Print this page
Saturday, 07 March 2020 03:36

'நீ காலியான கழுத்தோட வா நான் தாலியோட வரேன்'

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
மதுர ஜில்லா மச்சான் தாண்டி என் ஜாதகத்தில் குரு உச்சம் தாண்டி!!!  மதுர ஜில்லா மச்சான் தாண்டி என் ஜாதகத்தில் குரு உச்சம் தாண்டி!!! DANUSH
 
மதுர ஜில்லா மச்சான் தாண்டி என் ஜாதகத்தில் குரு உச்சம் தாண்டி!!!
 
இந்த வரியின் போது தனுஷ், நீல ஆடையும் தலைப்பாவும் போட்டு வெளியூர் ஆள் பூம்பூம் மாட்டுக்காரன் மாதிரி இருக்கார். மேலும் 'என் நேரம் நல்லாயிருக்கு உன்ன நான் தூக்கிட்டு போயிட்டுவேன்' அர்த்தம் போல.
 
 முதல் பத்தியில் இவரு இப்படி கேட்டு அந்த பொண்ணோட தோப்பில வர்ணிக்காரு அதுக்கு அந்த பொன்னு 'ஏய் நான் சிட்டு தான் ஆனால்  நான் தமிழ் பொன்னு நீ என் பக்கம் வந்தா நான் உன்ன வெட்டுப்போடுவேனு' சொல்லுது. 
 
அடுத்த பத்தியில் சாதாரணமான பையன் மாதிரியான உடையில் தனுஷ் வந்து, 'என்ன உடல் மா இது. நான் பறந்து வந்து நீ குளிக்கறத பார்ப்பேன்' மீண்டும் வர்ணிக்காரு. திரும்பவும் 'நீ சொல்லறமாதிரி நடந்தா உனக்கு கண்ணே இல்லாம பன்னிடுவேன்' சொல்லுது அந்த பொன்னு. அந்த பத்தி முழுவதும் இவன் தன் காம உணர்வை வார்த்தையாக வெளிபடுத்த அவளோ, திட்டிட்டே இருக்கறாள். கோபம் அதிகமாகி 'என்னை கொலைகாரி ஆகாதனு' சொல்லுகிறாள். 
 
மூன்றாவது பத்தியில் வயசான ஒருத்தன்  அதிலும் பணக்காரன் மாதிரி இருக்கான். 'நீ காலியான கழுத்தோட வா நான் தாலியோட வரேன்' சொல்வதை கேட்டு, 'தாலி கட்டுனா நான் தாராளமா என்னையே தரேன்' சொல்கிறாள். மேலும் இப்போ அந்த பணக்கார கெட்டப் ல இருக்கற வயசான ஆள் வர்ணிக்கறத கேட்டு, 'என்னோட வயச வெடியாகி கொளுத்தாத சும்மா பேசிட்டே இருக்காதனு சொல்கிறாள்' அதோட உன்ன கல்யாணம் பண்ணிட்டு 'ஆளப்போறேன்' அந்த வார்த்தைக்கு அந்த சின்ன பொன்னு மயங்கி 'இப்ப முத்தம் மட்டும் வாங்கிக்கோ பின்னால மொத்தமா தரேன்' சொல்லி வளையில விழுந்திடறாள். 
 
வரிக்கு ஏற்றமாதிரி உடை மற்றும் கெட்பட் எப்படி தீர்மானிக்கறாங்க. பாடலின் நோக்கம், வரிகள், உடை மற்றும் உடைக்கேற்ற கெட்பட், நடனம், பாடலுக்கான செட், எடிட்டிங் இதுமாதிரி 7 துறை சார்ந்தவர்கள் இதில் இயங்கினால்தான் ஒரு பாடல் பிறக்கிறது. 
 
 
-GEETHA PANDIAN
Read 630 times Last modified on Saturday, 07 March 2020 03:49

Related items

Login to post comments