பா வந்து எப்படி நடத்தி வைக்கறாரு என்பதுதான் கதை. அதுல எனக்கு பிடித்தது, ஒரு சில விஷயம் என் மனதில் பதிந்த விஷயத்த பகிர்றேன்.
 
பார்த்தத்தில் பிடித்தது
 
1) 38 வயது நிரம்பிய கல்யாணமாகாத கல்யாணமாக ஆசையே இல்லாத பெண். தைரியமானவள். ஒரு நிறுவனத்துல president யாக இருக்கக்கூடியவளுக்கு தான் ஒரு தலைவிக்கு நிகரானவள் என்ற கணம் இருக்கு. தன்னோட புகழ பாடனும். தன்னைப்பற்றி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். தான் சொன்ன உடனே ஏன்னுக் கேக்காம செய்யுறவங்க தன்னோட இருக்கனும். இப்படி எல்லாம் இருக்கனும் என்று ஆசையுள்ள ஒரு பெண். 
 
2) இந்த கதையின் நாயகன். வாய திரிந்துப்பேச தெரியாத பையன். அம்மா சொல்லறது செய்யறது எல்லாம் சரினும் உண்மையுனும் நம்பக்கூடியவன். இவனுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதான் அம்மாவும் வேணாம். அம்மா வேண்டாம்னு சொல்லற பொன்னும் வேணும். இப்படியொரு ஹீரோவா...
 
3) இந்த படத்தின் கதாநாயகி, தன் வாழ்க்கையின் முடிவை தான் எடுக்க முடியலையே. அம்மாவும் அண்ணனும்தானே எடுக்கறாங்க. எனக்கு வேணும், எது மேல எனக்கு ஆசைனு கேக்க கூட மாட்டறாங்கனு ஏங்கிப்போயி சிவனேனு ஒரு வாழ்க்கை வாழும் பொன்னு.
 
4) கதாநாயகனோட சொந்த தாய் மாமா. 40 வயது ஆச்சு எனக்கொரு கல்யாண பண்ணி வைக்க அக்காக்கு தோன்னலையே..இப்படி எப்படா எனக்கு கல்யாணமாகும் நாக்க தொங்க போடும் திரியுற ஆள்ளு. இவனுக்கு கல்யாணம் ஆகலனு  கல்யாணமாக போறவங்கள பிரிச்சுல விடறான்.
 
5) தலைவிக்கு ஒரு தம்பி, அவன் ஒரு டி.டி.ஆர் அதனாலையோ என்னவோ தெரியல. அவன் வாயில இருந்து வர வார்த்த எல்லாமே டிரெயின் சமந்தமதான் இருக்கும். டிரெயின் பத்தி பேசாம இருக்கவே முடியாது அவனால. அதுமட்டும் கல்யாணம் அப்படினு தனக்கு ஒன்னு நடந்தா அதுல ஒரு தியாகம் இருக்கும்னு நினைப்பவன்.
 
6) அப்படி இவன் பண்ண தியாகம். என்னன்னா,  பிறந்ததுல இருந்து ஆம்பிள குறள் ல பேசற 
பொன்னுக்கு பெருந்தன்மையா வாழ்க்கைக்கொடுத்திட்டான். 
 
7) இத தாண்டி, கதாநாயகன் வேலைச்செய்யற ஆபிஸ் ல ஒரு களக். பார் டைம் மா கை ஜோசியம் பாக்கறான். அவனுக்கு கொஞ்சம் சபல புத்தி. ஜோசியம் பாக்கறேனு சொல்லி எல்லா பொன்னுகளையும் தொடுவான். அதனால ஆபிஸ் ல ஒரு குண்டு கட்டி அதுக்குள்ளே வேலைச்செய்ய சொல்லிருப்பாங்க. அது ரொம்ப காமெடியா இருக்கும். நடைமுறையில அப்படி நடந்தா வேலைய விட்டே தூக்கிடுவாங்க. 
 
இப்படி பல கதாபாத்திரங்கள் நிறைந்த இந்த படத்தில் எனக்கு பிடித்த சில  கதாபாத்திர வடிவமைப்புகள் தான் இப்படத்தைப் பற்றிய தன்னுடைய பகிர்வு. 
 
-கீதாபாண்டியன்
 
 
Published in Classic Movies
அவர்வர் தலைவிதியை ஆண்டவன் தான் எழுதுவான்" ஆனால் நீ ...??
 
திரு. இயக்குநர் விசு அவர்கள் இயக்கிய படம் மீண்டும் சாவித்திரி(1996). இந்த கதையின் கதாநாயகி வரலாற்றில் வரும் சாவித்திரி போலக் குணத்தைக்
கொண்டுயிருப்பவள்.  தன் வாழ்க்கையில் தான் எடுக்கும் முடிவு சரியானதாகதான் இருக்கும் என்று எண்ணும் தைரியமான பெண்ணாக வளர்ந்தவள். 
 
பொதுவாக ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றார் போல் அக்குடும்பத்தின் குழந்தைகள் வளரும். அதுப்போல அப்பா, மகள் இருவரை மட்டும் கொண்ட குடும்பம். வீரமான பார்வை, தைரியமான பேச்சு, தப்புகளை தட்டிக்கேட்கும் பெண், புத்திசாலிதனமாக எடுக்கும் முடிவுகள் இது அனைத்தும் அவளுக்கே கூரிய குணம். அவளைப்பார்க்கும்போது இந்த பெண் மாதிரி நாமும் இருக்கனும் என்ற எண்ணம் கண்டிப்பாக வரும். 
 
ஒரு வயசான அப்பா பொது மக்களுக்கு நல்லது நடக்கனுனா என்ன வேணா செய்யலாம்னு நினைக்கற ஒருத்தர். இளைஞர்கள் நினைச்சால்தான் நாடு முன்னேறும் என்று இளைஞர்களை வழி நடத்தக்கூடியவர். இருந்தாலும் தன் மகள் விஷயத்துல ஒரு சுயநலவாதி. ஒரு ஏழைக்குடும்பம் கையில கிடைக்கற ஒரு நாலு காசுதான் அவங்க வாழ்க்கையில அவங்க எடுக்கற முடிவுக்கெல்லம் காரணம். அளவான வீடு.  தேவையான அளவுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கொண்ட குடும்பம். 
 
"அவர்வர் தலைவிதியை ஆண்டவன் தான் எழுதுவான்" ஆனால் இவளுடைய வாழ்க்கை தலை எழுத்தை இவளே எழுதிக்கொண்டாள். என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் தனக்குனு ஒரு கல்யாணம் குடும்பம்னு வாழனுமென்று ஏங்கிப்போயிருக்காள். அந்த ஏக்கத்திற்கு அவள் வீட்டில் கல்யாண பேச்சு பேச ஒரு தாய் இல்லை என்பதோ, தந்தையை தனி விட மனசு இல்லாம இருப்பதோ, கல்யாணத்துக்கு நகை போடனும் என்ற எண்ணமோ அல்லது தான் ஒரு ஏழை குடும்பம் என்பதோ என்ற எதாவது ஒரு காரணம் இருக்கலாம். 
 
அந்த சமயத்தில் நீயுஸ் பேப்பரில் வந்த வித்தியாசமான விளம்பரத்தை பார்த்து வியந்தாள். "மணமகள் தேவை" 
தன் அப்பாவுடைய வார்த்தையை ஏற்காமல் மறுப்பு தெளிவித்து பதில் கடிதம் போட்டாள். அந்த சமயத்தில் ஒரு அழகான இளம் ஆண் தன் குடும்பத்தில் அவர்  சுமக்கும் சுமையை எடுத்துச்சொல்லினார். "அம்மாக்கும் ஆஸ்துமா, அப்பாயொரு மனநோயாளி, தம்பியொரு குடிக்காரன், தங்கை கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத பெண். இப்படிப்பட்டவர்கள் பார்த்துக்கொள்ளும் ஒரு பெண் தான் வேண்டும் என்று விளம்பரம் போட்டேன்". 
 
நமது கதாநாயகியின் அப்பா பேச்சுக்கு மறுப்பு தெளிவித்து கணவனை கைப்பிடித்து முதலிரவில் பாலங்குழியில் விழுந்தாள். "ஏற்கனவே கல்யாணமாகி இரவில் மட்டும் புத்தி பேதலித்து மயங்கி விழும் மனநோயாளி" என்று தெளிய வருகிறது. குடும்பமே சேர்ந்து ஏமார்த்திருச்சு. அவளை அந்த குடும்பத்தில் இருக்கும் யாருமே மதிக்கல. தனது புத்திசாலிதனத்தில் எடுத்த முடிவின் இயலாமையால் அவள் பட்டபாடு பெரும் பாடு. 
 
இறுதியில் தன் தலையெழுத்தை தவறாக எழுதிய அந்த புத்திசாலிதனமே மீண்டும் திருத்தி எழுதிய விதமாக தன்னை உதாசினம் படுத்திய மாமனார் குடும்பமே கையெடுத்து கும்பிடும் விதமாக, தன் கணவனின் இந்த நிலைமைக்கு காரணமானவனை கண்டுப்பிடித்து ஜெயிலில் அடைத்தாள். கணவனோட முதல் பொண்டாட்டி ரொம்ப நல்லவள் என்று நிருப்பித்து இருவரையும் சேர்த்து வைத்து விட்டு மீண்டும் தன் அப்பாவோட பழைய மகளாக வீட்டுற்கு வந்து விடுவாள். எப்படினு படத்துல பாருக்கும்போது.  நீங்களே சொல்லுவிங்க,
 
"நானும் இவளைப்போல இருக்கனும்"
 
வெவ்வொரு முடிச்சுக்களை ஒரே மாதிரியாக போட்டு வேறு விதமாக அவிழ்ப்பதே விசு அவர்களின் திரைக்கதை. 
 
GEETHA PANDIAN
 
Published in Classic Movies

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30