Log in

Register



Thursday, 17 February 2022 07:01

வேண்டுகோள் : நடிகர் ISR பற்றி உங்களிடம் சுவையான தகவல்கள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள்.

Written by ISR Press release
Rate this item
(0 votes)
Biography : ISR Oru Thirai Minnal Biography : ISR Oru Thirai Minnal

மறைந்த திரைப்பட நடிகர் ISR பற்றி ஒரு இ-புத்தகம் வெளியாகவுள்ளது. ”ஐ.எஸ்.ஆர் ஒரு திரை மின்னல்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் ஐ.எஸ்.ஆர் பற்றி திரைப்பிரபலங்கள் கூறியுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பிரபலங்களின் கருத்துக்களுடன், ஐ.எஸ்.ஆரின் நண்பர்களும், அவர் வசித்த பகுதிகளில் அவருடன் பழகியவர்களும் கூறிய மிகச் சுவையான சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஐ.எஸ்.ஆர் காலத்தில் (1936-1991) வரை கிராமங்கள் எப்படி இருந்தன, மக்கள் நகரங்களுக்கு ஏன் வந்தார்கள், அப்போதைய திரையுலகம், அப்போதைய பழக்க வழக்கங்கள் உட்பட பல சமூக நிகழ்வுகளின் கண்ணாடியாக இப்புத்தகம் தயாராகி வருகிறது.

இது பற்றி அவருடைய மகன் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் கூறும்போது ”எங்கள் தந்தை ராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கநாதன் புத்தூர் என்கிற குக்கிராமத்தில் பிறந்து, சென்னை வந்து படித்து, நாடகம், சினிமாக்களில் நடிக்கும்போது, வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை, வளசரவாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் வசித்திருக்கிறார். அப்போது அவர் சந்தித்த சாதாரண மனிதர்களும், பிரபலங்களும் ஏராளம். தெருக்கூத்து காலத்திலிருந்து, மேடை நாடகம், சினிமா உட்பட டெலிவிஷன் சீரியல் வரை அவர் வாழ்ந்திருக்கிறார். எனவே அவரைப் பற்றிய பதிவு என்பது இந்த மாற்றங்களையும் குறிப்பதாக இருக்கும்.

அதனால் இப்புத்தகம் எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி மட்டுமல்லாமல், சமகாலத்தில் அவருடன் பணியாற்றியவர்கள், அக்கால வாழ்க்கை முறைகள் மற்றும் அதன் பின் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி அறிந்தவர்கள் யாரேனும் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். அவர்கள் கூறும் தகவல்களையும் சேர்த்து, இரு பாகங்களாக புத்தகம் விரைபில் வெளிவரும்.”, என்றார்.

ஐ.எஸ்.ஆர் ஒரு திரை மின்னல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் வெளியீடு திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடக்கும். அது பற்றிய அறிவிப்பு மார்ச் முதல்வாரத்தில் வெளியாகும் என்று ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கூறியுள்ளார்கள்.

எனவே இம்மாத இறுதி வரை ஐ.எஸ்.ஆர் பற்றிய எந்த தகவல் இருந்தாலும் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சலில் அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது 9962295636 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்வில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் உங்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்வார்கள்.

Read 378 times
Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30