Log in

Register



Friday, 03 July 2020 07:59

JULY-1

இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது.
 
இயக்குனர் விசு இறந்தபின் வரும் முதல் பிறந்தநாள் இன்று. 1945 ம் ஆண்டு ஜீலை-1 அன்று பிறந்தார். வாழ்க்கையில் நீண்ட காலம் கிடைத்த வேலையைச் செய்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் நாடக உலகத்திற்கும் சினிமா உலகத்திற்கும் தன் காலை பதித்தவர். கே.பாலசந்தரின் உதவி இயக்குனராக இருந்தவர். 
 
எழுத்தாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் பல வேறு அவதாரங்களை எடுத்தார். இவரது பெரும்வாரியான படங்கள் குடும்பம் சார்ந்த பிரச்சனைகளையும் கலகலப்பையும் சொல்லக்கூடியவை. ஒரு 40 வருடம் வாழ்ந்தவர்கள் இவரது படத்தினைப்பார்த்தால் அவரவர் குடும்பத்தையும் குடும்ப பிரச்சனையும் நினைவு கூற முடியும். இவரே நடித்து இயக்கும் படங்களில் படத்திற்கு இடையில் ஒரு மீளா முடியாத முடிச்சினை போட்டு அதனை இறுதி கட்டத்தில் வந்து அவிழ்ப்பார். அவரது படங்களைப் பார்க்கும் நாம் தான் அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருப்போம். அந்த அளவுக்கு ஒரு இணக்கம் ஏற்படும். 
 
கிட்டத்தட்ட 80 படங்களில் இவரது பங்கு எழுத்தாளராகவும், இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும். மேடை, சினிமா, தொலைக்காட்சி என்று ஒரு சுற்றுப்பயணத்தையே மேற்கொண்டிருப்பார்.  ஆனால் இவர் அன்றே இவரது தகுதிக்கு ஏற்ற விருதுக்களை பெற்றுள்ளார். இருப்பினும் இன்று பல விருதுக்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவரை அங்கீகரீக்க பல தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் மறந்து விடுகிறது என்பது முற்றிலும் ஒரு உண்மை. 
 
இவரது கடைசி படம் மணல் கயிறு -2. இவருக்கு என்று ஒரு நடிகர்கள் பட்டாளம் வைத்துக்கொண்டார். பல புதுமுகங்களுக்கே வாய்ப்பு தந்ததார். ஒரே கதையே நாடகத்திற்காகவும் சினிமாகாகவும் மாற்றி அமைத்து எடுப்பார். இவர் மேல் நம்பிக்கையற்றவர்களை நம்ப வைத்தார். இன்று இவரை மறந்தவர்கள் திரையிலும் தரையிலும் ஏராளம். மார்ச்-22 அன்று இயற்கை ஏந்தினார். 
 
இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது. 
 
இவரைப் பற்றி பதிவிட ISR Ventures பெருமைபடுகிறது.
Published in Actors
லக்கு அடிக்கும் சில தொகுப்பாளர்கள்-ரக்ஷன்
 
தொகுப்பாளர்கள் சீரியலையோ அல்லது திரைப்படத்திலையோ நடிகர் ஆவதும் நடிகை ஆவதும் கடந்த சில காலமாக டிரென்டிங்கா நடந்திட்டு இருக்கு. அவங்க நடிப்புலகத்திற்கு வந்து ஜெய்ப்பதும் தோற்பதும் அவர் அவர் திறமையைப்பொருத்தது. நடிகர் மற்றும் நடிகையை தேர்ந்தெடுப்பதில் பல அரசியல்கள் இருந்தாலும் வாய்ப்புகளும் அளிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. 
 
அந்த வகையில் வெள்ளித்திரையில் வாய்ப்புக் கிடைக்காத பல நளிவுடைந்தவர்கள் சின்னத்திரையில் நடிக்க வருக்கிறார்கள். சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த சிலர் வெள்ளித்திரையில் மின்னவும் செய்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் போல பல வருடமாக விஜய் டிவி Product யாக இருக்கக்கூடிய ரக்ஷன் முன்னால ராஜ் டிவி, கலைஞர் டிவியினு பல இடங்கள தன் முகத்த காட்டிருந்தாலும் விஜய் டிவி தான் ஒரு நல்ல அடையாளத்தக்கொடுத்தது. 
 
கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, மேலும் பல நிகழ்ச்சிகள் கடந்த 5வருடமாக செய்ற இவரு இப்ப திரைப்படங்களையும் நடிக்கறாரு. இவருதானே என்று அடையாளப்படுத்தும் வகையில் அந்த படம் அமைந்தது. கிட்டத்தட்ட முதல் படத்துலையே நல்ல நகைச்சுவைக்கலந்த படம் முழுவதும் பயணம் செய்யக்கூடிய செகண்டூ ஹீரோவாக கலக்கிருந்தார். 
 
"விஜய் டிவி Product னா சும்மாவா" தொடர்ந்து கலக்கும் ரக்ஷன் இன்னும் பல பரிமாணங்களைப் பாக்கனும் என்று நாம் வாழ்த்துவோம். 
 
-கீதாபாண்டியன்
Published in Actors
காவல்துறை உங்கள் நண்பன்
 
ஒரு காமன் பிப்பிள்ளுனு சொல்லக்கூடிய பொது மக்களுடன் காவல்துறை எந்த அளவில் உறவு வைத்துள்ளது. தப்பு பண்ணறவன் விட்டுட்டு அப்பாவியை தண்டிக்கற காவல்துறையுடைய ஆதிக்கத்தையும் எதார்த்தமான பொது ஜெனங்களுடைய அழுகையும் சொல்லும் படம். பொது மக்களுடைய பயம்தான் போலீஸ்காரர்களுடைய ஆயுதம் என்று சொல்லக்கூடிய வகையில் அழுத்தமான காட்சிகளை உள்ளடக்கியிருக்கு கதை களம். தெரிஞ்சோ தெரியாமலோ மாட்டிக்கிட்டு முழிக்கும் கதாநாயகன். மக்களுக்காகதான் காவல்துறை. காவல்துறைக்காக மக்கள் இல்ல என்றுச்சொல்லும் வகையில் ஆழமான கருத்தை உள்ளடக்கியிருக்கு டிரைலர். 
 
கீதாபாண்டியன்
 
 
 
Published in Movies this week

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30