Log in

Register



வீட்டுக்கு வரும் ஆண்களை ஏளானம் செய்யும் தாய் வழி சமூகத்தின் ஆணவத்தையும், சொத்து இருக்கற திமிரையும், சாதி வெறியையும், வர்க்க பிரிச்சனையும் வீட்டுக்கு வந்த மருமகள் எடுத்து எறிய வேண்டும் என்ற ஒரு மையக்கருவில் இரண்டு கதைகள். 
 
ஒரு தாய் வழி சமூகத்தில் உள்ள சொத்துக்கள் நிறைந்த அதிகாரத்தோடு அகங்காரம் இருக்கற மாமியார். வீட்டோட மாப்பிள்ளையாக வரும் ஒரு ஆண்யை எவ்வளவு கீழ் தனமாக நடத்துக்கிறார்கள் என்பதை 20 வருடத்திற்கு முன்னாலும் பின்னாலும் உள்ள தலைமுறைகள் இடைவெளி(Generation Gap) யுடன் காட்டியுள்ளனர். இதுவே வீட்டுக்கு வந்த மருமகளின் மையக்கரு. 
 
அப்படிப்பட்டயொரு மாமியார் வருங்காலத்தில் பாட்டியாகயாகும்போது, தன்னோட பேரன் வழியில் வரும் மருமகள். 20 வருட இடைவெளியில் பாட்டியால் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரிச்செய்து அகங்காரம் இல்லாமல் குடும்பத்தை எப்படி மாற்றியமைக்கிறாள் மருமகள்.
 
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது என்ற படத்தின் மையக்கருக்கூட தாய்வழி சமூகத்தில் பிறக்கும் பெண் வாரிசுகளுக்கு கணவனாக வரும் ஆண்களை வேலைக்காரனை விட மோசமாக நடத்தறாங்க என்பதே ...
 
அப்படிப்பட்ட ஒரு பெண் தாய்மை அடையும்போது, தனக்கு பிறந்த ஆண் வாரிசையையும் பண ஆதிக்கமும் திருமியும் நிறைந்த தன் குடும்ப இன்னொரு பெண் வாரிசுக்கு திருமணச்செய்து தர நினைக்கும்போது, 'என்னைப் போல தன் மகனும் கேவல பட கூடாது' என்பதற்காக மீனவர் குப்பத்து சமுதாயத்தில் ஒரு பெண்ணை பணக்காரங்க என்று நாடகமாடி கல்யாணம் செய்து வைக்கிறார் மாமனார். மாமியாரின் பண திமிரை அடக்கி ஆண்களை மதிக்கனும் அதுலையும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று மாமியாரை நினைக்க வைக்கும் மருமகள். 
 
வீட்டுக்கு வந்த மருமகள் படத்தில் பணக்கார பெண், சாதாரண சேரி பெண் போற் வந்து அகங்காரம் நிறைந்த பாட்டிக்கும், நாத்தனாருக்கும் படம் கற்பிப்பாள்.
 
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது படத்தில் மீனவர் சமுதாயத்து பெண் பணக்காரர்கள் போல நடித்து கல்யாணம் செய்து, மாமியாருடைய தவறை கூட இருந்தே குத்தி காட்டுவாள்.
 
வீட்டுக்கு வந்த மருமகள் படத்தில், கடைசி இருபது நிமிடத்தில் மருமகளால் நடக்கும் சில மாற்றங்கள், கணவனை மதிக்காத மனைவியை திருத்துக்கிறாள். ஏழை குடும்பத்து மாப்பிள்ளையாக இருந்தாலும் அவன் ஒரு ஆம்பளை என்ற ரோஷத்தில் பிரிந்திருக்கும் கணவன் மனைவியைச் சேர்த்து வைக்கிறாள். கூடவே, காதலிக்கும்போது இருக்கும் ஆணின் கல்யாணத்துக்கு அப்பறம் வருந்தும் பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தியிருப்பர். 20 வருடத்திற்கு முன்னர் வாழ்க்கையை தொலைத்து விட்டு தன் குழந்தைகளை தன்னால் வளர்க்க முடியாமல் போன வருத்தத்தில் இருந்த பாட்டியின் மாப்பிள்ளையை அவரோட குடும்பத்தோடு சேர்த்து வைக்கிறாள். 
 
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது படத்தில், தான் பணக்காரி இல்ல,  ஒரு மீனவ சமுதாயத்தை சேர்ந்தவள் என்ற உண்மை இடைவெளிக்கு பின் தெரியவருகிறது. இத்தனை காலம் பணக்கார மருமகளை கையில் வைத்து தாங்கிய மாமியார். இப்போது அசிங்கப்படுத்துக்கிறாள். இந்த இடத்தில் வர்க்க பிரச்சனை வருகிறது. இதனை முறியடித்து மாமனாருக்கு தைரியத்தை கொடுத்து வீட்டை விட்டு வெளியேற செய்து, சொத்துபத்து இல்லாத தனி மரமாக மாத்தி மாமியாரை, அவரோட கணவனின் காலில் வந்து விழ செய்கிறாள். 
 
வீட்டுக்கு வந்த மருமகளில், ஆணவக்குடும்பத்தில் பிறக்கும் ஆண்(பேரன்) ரவிசந்தர் தன் காதலிடம் புலம்பி அவன் செய்ய முடியாததை அவனுக்கு மனைவியாக வரப்போகும் அந்த வீட்டின் மருமகள் செய்துக்காட்டுகிறாள். 
 
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது, இதில் பாண்டியராஜனுக்கு ஏழை மனைவிகறது பிரச்சனை இல்ல. அவங்க அம்மாவோட கொட்டத அடக்க அவன் ஒரு நாளும் மனைவியிடம் சொன்னதுமில்ல. அவனோட பிரச்சனை முதல் இரவு எப்போ நடக்கும் அது எப்படி நடக்கும் என்பதாகவே இருந்தது. ஆனால் மருமகளாக வந்த meenachi  கதாபாத்திரம் மாமியாரின் கொட்டதை அடக்குகிறாள். 
 
இரண்டு படங்களிலும் பல முன்னனி நடிகர்கள் நடித்த, இந்த படத்தை நீங்க பார்த்தால் சின்ன சின்ன நுணுக்களும், நகைச்சுவையும் கருத்துக்களும் நல்ல பொழுதுப்போக்காகவும் இருக்கும். எடிட்டிங் கவனம் செலுத்திருக்கலாம். திரைக்கதை பரவாலை. மைக்கரு அன்றைய பிரச்சனை என்று தான் சொல்லனும். நடிகர்கள் தேர்வு சிறப்பு. 
 
-கீதாபாண்டியன்
 
 
 
Published in Classic Movies