Log in

Register



Rate this item
(0 votes)
Modern Love கொரோனாவின் முதல் அச்சுறுத்தலின் போது பார்க்க ஆரம்பித்தேன். முதல் எபிசோட் பார்த்தது 2020 அக்டோபராக இருக்கலாம். ஹேர்கட் செய்யாமல் தாடியும் மீசையுமாக வீட்டுக்குள் அடைந்திருந்தபோது வசனகர்த்தா முருகேஷ்பாபு தலைமையில் ஒரு ரைட்டர்ஸ் ரூம் ஆரம்பித்தோம். தினமும் கூகுள் மீட்டில் இரவு நேர சந்திப்பு. அந்த சந்திப்பின் வழியாக ஒரு திரைக்கதையே எழுதி முடித்துவிட்டோம். கதை எங்காவது நகராமல் நிற்கும்போது சொந்தக்கதைகள், ஓடிடியில் பார்த்த கதைகள் என பேச்சு…
Rate this item
(0 votes)
சேட்டன்களின் தேசத்திலிருந்து கைலி கட்டிக் கொண்டு ஒரு சூப்பர் ஹீரோ வந்திருக்கிறான். மொபைல் போன் இல்லாத காலத்தில், ஏதோ ஒரு கேரள கிராமத்தில் இந்தக் கதை நடக்கிறது. அமெரிக்க ஆசையில் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்துவிட்டு இன்ஸ்பெக்டர் மகளை காதலிக்கும் உள்ளுர் டெய்லர் ஜெய்சன்தான் ஹீரோ. பள்ளிக்கூடத்தில் காதலித்த பெண்ணுக்காக 28 வருடமாக காத்திருக்கும் டீ மாஸ்டர் சிபுதான் வில்லன். இருவரையும் ஒரு நள்ளிரவில் மின்னல் தாக்கி சூப்பர் மேனாக்குகிறது. ஆனால்…
Rate this item
(0 votes)
ரொமான்டிக்காக ஒரு காமெடி பார்க்க வேண்டுமென்றால் Decoupled பார்க்கலாம். ராதாமோகன்தனமான ஒரு கேட்டட் கம்யூனிட்டி, ஜொள்ளு அங்கிள், பத்துப்பதினைந்து சின்னப்பசங்க மற்றும் ஸ்கூல் பசங்க. அங்கு வசிக்கிற இப்போதே பிரிந்துவிடலாம் என்று முடிவெடுக்கும் ஒரு இளம் கணவன் மனைவி. கிட்டத்தட்ட யுடியூபர்களின் சீரியல் செட்டப். ஆனால் மாதவனும், சர்வீன் சாவ்லாவும் இதைப் பார்க்க வைக்கிறார்கள். இருவரும் வொயிட் ஒயின் போல நமக்குள் இறங்குகிறார்கள். முப்பது சொச்ச நிமிடங்களுக்கு ஒரு எபிசோட்.…
Rate this item
(0 votes)
கமல் சண்டைக்காட்சிகளிலும் சகலகலா வல்லவன்தான். அதனால் அவர் கௌதம் மேனனுடன் இணைந்தபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல ஒரு மாஸ் சண்டைக்காட்சியும் வேட்டையாடு விளையாடு படத்தில் அமைந்தது. விசில் பறந்த அந்த சண்டைக்காட்சியை இங்கு கிளிக் செய்து பாருங்கள்
Rate this item
(1 Vote)
நடிகர் மாதவன் விளையாட்டுத்தனமான, ஸ்மார்ட்டான, இளம் காதலனாக அத்தனை பேர் உள்ளங்களையும் தன் முதல் படத்திலேயே கவர்ந்தார். ஆனால் "நான் ஹீரோ டா" என்று மாஸ் கதாநாயகனாக அவர் அதகளம் செய்த படம் "ரன்". சில நடிகர்களுக்கு மட்டும்தான் ”நான் ஹீரோடா” என்று விசுவரூபம் எடுக்கும் காட்சிகள் அமையும். மாதவனுக்கு அது அமைந்தது. இந்த லிங்கை கிளிக் செய்து அந்த விறுவிறுப்பான நான் ஹீரோடா காட்சியை பாருங்க. - ஆனந்தி
Rate this item
(0 votes)
ஒளிப்பதிவு இயக்குநர் பொன்.காசி ராஜனின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங் மற்றும் வாட்சப்பில் வித்தியாசமாகக் கொண்டாடினார்கள். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தனக்கென ஒரு வீடியோ கான்ஃபரன்ஸ் அறையை உருவாக்கியுள்ளது. அதற்கு ISR Tick Talk என்று பெயர். இந்த லாக்டவுன் காலத்தில் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அந்த வீடியோ அறையில் சந்தித்து வருகிறார்கள். அது சாதாரண சந்திப்பாக மட்டுமில்லாமல் ஒரு கதை விவாதக் குழுவாகவும் உருவாகியுள்ளது. இந்நிலையில்…
Page 2 of 31