Print this page
Sunday, 09 February 2020 12:28

அஜித் - கே.எஸ்.ரவிகுமார் : தல ரசிகர்கள் ரசித்த வதந்தி

Written by ISR Cinema
Rate this item
(0 votes)

கே.எஸ்.இரவிகுமார் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார்! இப்படி ஒரு வதந்தி டிவிட்டரில், ஃபேஸ்புக்கிலும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அஜித் ரசிகர்கள் குஷியாக அதை டிரெண்டிங் செய்து கொண்டிருந்தார்கள். என்ன இருந்தாலும் சூப்பர் ஸ்டார் இயக்குநர் அல்லவா. ஆனால் அதை எல்லாம் மறுப்பது போல் இன்று கே.எஸ்.ரவிகுமார் தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். 

Dear friends, my beloved fans, media & film fraternity, a rumor is on rounds right from yesterday in a twitter account on my name stating that I am directing a film with Mr.Ajithkumar under Sun pictures production. This a firm false news and a rumor. I do not own a twitter account & the existing twitter account on my name K.S.Ravikumar is a fake one. Pls do not support the fake account.

Ever Thankful
K.S.Ravikumar

இந்த அறிக்கை வெளியானபின்பும் அந்த வதந்தி சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. நிறைய படங்கள் சரியாக ஓடாமலும், வெளியாகமலும் அஜித்த தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் வரலாறு படம் தந்து அவருடை ஸ்டார் அந்தஸ்தை உறுதி செய்தவர் கே.எஸ்.ஆர். அதற்குப் பின் வந்த வில்லன் அவருடைய ஸ்டார் ரேட்டிங்கை எகிற வைத்தது. அதனால் கே.எஸ்.ஆர் தங்கள் தல படத்தை இயக்குகிறார் என்றதும் அவருடைய இரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். அதனால் அது வதந்தி என்றாலும் அதை இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Read 515 times

Related items

Login to post comments