Log in

Register



Tuesday, 18 August 2020 06:09

தேடாதே தொலைந்துப்போவாய்

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
சமுத்திரக்கனி சமுத்திரக்கனி SERIAL
கே. பாலசந்தர் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய சீரியல். "தேடாதே தொலைந்துப்போவாய்". இது எனக்கு பார்க்கையில் ரொம்ப பிடித்திருந்தது. ஒரு அல்டிமெட்டான ஒரு பவர்ப்பில் திரைக்கதை. 
 
பொதுவாக,  எந்தொரு படைப்பாயினும், அதனை எந்த காலத்திற்கு பார்க்கும்போது பொருந்தக்கூடாதாக இருக்கனும் சொல்லுவாங்க. அந்த மாதிரி  இந்த தேடாதே தொலைந்துப்போவாய் தொடரும் கிட்டதட்ட அப்படிதான். 
 
இன்றைய காலகட்டத்தின் "விசாரணை" அளவிற்கு அந்த தொடரின் திரைக்கதை இருந்திருக்கிறது. கதாபாத்திர வடிவமைப்பில் நல்ல அழுத்தம் தெரிகிறது. வெங்கட் பிரபுவின் வெகுளிதனமான நடிப்பில் பார்வையாளர்களின் மனதை கொல்லைக்கொண்டு இருக்கிறார். "ரகு" காதாபாத்திரம், ஒரு அபூர்வமானது ஏன்னெனில் இன்னிக்கு, அப்படியொரு நம்பக தன்மையான ஒருவனை உருவாக்கி, மக்களை நம்ப வைப்பது கடினமான ஒன்று. 
 
மேலும், காதலியாக ஐஸ்வர்யா பண்ணிருக்காங்க. திரைக்கதையில் கதை ஒருவரின் மீது பயணிக்கனும் என்பதில் தெளிவாக இருந்தாலோ, என்னவோ ஒரு சிறிய அளவிலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பினும் சிறந்த கதைகளத்தை உருவாக்கியுள்ளது இந்த கதாபாத்திரம்.
 
பூவிலங்கு மோகன், எந்த காலகட்டத்திலும் ஒரு சிறந்த நடிகர், கதாபாத்திரத்திற்குள்ளே இறங்கி நடிக்கக்கூடியவர். அவருக்கு நல்ல தீணிப்போட்ட பாத்திரம். 
 
இப்படி முக்கியமான ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கென ஒரு தனிதன்மையுடன், அடுத்து என்னவாகுமென்ற விறுவிறுப்புடன் வெளியாகிய ஒரு சிறந்த சீரியல். சத்திரமா சொல்லறேன், இன்னிக்கு இருக்கற எந்த சீரியலும் இப்படியொரு வடிவமைப்பை மையப்படுத்தி வருவதில்லை. 
 
அந்த வகையில், சமுத்திரக்கனியின் இந்த சீரியலை நீங்களும் பார்த்திருப்பீங்க. பார்க்கவில்லை
யென்றால் போயி பார்ங்க. 
 
உயிருக்கு உயிராக காதலித்த திருமணம் செய்த மனைவி, கணவனுக்கும் மனைவிக்கும் மிக பெரிய சண்டை ஒவ்வொரு நாளும் வரும், தனக்கு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்த நண்பன். ஒரு கட்டத்தில் மனைவியை கொன்று விட்டனர், கொன்றது யார் என்ற விசாரணையே "தேடாதே தொலைந்துப்போவாய்"
 
எப்படி தன் மனைவி இறக்கிறாள் என்று, தேட தேட அவனைச்சுற்றி இருப்பவர்களின் உண்மைதன்மை தெரியவந்து, தொலைந்துப்போயி விடுவான். இது உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லப்படும் ஆழ்மான ஒரு அறிவுரையே இந்த சீரியல். இதனை இன்றளவும் தனது படங்களில் வழியே காட்டுக்கிறார் சமுத்திரக்கனி. 10 எபிசோடுகளின் புரிதல் நமது வாழ்க்கையும் திருப்பிப்போடும். 
 
-கீதாபாண்டியன் #Geethapandian
Read 17 times
Login to post comments

Calendar

« September 2020 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30