Log in

RegisterISR ADMIN 1

ISR ADMIN 1

விஜய்! சிவப்பு காரில் கறுப்பு மாஸ்க்! என நேற்று சன் டி.வி. குதூகலித்தது. அதை ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருந்தது.
இது எல்லோருக்கும் தெரியும்.
 
அதே சமயத்தில் விஜய் அந்தக் காருக்கும் இன்னமும் வரி கட்டல என்று இன்னொரு கூட்டம் விஜய்யை கிண்டலடித்துக் கொண்டிருந்தது.
பதிலுக்கு அவர் வரி கட்டிவிட்டார் என்று மக்கள் தொடர்பாளர் ரியாஸ், ஒரு டாகுமெண்டை வெளியிட்டுள்ளார்.
 
ஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா... விஜய்யாக இருப்பதும், அரசியல் ஆசை வைத்திருப்பதும்தான் எவ்வளவு பெரிய இம்சை.
 
சென்ற தேர்தலின் சைக்கிள் கதை ஏற்கனவே முடிந்தது. இந்தத் தேர்தலின் கார் கதை இன்றுடன் முடிவடைந்துவிடும் என்றுதான் நினைக்கிறோம். நாளை இன்னொரு கதை பிறக்கும், விஜய் அரசியலில் இறங்கப்போவதில்லை என்று அறிவிக்கிற வரைக்கும்..
ஆஹா... பாவலர் சகோதரர்கள் மீண்டும் இணைந்தார்கள்.
இளையராஜாவுடன் கங்கை அமரன் அமர்ந்திருக்கும் ஃபோட்டோவை டிவிட்டரில் வெளியிட்டார் வெங்கட் பிரபு!
என்னதான் கசப்புகள் இருந்தாலும் இசை உலகை ஆட்சி செய்த அண்ணனையும், தம்பியையும் மீண்டும் ஒன்றாகப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.கசப்புகள் மறைந்து பாவலர் பாட்டுத் தேர் புறப்படட்டும்.
#Illayaraja #GangaiAmaran
சென்னையில ஒரு வாரத்துக்கு முன்னாடியே மார்கழிக்கு லீவு கொடுத்துட்டாங்க போலருக்கு. அது எங்கேயோ மலையேறிடுச்சு. அதனால் இன்று அதிகாலை போகி சம்பிரதாயங்களின் போது குளிர் இல்லை, குப்பையும் குறைவாகத்தான் இருந்தது. அதனால் வருடா வருடம் எடுக்கும் போகி போட்டோவே இந்த முறை மறந்துவிட்டது.
 
ஏழு தீக்குச்சிகள் சீறி அணைந்தபின்னும் திடீர் மழையில் நனைந்த பாயும், பழைய அட்டைப்பெட்டிகளும், காலண்டர்களும், எரிவதற்கு அடம்பிடித்தன. கசிந்த புகைக்கு நடுவில் நான் சலித்துக் கொண்டபோது ஒரு பட்டுப்புடவை பெண்மணி வேகமாக கடந்து சென்றார். காமிரா இருந்திருந்தால் ஒரு குறும்படத்தின் முதல் காட்சியை நேச்சுரல் போகி லைட்டிங்கில் எடுத்திருக்கலாம்.
ஒரு வழியாக போகி நன்றாக எரிந்த போது, அதன் வெம்மை முட்டிவலிக்கு ஒத்தடம் கொடுப்பது போல இருந்தது. அதனால் நான் நகராமல் நின்றிருந்தேன். அந்தப் பெண்மணி திரும்ப வந்து கொண்டிருந்தார். இந்த ஆள் பார்ப்பதற்கு முன் கடந்துவிட வேண்டும் என்கிற வேகம் அவருடைய நடையில் இருந்தது. இந்தக் காட்சியை அவர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் எப்படி எழுதியிருப்பார் என்கிற ஆவலுடன் ஹேப்பி போகி!
சியர்ஸ் மக்காஸ்! உற்சாகமான காலை வணக்கம்!

அறிமுகமாகிறார் விஹான்!
இன்று வெளியாகும் மார்க்கெட்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் விஹான் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்

அவர் நமது ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ”யாதெனக்கேட்டேன்” படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இயக்குநர் சுபாஷ்கய் மும்பையில் நடத்தும் ”விசிலிங் ஹுட்ஸ்” கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றவர். மிகுந்த திறமைசாலி.

கவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தைய்யா கண்ணதாசனுடன் இணைந்து அருமையாக நடித்திருக்கிறான். 

ஷனாயா, விஷாலி, முத்து, சுபா, சித்தன் கார்த்திஷ் என்று எங்கள் டீமே ஜாலியான இளமையும் அனுபவமும் கலந்த டீம். எங்கள் எல்லோருக்குமே இன்று மகிழ்ச்சியான நாள்.

அவர் வெற்றிபெற வேண்டுமென்று யாதெனக்கேட்டேன் படக்குழு மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பாக வாழ்த்துகிறோம்.

Wednesday, 06 November 2019 04:22

VJ Nivetha doing a cameo

We are happy to announce that VJ Nivetha doing a cameo in our under production movie "Yathena Kayten".