Log in

Register



சிவாஜியின் குரலை சென்னை வானொலி நிலையம் நிராகரித்ததா?
சிவாஜி 'பராசக்தி'யில் நடித்து, இன்னும் வேறு சில படங்களிலும் நடித்து அப்போது பிரபலமாகியிருந்தார். வானொலி நாடகங்களுக்கு அப்போதெல்லாம் நல்ல வரவேற்பு. அதில் நடிக்க விரும்பிய சிவாஜி அதற்காக விண்ணப்பித்தார். ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு அவருக்குக் குரல் தேர்வு நடந்தபோது அதில் அவர் சித்தியடையவில்லை, அவரை நிராகரித்துவிட்டார்கள். சிவாஜியால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. கோபத்துடன் அன்று ஒரு சபதம் எடுத்தார். 'இனிமேல் என் வாழ்க்கையில் அகில இந்திய வானொலிக்கும் எனக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது. அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தின் வாசல்படியை என்றென்றும் மிதிக்கமாட்டேன்.'
 
இந்தச் சம்பாசணை எனக்கும் சிவராமகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்தது. சிவராமகிருஷ்ணன் லண்டன் பிபிசி தமிழோசையில் பலவருடங்கள் ஒலிபரப்பாளராகப் பணியாற்றுகிறார். பணி நிமித்தமாகப் பலரைச் சந்தித்துப் பேட்டிகள் எடுத்திருக்கிறார்.
 
தினமலர் (ஏப்ரல் 16, 2016) இதழில் சிவாஜியின் குரல் என்ற கட்டுரையில் அ.முத்துலிங்கம் என்பவர் எழுதியுள்ளதை அப்படியே கொடுத்திருக்கிறேன். (முழுக் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்) இந்தத் தகவலை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இந்தத் தகவல் உண்மையா?
 
Published in ISR Selva speaking
ஒரு சூட்டிங் னா சும்மா இல்ல. எவ்வளவு பேரோட உழைப்பு. எவ்வளவு பேரோட உருவாக்கம். சிவாஜி மாபெரும் நடிகர் ஆனால் கேம்ராவோட சேர்த்து மற்றவர்கள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்தவர்கள் இல்லையென்றால் சிவாஜி மட்டும் இல்லை எந்த நடிகராக இருந்தாலும் அவர்கள்.......? 
 
பொதுவாகவே சில நேயர்கள் எதாவது சூட்டிங்க நேரில் பார்ப்பவர்கள் சொல்வார்கள். "சூட்டிங் நேருல பாக்க நல்லாவே இருக்காது. ரொம்ப சத்தமா கையாமொய்யேனு கையாமொய்யேனு இருக்குமென்று" ஆனால் ஒரு வகுப்பில் குறைந்தது 45 பேர ஒரு லீடர் அமைதிப்படுத்துவதை காட்டினும் பெரிய வேலை இத்தனை துறைகளையும் ஒன்று திரட்டி சூட்டிங் எடுத்து அதற்கு பின்னாடி பல வேலைகள் செய்து படத்த வெளியிடறது. 
 
ஆனால் சினிமா என்னதான் இத்தனை துறைச்சார்ந்தவர்கள் இருந்தால்தான் இயங்கும் என்றாலும் இதில் பலர் சினிமாவை கனவு லட்சியமாகவும் சிலர் இதுவும் ஒரு வேலை என்று அலட்சியமாகவும் எடுத்துட்டு செயல்படுகின்றனர். அது உண்மைதானே...
 
சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இவ்வாறு அமர்களமாகதான் திரைப்படம் சூட்டிங் எடுத்துட்டு இருந்தனர். காலப்போக்கில் ஐந்து நடிகரும் மூன்று தொழிற்நுட்ப கலைஞரும் இருந்தால் போதும்னு குறும்படம் என்று ஒன்று வர ஆரம்பத்தது. அது இளைஞர்களின் திறமையை மற்றவர்களுக்கு புரிய வைக்கும்படி அமைந்தது. இப்போ #லாக்டவுன் நேரத்துல சினிமால சாதித்தவர்கள் அங்க அங்க அவங்க வீட்டுல இருந்தே ஒருங்கிணைத்து நடித்து குறும்படமா போடறாங்க. ஏற்கனவே எடுக்கப்பட்ட திரைப்படம் எல்லாம் OTT  வெளியாகி Middle  மற்றும் High தரப்பினருக்கும் சினிமாவை நேசிப்பவர்களுக்கும் சுவாசிப்பவர்களுக்கும் மட்டும் சென்று சேர்கிறது. மற்ற மக்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வே இல்லை. என்பதும் உண்மைதானே....
 
சூட்டிங் உடைய தன்மையே மாறிக்கொண்டு வருகிறது இது சினிமாவின் புதிய அத்தியாயம்மா?  இல்ல அழிவா?
 
-கீதாபாண்டியன்
Published in Reviews

மீண்டும் சிவாஜி!
கொரோனா யுகத்தில்... நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பட்டியல்களுக்கு நடுவில் சிவாஜி படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன.

ஃபேஸ்புக்கில் நான் உட்பட என்னைச்சுற்றி உள்ள பலரும் 35க் கடந்தவர்களே. இவர்களில் பலர் இளையராஜா இரசிகர்கள், அப்புறம் ரஜினி, கமல் இரசிகர்கள். வெகு அபூர்வமாகத்தான் மற்றவர்கள் அவர்களின் அரட்டைகளில் இடம்பெறுவார்கள். இன்றைய தலைமுறையின் இரசனைகள் பற்றி தெரிந்தாலும் அதனை பொருட்படுத்தாதவர்கள். இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால், கடந்த ஒரு வாரமாக இவர்களுக்கு அல்லது நமக்கு மத்தியில் பழைய சிவாஜி படங்களும், அவரது நடிப்பை பற்றிய சிலாகிப்புகளும் அதிகமாகியிருக்கின்றன.

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இதனை ரசனை மாற்றம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் வேகமான லைஃப் ஸ்டைலில் இருந்து முடங்கி, வீட்டுக்குள் அமர்ந்திருக்கும்போது நாம் விலகி வந்த எத்தனையோ உணர்வுகளையும், உறவுகளையும், வாழ்வியல் முறைகளையும் நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறோம், அதில் ஒன்றுதான் நாம் அசால்டாக மறந்து போன சிவாஜி என்கிற மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பும், அவருடைய படங்களில் காண்பிக்கப்பட்ட குடும்பங்களும், உறவுகளும், பிணக்குகளும், தியாகங்களும், புன்னகைகளும்.

இப்போதும் கூட அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று நம்மில் சிலர் கடந்து போகலாம். ஆனால் அப்படியெல்லாம் கடந்துவிட முடியாமல், சிவாஜி நம்மில் சிலருக்குள் மீண்டும் உணர்வுப்பூர்வமாக அமர்ந்துவிட்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

Published in ISR Selva speaking

வானம் கொட்டட்டும் படத்தை பார்த்துவிட்டு தன்னைப் பாராட்டிய ஒரு ரசிகையால் நெகிழ்ந்துவிட்டார் விக்ரம் பிரபு! காரணம் பாராட்டியவர் சிவாஜி ரசிகை. குடும்பத்துடன் அவர் படத்தைப் பார்த்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் சிவாஜியின் பேரன் என்பதால் மிகுந்த வாஞ்சையுடன் வாழ்த்தியிருக்கிறார். இதனால் நெகிழ்ந்துபோன விக்ரம் பிரபு, தனது மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

 

Published in Cine bytes

இந்திய நாடு என் வீடு...
இந்தப் பாடலை எழுதிய வாலி,
இசையமைத்த எம்.எஸ். வி
பாடிய டி.எம். எஸ், பி. சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எல். ராகவன், மற்றும்
நடித்த சிவாஜி உட்பட எல்லோருக்கும் அன்பும் அணைப்பும்!

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துருக்கர் என் தோழர்

திசை தொழும் துருக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்

எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

கங்கை பாயும் வங்கம் செந்நெல்
கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்

ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
அன்னை பூமி பாரதம்

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
சுந்தரத் தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ

சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ

ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகப் பட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ

சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ

ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிரிந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு

ப்ருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு ஸ்வாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு

ஏனு ஸ்வாமி
ஏனு ஸ்வாமி இல்லி நோடு மைசூரு

படச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
கேரளம் திருச்சூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவ்விட பாக்கணும் நீங்க
தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க

படைச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா அல்லாஹூ அல்லா

சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
தங்கக் கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ

ஜீலம் ஷட்லஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ உம் ஆஹா அவோ ஆவோ

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்னாடு
பகத்சிங் பிறந்த பொன்னாடு
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங்

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
வாழை வழியாக வந்து
பேசிப் பழகும் கிள்ளைகள்

சத்தியம் எங்கள் தேசம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதைப் பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

Published in ISR Selva speaking