Log in

Register



 
 
 தற்போது விஜய் அவர்களை இயக்கி வரும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த தீபாவளி அன்று, பிகில் - ளுடன் வெளியான "கைதி" ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் கைதி படமானது ரீமேக் ஆக உள்ளது.
 
 
 
Published in Cine bytes
கொளஞ்சி 
 
மகனை பெற்ற அப்பாவும், அப்பாவை நேசிக்காத மகனும் பார்க்க வேண்டிய படம்.....
 
ஒரு நல்ல கிராமத்து வாசம் படம் முழுவதும் வீசும். ஒரு அப்பா, அம்மா, அண்ணன் தம்பி நாலு பேர் கொண்ட வீடு. அப்பாக்கு அண்ணன் குடும்பம், அம்மாக்கு ஒரு அண்ணன் குடும்பம் என்றும் இருக்கின்றனர். 
 
அது போக, இன்றளவும் சிலர் ஊரில் சாதி பிரிவினைகள் பார்க்கின்றனர். அதனை மகன்களுக்கும் சொல்லி தருக்கின்றனர்.
 
நம் கதாநாயகனுக்கு பிடித்த ஒரு முறைப் பொன்னும், கதாநாயகனுக்கு உயிர் நண்பனும் படத்துல ஒரு முக்கிய பங்கு வகிக்கறாங்க. 
 
கொளஞ்சி உடைய அப்பா, எப்போ பார்த்தாலும் கொளஞ்சிய திட்டிட்டே இருக்காங்க. அவன் பண்ணற சேட்டைகள் எல்லாம் ஒன்னுக்கு இரண்டாக அப்பா(அப்பாசாமிக்கு) விவரம் தெரிய வருகிறது. எப்போ பார்த்தாலும் அப்பா அடிப்பாரு. 
 
இவன் என்னதான் அப்பாக்கு பயப்படற மாதிரி இருந்தாலும், எப்போடா இந்த ஆள விட்டுப்போவோம்னே பாக்கறான். 
 
கொளஞ்சி உடைய அம்மா ரொம்ப நல்லவங்க. மகன் மேல அதிகப்படியான பாசம் வைக்கறவங்க. கொளஞ்சிக்கும் அவனுடைய தம்பிக்கும் ஆகவே ஆகாது. 
 
அப்பா, தம்பி மேலதான் பாசமா இருப்பாரு. என்னை பார்த்தாவே அடிக்கறாரு. அதனால கடவுளே இல்லனு கூட நினைக்கறான். 
 
இவங்க மாமாக்கும் கொளஞ்சிக்கும் அப்படியொரு நட்பு. கொளஞ்சி உடைய பெரியப்பா மகள தான், இவங்க மாமா காதலிக்கறாரு. இவங்க இரண்டுப்பேரும் சேர்ந்ததுக்கு கதாநாயகன் தான் காரணம் பிரிஞ்சுப்போனதுக்கும் அவன்தான் காரணம். 
 
அப்பா, தன்னை கண்டிப்பாரு, பயந்தான். பரீச்சையில  fail ஆன நேரத்துல வீட்டுல ஒரு பெரிய சண்டையாகுது. அப்போ அவங்க அம்மா வீட்ட விட்டு அண்ணா வீட்டுக்கு போயிடுறாங்க. அதுதான் சாக்குனு அப்பாட அடி வாங்காம தப்பிக்கறான் மகன். 
 
அப்பாவையும் அம்மாவையும் சேர விடக்கூடாது. சேர விட்டால் எனக்கு அடிதான் விழும் என்று நினைக்கறான். கணவன பிரிஞ்சு இருக்க முடியல மனைவிக்கு, ஒரு வீட்டு அம்மா இல்லாம இளைய குழந்தையும் கணவனும் படற கஷ்டம் பயங்கரம். 
 
ஒரு கட்டத்துல அப்பாகற உறவு எவ்வளவு முக்கியம் அத கொளஞ்சி புரிஞ்சுக்கறான். தான் எவ்வளவு தன் மகன அடிச்சாலும் புடிச்சாலும் ஊருல ஒருத்தன், (இவங்க பிரிஞ்சு இருக்காங்க இதான் சாக்குனு கொளஞ்சி)அடிக்க வரான். அப்போ அப்பா, "ஆயிரம் இருந்தாலும் இவ என் மகன்" மகனுக்காக அடி வாங்கறாரு ஊர்காரன அடிக்கறாரு. அதுல அடி பட்டு மயங்கறாரு. இதல்லாம்  அம்மா புரிஞ்சுப்பாங்கனு நினைச்சு, ஓடி வந்து சொல்லும்போது, அம்மா "நீ எனக்கு புள்ளே இல்ல" இவர இப்படி பண்ணிட்டையேனு தள்ளி விடறாங்க. அப்போ தான் புரியுது சூழ்நிலை சந்தர்ப்பம் தான் ஒருத்தர வேற வேற மாதிரி நிலையில காட்டுதுனு. 
 
அப்பா குணமாகி வரும்போது, குற்ற உணர்ச்சியில துடிச்சுப்போறான். ஆனால், அப்பா பக்கத்துல வந்து நீ இன்னொருத்தன்ட அடி வாங்க கூடாதுதான் அப்பா உன்ன அடிக்கறேன் என்று சொல்லி மகன் கொளஞ்சி யை கட்டி அணைக்கறாரு. 
 
13 வயதை தொட ஒவ்வொரு  குழந்தைக்கும் அப்பா ஒரு எமன் மாதிரி தான் தெரிவாரு. ஆனால், அவருதான் பிரம்மன் அப்படினு புரியும்போது சிலநேரத்துல தான் அந்த உறவு இருக்கும். சில நேரத்துல இல்லாத போதுதான் அப்பாவுடைய அருமையே புரியும் என்று படம் முடியுது. 
 
இதுல சமுத்திரக்கனி அவர்கள் அப்பாசாமி என்கிற பெயரில் கொளஞ்சிக்கு அப்பாவாக இருக்கறாரு. அவருக்கு உள்ள குணநலன்கள் மற்றும் கோபதாபங்கள் எல்லாம் அவருக்கென்றே எழுதப்பட்டுதாக இருக்கு. 
 
அப்பாவ பிடிக்குதோ இல்லையோ, அப்பாவுடைய சாயல் மற்றும் எண்ணம் அனைத்தும் மகன் மனதில் கண்டிப்பாக பதியும் அதுதான் அவன வளர்க்கும்.
 
 எங்க அப்பா சொல்லிருக்காருனு வாழ்க்கையில ஒரு முறையாவது மகன் சொல்லுவான். கூடவே இந்த ஆளு உயிர எடுக்கறாருனும் ஒரு முறையாவது சொல்லுவான் மகன். அதுபோல அந்த ஆளு இருந்திருந்தால் எனக்கு இப்படியொரு பிரச்சனையே வந்திருக்காது அப்படினும் ஒரு முறையாவது மகன் சொல்லுவான். அது தான் ஒரு நல்ல அப்பாவின் வெற்றி. 
 
மகனை பெற்ற அப்பாவும், அப்பாவை நேசிக்காத மகனும் பார்க்க வேண்டிய படம். 
 
Geetha Pandian.
Published in Reviews
Saturday, 08 February 2020 16:27

ஏமாற்றிய ஹீரோ ...

நல்லத நல்லாவே படத்துல விதைக்கறாங்க. 
 
ஹீரோ என்று சொல்லும் பாடல் மட்டுமே முழு கதையில் Hero vizhum காட்டுகிறது
 
சமீபத்துல நடிகர் அர்ஜீன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான Hero திரைப்படம் மக்கள் மத்தியில் பெருமளவில் சென்று சேரவில்லை. மையக்கருவை குறைச்சொல்ல முடியாது. ஆனால் அந்த மையத்தைச் சொல்ல வந்த விதம் ஏமாற்றத்தை அளித்தது.
 
குழந்தைகள் இடத்தில் நல்லதையும் கெட்டதையும் சேர்த்து இறக்கினால் அதிகம் சென்று சேர்வது கெட்டது தான். உதாரணத்திற்கு, சக்தி எனும் 12 வயது பையனுக்கு சக்திமான் பிடித்தது. அவன் தன்னையும் ஒரு ஹீரோவாக நினைச்சான். ஆனால் அதற்கு அவன் செய்த முட்டாள் தனம், மாட்டியிலிருந்து பறக்க முயன்று கீழே விழுந்தது. ஒரு அடிப்படை சிந்தனை கூட அந்த பதிரெண்டு வயது பையனுக்கு இல்லாமல் போன மாதிரி இருக்கு.
 
அடுத்து, அப்பாவிற்கு உடல்நலம் சரியில்ல. காப்பாற்றுவது கஷ்டம்.  சான்றிதழை இந்த மாதிரி மாற்றி கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று இதைப் பற்றி தெரியாத பலருக்கு தெரியப்படுக்கின்றனர். 
என்னதான் வசதியில்லாமல் இருந்தாலும் உதவ முன்வரும் அளவிற்கு ஒரு உறவு கூடவா இல்லை. 
 
ஒரு வேளை பெயர் மாற்றி சான்றிதழ் விற்கப்பட்டது. ஆனால் அந்த மார்க் சீட்டில் போட்டோ போடாமலா? அரசாங்கம் ஒரு மாணவனுக்கு மார்க் சீட் கொடுத்தது. இந்த காட்சிக்கு முன்பு தான் மார்க் வந்த விவரம் தெரிந்து Result பார்க்க சென்றனர். அடுத்த காட்சியிலே சான்றிதழில் பெயர் மாற்றம் இது நம்புவதாக இல்லை. ஏன் என்றால் Result வந்து மார்க் சீட் வர ஒரு மாதமாவது ஆகும். 
 
சான்றிதழ் விற்று வந்த பணத்தில், அப்பாவை காப்பாற்றியது, எதோ பரவால. மாவட்ட அளவில் 12 ம் வகுப்பில் மார்க் எடுத்தவனை டிவி, நீயூஸ் பேப்பர் எதுவும் எப்படி கவனிக்காமல் போனது. கஷ்டப்பட்டு படிச்சு, கஷ்டப்பட்டு எடுத்த மார்க் இதற்கெல்லாம் ஒரு அங்கீகாரம் இல்லாமல் போன வருத்தம் இருந்தப்போதிலும் அதே வேலையே செய்யவும் இறங்கிட்டான் சக்தி அது ஒரு தவறான முன் உதாரணம்.
 
மதி எனும் பெண் aeronautical engineering படிக்க ஆசை படுகிறாள். ஆசைகள் நல்ல விஷயம் தான். மதிப்பெண்ணுக்கும் திறமைக்கும் சமந்தம் இல்லதான். ஆனால் +2ல  1200 க்கு 256 மதிப்பெண்  மட்டுமே எடுத்தப் பெண்ணுக்கு aeronautical engineering படிப்பதற்கு  eligibility யே கிடையாது. அப்பறம் எப்படி சீட் கிடைக்கும். இதுவே மிக பெரிய லாஜிக் மிஸ்கேட்.
 
நம்ப ஹீரோக்கு  டாஸ்கே பணம் தராம 
நேர்மையாக சீட்டு வாங்கனும் என்பதுதான், அதற்கு முயற்சிக்கும்போது, வர பிரச்சனையில்...
 
 கோர்ட்டில் (மைனர்) 17 வயது கூட நிரம்பாத 12 ம் வகுப்பு படித்த பெண்ணை நிறுத்தி வைச்சி கல்லூரி மாணவரை கேக்க வேண்டி கேள்விகளை கேட்பது முட்டாள்தனமா இருக்கு. 
 
செய்முறை என்பது ஒன்றே, அதனை பார்த்து கூட மற்றொன்று அதே மாதிரி செய்வது அறிவு திருட்டு என்று அர்த்தம் ஆகாது. அப்படியே ஒரு செய்முறையில் செய்தாலும் அதற்கும் இதற்கும் உள்ள வேறுப்பாட்டை கூட அறிவியலில் அனுமதிக்கலாம். இன்று ஒன்றை விட ஒன்று அதிசியம் என்றும், புதுமை என்றும், சொல்லும் அத்தனை ஆராய்ச்சிக்குமே வித்தியாசம் ஒரு சதவீதம் தான். இதனை Researcher Perspective என்றும் சொல்லலாம்.
 
ஏன்யென்றால் கல்லூரி படிப்பு இல்லாம Basic Knowledge வைச்சும்,  இதற்கு முன்பு யாராவது இதே மாதிரி பண்ணிருக்காங்களானு தெரியாம இருப்பவர்கள், ஒரு பொருளை உருவாக்குவதுதான் நேர்மையான முறை. இந்த மாதிரி காட்சி பொருந்தா வண்ணம் உள்ளது.
 
அந்த பொன்னு மதியைப் பற்றிய விவரங்களை போனில் பேசும்போது வண்டியில் பயணம் செய்துக்கொண்டியிருந்த சக்தி, கோர்ட்டிலிருந்து மதியை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது  ஏன் ரயிலில் செல்லுமாறு காட்சி வைக்கப்பட்டது. 
 
ஓடும் ரயிலிலிருந்து கீழ விழுகிற மாதிரி காட்சி வைப்பதுக்காவே..தற்கொலை செய்ய தூண்டும் காட்சி இது. இதனை படத்தில் வைத்தது தவறான முன் உதாரணம். அந்த பெண் மதி ஸ்டேஷ்னுக்கும் கோர்ட்டுக்கும் அழையும்போது அவளுடைய பெற்றோருக்கு ஏன் தகவல் சொல்லல. கோட்டில் பெற்றோரை பற்றி ஏன் விசாரிக்கல. 
 
ஒரு சின்ன பொண்ணுக்கு எதிராக பேசும் வக்கில், அடிப்பட்டு சாகும் நிலைமையில் வந்த நோயாளியை திரும்பி அனுப்பிய தனியார் மருத்துவமனை, பொறுப்பில்லாம பேசிய அரசாங்க ஆம்பன்ஸ் டிரைவர், கோர்ட்டில் சக்தி, இன்பராஜ் கைதி செய்யனும் என்று சொன்ன பிறகும் அதுக்கு உண்டான பிற நடவடிக்கை எடுக்காமல் போன போலீஸ். மாஸ்டர் என்ற பெயரில் மாஸ்க் போட்ட திருடனைப் பற்றிய விவரத்துடன் இரண்டாம் கட்டத்திற்கு கதை வேற மாதிரி நகருது.
 
உண்மையான இளமை ஏழை எளிய விஞ்ஞானிகளை Corporate system வளர விட மாட்டைங்கது என்று கொஞ்சம் கற்பனை நயத்துடன், Education system சரியில்ல,  அரசியல்வாதிகள் corporate க்குதான் சப்போர்ட் பண்ணறாங்க என்று குறைச்சொல்லுமாறு காட்சிகள் வடிவமைக்கப்பட்டது. 
 
இளம் விஞ்ஞானிகள் நான்கு பேரை வைத்துக்கொண்டு ஒரு சூப்பர் ஹீரோவை எப்படி உருவாக்குவது என்று கற்று தருகிறது கதை களம். யாரெல்லாம் ஹீரோ என்று சொல்லும் பாடல் மட்டுமே முழு கதையில் Hero vizhum காட்டுகிறது. 
 
கதையில் முன் பகுதியில் தவறு செய்தவரை அடித்து தட்டிக்கேக்கும் ஹீரோ, இளம் விஞ்ஞானிகளின் idea வை   அழிப்பதையே வேலையாக இருப்பவனை ஹீரோ எப்படி அழிக்கறாரு. 
 
பொது மக்கள் இடத்தில் "பெற்றோர்களே உங்க வீட்டுக்குழந்தைங்க  ரப் ரோட்டு எடுத்துப்பார்ங்க அவங்க என்னவாகனும் ஆசைப்படறாங்களோ அதை செய்ங்க" சொல்லுவது கதையின் மையக்கருத்து. 
 
இங்க இரண்டாம் கட்டத்தில் நிறையா லாஜிக் மிஸ்டேக் இருக்கு. ஹீரோ என்று ஒருவரை உருவாக்குவது லாஜிக்காவே இல்ல. எந்திரன் மாதிரியான படத்தில் எந்திரனுக்கு ஒரு தனித்துவம் இருக்கு. ஆனால் சாதாரணமான படத்தில் ஹீரோ என்று ஒரு சாதாரண மனிதனை அனைத்து வளங்களையும் வலிமையும் கொண்டவாக மாற்றுவது எதார்த்ததில் சாத்தியம் இல்ல. 
 
அப்படி பார்த்தால் முழுக்க முழுக்க "சக்திமான்" என்ற கற்பனை கதாபாத்திரத்தை அப்படியே உதாரணமா எடுத்திருக்காங்க. ஆனால் சக்திமான் துணி மட்டும்தான் மாற்றுவாரு மீதி எல்லாமே அவங்க உடலில் உள்ள சக்தி. இந்த சக்திக்கு எல்லாமே இளம் விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்பு.
 
இவங்கள் பயன்படுத்தும் Technical instrument and laptop போன்ற  பொருள்கள் வில்லனால் அழிய அழிய திரும்ப திரும்ப எங்கிலிருந்து கிடைக்குது. பணம் எங்கிலிருந்து வருது. அப்படி அரசாங்க கன்டைனர், ஹீரோவால காணாம போனாலும் அரசு சும்மா இருக்குமா? 
 
தீடிரென பணமழை என்று செய்தி வெளியீடு செய்பவருக்கு அது என்ன பணம் என்று தெரியாமல் போகிடுமா? அது என்ன பணம் என்று தெரியாத செய்தியாளருக்கள் வானத்தில் இருந்து கொட்டும் பணம் எவ்வளவு இருக்கும் என்று எப்படி சொல்லறாங்க. 
 
இதை எல்லாம் விட, செயற்கைகோள் தயார் செய்து வானில் அனுப்பவதற்கு NASA போன்ற விண்வெளி ஆராய்ச்சிக்கூடங்கள் நூற்றுக்
கணக்கான பேரை பயன்படுத்தி பல வருடங்கள் எடுக்கும் சூழ்நிலையில், 
நாலு பசங்க சேர்ந்து செயற்கோளை(satellite) ஒரு சில நாளுல அனுப்புவது எப்படி சாத்தியம் இது எதார்த்ததிற்கு எதிர்மறையான லாஜிக்.
 
 மேலும் எல்லா சேனல் களிலும் ஒரே Live Program எப்படி சாத்தியம். மற்ற தொலைக்காட்சிகள் எப்படி அமைதியாக இருந்தது. டிவி சேனல்களில் சிறிது நேரம் சிகுனல் இல்லைனா கூட பல ஏற்பாடுகள் பறக்கும். ஆனால் இப்படியொரு நிகழ்வ பார்த்திட்டு,  அவர்களும் அமைதியாக இருந்திருக்காங்க போல. 
 
இதையெல்லாம் தாண்டி, சக்தியுடைய அப்பாவை காப்பாற்றிய பின்னாடி Climax ல மட்டும் வாராரு. நடுவுல பையன காணாம், அப்பா என்ன பண்ணுவாருனு ஒரு காட்சி கூட இல்ல. ஹீரோ படத்தின் கதாநாயகி ஒரு இரண்டு பாட்டுயோட  நல்ல கேரக்டர் ரோல் பண்ணிருக்காங்க. அர்ஜீன் வந்த வரைக்கும் மாஸ்தான். நடுவுல செத்துப்போயிடாருனு நினைச்சால் திரும்ப வந்திட்டாரு. தேவையே இல்லாம அரஸ்ட் பண்ணற மாதிரி வந்து போலீஸ் கூட்டுட்டு போகுது, போர வழியெல்லாம் இளம் ஏழை எளிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகள் கடைசியா "இந்த ஹீரோ இருக்கனும். ஹீரோ இருக்கனுனா ஜென்டில்மேனும் இருக்கனுமில்ல" போலீஸ் கிளம்புது.
போலீஸ் விட்ட இடத்துல இருந்து ஹீரோ எப்படி போயிருப்பாரு. 
 
நாடு முழுக்க இருக்கற விஞ்ஞானிகளை அடையாளம் கண்டுப்பிடிச்சு இறுதிக்காட்சியில காட்டறாங்க. 
மற்றபடி நல்லத நல்லாவே படத்துல விதைக்கறாங்க. 
 
Geetha Pandian
 
 
Published in Reviews