Log in

Register



கொளஞ்சி 
 
மகனை பெற்ற அப்பாவும், அப்பாவை நேசிக்காத மகனும் பார்க்க வேண்டிய படம்.....
 
ஒரு நல்ல கிராமத்து வாசம் படம் முழுவதும் வீசும். ஒரு அப்பா, அம்மா, அண்ணன் தம்பி நாலு பேர் கொண்ட வீடு. அப்பாக்கு அண்ணன் குடும்பம், அம்மாக்கு ஒரு அண்ணன் குடும்பம் என்றும் இருக்கின்றனர். 
 
அது போக, இன்றளவும் சிலர் ஊரில் சாதி பிரிவினைகள் பார்க்கின்றனர். அதனை மகன்களுக்கும் சொல்லி தருக்கின்றனர்.
 
நம் கதாநாயகனுக்கு பிடித்த ஒரு முறைப் பொன்னும், கதாநாயகனுக்கு உயிர் நண்பனும் படத்துல ஒரு முக்கிய பங்கு வகிக்கறாங்க. 
 
கொளஞ்சி உடைய அப்பா, எப்போ பார்த்தாலும் கொளஞ்சிய திட்டிட்டே இருக்காங்க. அவன் பண்ணற சேட்டைகள் எல்லாம் ஒன்னுக்கு இரண்டாக அப்பா(அப்பாசாமிக்கு) விவரம் தெரிய வருகிறது. எப்போ பார்த்தாலும் அப்பா அடிப்பாரு. 
 
இவன் என்னதான் அப்பாக்கு பயப்படற மாதிரி இருந்தாலும், எப்போடா இந்த ஆள விட்டுப்போவோம்னே பாக்கறான். 
 
கொளஞ்சி உடைய அம்மா ரொம்ப நல்லவங்க. மகன் மேல அதிகப்படியான பாசம் வைக்கறவங்க. கொளஞ்சிக்கும் அவனுடைய தம்பிக்கும் ஆகவே ஆகாது. 
 
அப்பா, தம்பி மேலதான் பாசமா இருப்பாரு. என்னை பார்த்தாவே அடிக்கறாரு. அதனால கடவுளே இல்லனு கூட நினைக்கறான். 
 
இவங்க மாமாக்கும் கொளஞ்சிக்கும் அப்படியொரு நட்பு. கொளஞ்சி உடைய பெரியப்பா மகள தான், இவங்க மாமா காதலிக்கறாரு. இவங்க இரண்டுப்பேரும் சேர்ந்ததுக்கு கதாநாயகன் தான் காரணம் பிரிஞ்சுப்போனதுக்கும் அவன்தான் காரணம். 
 
அப்பா, தன்னை கண்டிப்பாரு, பயந்தான். பரீச்சையில  fail ஆன நேரத்துல வீட்டுல ஒரு பெரிய சண்டையாகுது. அப்போ அவங்க அம்மா வீட்ட விட்டு அண்ணா வீட்டுக்கு போயிடுறாங்க. அதுதான் சாக்குனு அப்பாட அடி வாங்காம தப்பிக்கறான் மகன். 
 
அப்பாவையும் அம்மாவையும் சேர விடக்கூடாது. சேர விட்டால் எனக்கு அடிதான் விழும் என்று நினைக்கறான். கணவன பிரிஞ்சு இருக்க முடியல மனைவிக்கு, ஒரு வீட்டு அம்மா இல்லாம இளைய குழந்தையும் கணவனும் படற கஷ்டம் பயங்கரம். 
 
ஒரு கட்டத்துல அப்பாகற உறவு எவ்வளவு முக்கியம் அத கொளஞ்சி புரிஞ்சுக்கறான். தான் எவ்வளவு தன் மகன அடிச்சாலும் புடிச்சாலும் ஊருல ஒருத்தன், (இவங்க பிரிஞ்சு இருக்காங்க இதான் சாக்குனு கொளஞ்சி)அடிக்க வரான். அப்போ அப்பா, "ஆயிரம் இருந்தாலும் இவ என் மகன்" மகனுக்காக அடி வாங்கறாரு ஊர்காரன அடிக்கறாரு. அதுல அடி பட்டு மயங்கறாரு. இதல்லாம்  அம்மா புரிஞ்சுப்பாங்கனு நினைச்சு, ஓடி வந்து சொல்லும்போது, அம்மா "நீ எனக்கு புள்ளே இல்ல" இவர இப்படி பண்ணிட்டையேனு தள்ளி விடறாங்க. அப்போ தான் புரியுது சூழ்நிலை சந்தர்ப்பம் தான் ஒருத்தர வேற வேற மாதிரி நிலையில காட்டுதுனு. 
 
அப்பா குணமாகி வரும்போது, குற்ற உணர்ச்சியில துடிச்சுப்போறான். ஆனால், அப்பா பக்கத்துல வந்து நீ இன்னொருத்தன்ட அடி வாங்க கூடாதுதான் அப்பா உன்ன அடிக்கறேன் என்று சொல்லி மகன் கொளஞ்சி யை கட்டி அணைக்கறாரு. 
 
13 வயதை தொட ஒவ்வொரு  குழந்தைக்கும் அப்பா ஒரு எமன் மாதிரி தான் தெரிவாரு. ஆனால், அவருதான் பிரம்மன் அப்படினு புரியும்போது சிலநேரத்துல தான் அந்த உறவு இருக்கும். சில நேரத்துல இல்லாத போதுதான் அப்பாவுடைய அருமையே புரியும் என்று படம் முடியுது. 
 
இதுல சமுத்திரக்கனி அவர்கள் அப்பாசாமி என்கிற பெயரில் கொளஞ்சிக்கு அப்பாவாக இருக்கறாரு. அவருக்கு உள்ள குணநலன்கள் மற்றும் கோபதாபங்கள் எல்லாம் அவருக்கென்றே எழுதப்பட்டுதாக இருக்கு. 
 
அப்பாவ பிடிக்குதோ இல்லையோ, அப்பாவுடைய சாயல் மற்றும் எண்ணம் அனைத்தும் மகன் மனதில் கண்டிப்பாக பதியும் அதுதான் அவன வளர்க்கும்.
 
 எங்க அப்பா சொல்லிருக்காருனு வாழ்க்கையில ஒரு முறையாவது மகன் சொல்லுவான். கூடவே இந்த ஆளு உயிர எடுக்கறாருனும் ஒரு முறையாவது சொல்லுவான் மகன். அதுபோல அந்த ஆளு இருந்திருந்தால் எனக்கு இப்படியொரு பிரச்சனையே வந்திருக்காது அப்படினும் ஒரு முறையாவது மகன் சொல்லுவான். அது தான் ஒரு நல்ல அப்பாவின் வெற்றி. 
 
மகனை பெற்ற அப்பாவும், அப்பாவை நேசிக்காத மகனும் பார்க்க வேண்டிய படம். 
 
Geetha Pandian.
Published in Reviews